Advertisement
சைவம்

சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி ? வாருங்கள் பார்க்கலாம்…

Advertisement

இன்றைய தினம் நீங்கள் ருசிக்காக மட்டும் ஏதாவது குழம்பு வைக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் கண்டிப்பாக சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பை செய்து பாருங்கள். மேலும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பை நீங்கள் எளிமையாக அடிக்கடி செய்து சாப்பிடலம். மாதத்திற்கு ஒரு முறை வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த குழம்பு செய்து கொடுங்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவருக்கும் பிடித்த ருசிகரமான குழம்பாக கண்டிப்பாக இருக்கும். நீங்கள் கத்திரிகாயே சைடிஸ் ஆக சாப்பிட்டு இருப்பீர்கள் இன்று அந்த சைடிஸ்யை எப்படி குழம்பாக மாற்றுவது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம் வாருங்கள்.

சுவையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

Print Recipe
இன்றைய தினம் நீங்கள் ருசிக்காக மட்டும் ஏதாவது குழம்பு வைக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் கண்டிப்பாக சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பை செய்து பாருங்கள். மேலும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பை நீங்கள் எளிமையாக அடிக்கடி செய்து சாப்பிடலம். மாதத்திற்கு ஒரு முறை வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த குழம்பு செய்து கொடுங்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவருக்கும் பிடித்த ருசிகரமான குழம்பாக கண்டிப்பாக இருக்கும். நீங்கள் கத்திரிகாயே சைடிஸ் ஆக சாப்பிட்டு இருப்பீர்கள் இன்று அந்த சைடிஸ்யை எப்படி குழம்பாக மாற்றுவது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம் வாருங்கள்.
Course Kulambu, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword KATHARIKKAI KULAMBU, எண்ணெய் கத்திக்காய் குழம்பு
Prep Time 10 minutes
Cook Time 30 minutes
Total Time 40 minutes
Servings 4 PERSON
Calories 25

Equipment

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 பவுள்

Ingredients

  • 7 கத்திரிக்காய்
  • 20 சின்னவெங்காயம்
  • 2 தக்காளி
  • தேங்காய் துருவியது சிறிதளவு
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி சோம்பு
  • 7 பல் பூண்டு
  • மிளகு சிறிது
  • தேவையான அளவு கடுகு தாளிக்க
  • தேவையான அளவு வெந்தயம் தாளிக்க
  • ½ கப் புளி கரைத்த தண்ணீர்
  • உப்பு தேவையான அளவு
  • ½ TBSP மிளகாய் தூள்
  • ½ TBSP மல்லி தூள்
  • 4 குழிக்கரண்டி நல்லெண்ணெய்
  • மஞ்சள் தூள் சிறிது

Instructions

  • முதலில் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு நல்லெண்ணையை ஊற்றிக் கொள்ளுங்கள் எண்ணெய் சூடு ஏறியவுடன் அதில் மிளகு, சீரகம், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் பூண்டு, தக்காளி, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் அதன் பின் தக்காளி மென்மையாக வரும் வரை வதக்கி கொள்ளுங்கள்.
    Advertisement
  • அதன்பின் இதனுடன் திருவிய தேங்காயை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். இப்போது கடாயை கீழ இறக்கி சூடு குறையும் வரை காத்திருக்கவும். சுடு குறைந்தவுடன் வதக்கி எடுத்த பொருட்களை எல்லாம் மிக்ஸியில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
  • மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு நல்லெண்யை உற்றி கத்திரிக்காயை சேர்க்கவும். கத்தரிக்காய் தோல் சுருங்கி வரும் வரை வதக்கி கொள்ளுங்கள் அதுதான் பக்குவம் பின் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அதன் பின் சிறிது அளவு நல்லெண்யை உற்றி கடுகு, சீரகம், வெந்தயம், மிளகு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதன்பின் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும் வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
  • அதன் பிறகு தேவையான உப்பு, மஞ்சள்தூள், காரத்துக்கு ஏற்ப மிளகாய் தூள், மல்லி தூள் போட்டு பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள் என் அதனோடு நாம் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • பின்னர் நன்றாக கொதிக்க விடுங்கள் அதன் பின்பு கொதித்துவந்தவுடன் வதக்கி வைத்திருக்கும் கத்திரிக்காயை சேர்த்து மூடி வைத்து விடுங்கள்.
  • குழம்பும் எண்னையும் பிரிந்து வரும் நிலையில் கடாயை இறக்கி வைத்து விடுங்கள் இப்போது சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Calories: 25kcal | Carbohydrates: 6g | Protein: 1g | Sodium: 2mg | Potassium: 229mg | Sugar: 3.5g
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

5 நிமிடங்கள் ago

வீட்டில் முட்டைக்கோஸ் மற்றும் பட்டாணி உள்ளதா? அப்படியானால் அதை கொண்டு 15 நிமிடங்களில் சுவையான இந்த பட்டாணி முட்டைகோஸ் சாதம் செய்து பாருங்கள்!!

பொதுவாக முட்டைக்கோஸ் சாதம் என்றால் பலருக்கும் ஹோட்டலில் சாப்பிட தான் பிடிக்கும். ஏனென்றால் அதன் சுவையே தனி. வீட்டில் செய்தால்…

57 நிமிடங்கள் ago

2024 அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் பணம் அதிகமாக சேர்வதற்கு அதிர்ஷ்டம் உள்ள சில ராசிகள்

இந்த ஆண்டு அட்சய திருதியை மே பத்தாம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய…

2 மணி நேரங்கள் ago

2 பீட்ரூட் இருந்தால் போதும் சூப்பரான மில்க் ஷேக் இப்படி வீட்டிலே சுலபமாக செய்து பாருங்க!

பெண்களை பொறுத்த வரையில் நாள் முழுவதும் வீட்டு வேலை செய்து நிச்சயமாக அலுத்து போய் விடுவார்கள். அதற்காக  வேலைகளை செய்யாமலும்…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 06 மே 2024!

மேஷம் கடன் வாங்குவது, கடன் கொடுப்பதை தவிர்க்கவும். கடன் கேட்பவர்களுக்கு கடன் வழங்குவதற்கு முன் அவர்களின் நம்பகத்தன்மையை அறிந்திடுங்கள். உங்களின்…

5 மணி நேரங்கள் ago

ருசியான குதிரைவாலி தக்காளி தோசை இப்படி செய்து பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

உடல் எடையை குறைக்க வேண்டும். அரிசியை உணவோடு சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று நினைப்பவர்கள், ஆரோக்கியம் மிக முக்கியம் என்று நினைப்பவர்கள்,…

5 மணி நேரங்கள் ago