கருப்பு கொண்டைக்கடலை கேரள கூட்டுகறி இது போன்று செய்து பாருங்க! அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும்!

- Advertisement -

கேரளாவில் செய்யக்கூடிய  கொண்டைக்கடலை கூட்டுக்கறி ரொம்ப வே சுவையாக ருசியாகவும் இருக்கும். இது புட்டு கூட சாப்பிடும் போது அப்படி ஒரு சுவையா இருக்கும் . இந்த கூட்டு கறியை ரொம்பவே சுலபமாக வீட்ல எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்க இருக்கோம். கேரளாவுல ரொம்பவே ஸ்பெஷலான கருப்பு கொண்டை கடலை கூட்டு கறி விரும்பாதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. ரொம்பவே சுவையான இந்த கூட்டுக்கறி மேல அப்படி ஒரு ஆசை எல்லாருக்கும் இருக்கும்.

-விளம்பரம்-

அதையும் இந்த கூட்டுக்கறியோட புட்டு, ஆப்பம் இதெல்லாம் வைத்து சாப்பிடும்போது ரொம்ப வே சுவையா இருக்கும். இந்த கூட்டுக்கறியை நம்ம சாதத்தொடையும் சேர்த்து வைத்து சாப்பிடலாம் ரொம்பவே ருசியான ஒரு கூட்டுக்கறியா இருக்கும். இதுல காய்கறிகளும் கொண்டைக்கடலையும் இருக்கிறதுனால அதிக அளவு புரதச்சத்தும் நார்ச்சத்து இன்னும் நிறைய ஊட்டச்சத்துக்கள் இதுல அடங்கி இருக்கு.

- Advertisement -

இது சின்ன குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும் காரம் மட்டும் கொஞ்சம் கம்மி பண்ணி செய்து கொடுத்தா குழந்தைங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. காய்கறிகள் சாப்பிட பிடிக்காத குழந்தைகளுக்கு இந்த மாதிரி கொண்டக்கடலையோடு சேர்த்து செய்து கொடுக்கும் போது அதோட சுவை ரொம்பவே வித்தியாசமா இருக்கும். அதனால குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இந்த சுவையான கொண்டைக்கடலை கேரள கூட்டு கறி எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
4.50 from 4 votes

கருப்பு கொண்டைக்கடலை கேரள கூட்டுகறி | Kerala Black Channa Curry Recipe In Tamil

கேரளாவில் செய்யக்கூடிய  கொண்டைக்கடலை கூட்டுக்கறி ரொம்பவே சுவையாக ருசியாகவும் இருக்கும். இது புட்டு கூட சாப்பிடும் போது அப்படி ஒரு சுவையாஇருக்கும் . இந்த கூட்டு கறியை ரொம்பவே சுலபமாக வீட்ல எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கஇருக்கோம். கேரளாவுல ரொம்பவே ஸ்பெஷலான கருப்பு கொண்டை கடலை கூட்டு கறி விரும்பாதவங்கயாருமே இருக்க மாட்டாங்க. ரொம்பவே சுவையான இந்த கூட்டுக்கறி மேல அப்படி ஒரு ஆசை எல்லாருக்கும் இருக்கும். இந்த சுவையான கொண்டைக்கடலை கேரள கூட்டு கறி எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast
Cuisine: Kerala
Keyword: Kerala Black Channa Curry
Yield: 4
Calories: 200kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கொண்டைக்கடலை
  • 1/2 கப் கருணைகிழங்கு
  • 1/2 கப் வாழைக்காய்
  • 1/2 கப் பூசணிக்காய்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் உளுந்து
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் தனியா விதைகள்
  • 4 காய்ந்த மிளகாய்
  • 1 கப் தேங்காய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொண்டைக்கடலையை கழுவி சுத்தம் செய்து குக்கரில்வேக வைக்க வேண்டும்.பிறகு  கருணைக்கிழங்கு,வாழைக்காய், பூசணிக்காய் மீடியம் சைஸ் ஆக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  •  பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் கருணைக்கிழங்கு,வாழைக்காய், பூசணிக்காய் சேர்த்து  கொள்ள வேண்டும்.பிறகு அதில்  மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு,கறிவேப்பிலை காய்கள் வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்துவறுத்துக் கொள்ள வேண்டும். பின் தனியா விதைகள் ,காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
  •  பின்பு  துருவியதேங்காயை சேர்த்து நன்றாக நிறம் மாறும் வரை அனைத்து பொருட்களையும் வதக்கிக் ஆற வைத்துகொள்ள வேண்டும். வதக்கிய பொருட்கள் ஆறிய பிறகு அவைகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாகஅரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு காய்கறி வெந்து விட்டதா என்று பார்த்துவிட்டு அவற்றை கிளறிவிட்டு அதில் வேக வைத்து எடுத்துவைத்துள்ள கொண்டக்கடலையை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
     
  • பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து உப்புபோட்டு நன்றாக கலந்து விட வேண்டும். நன்றாக கொதி வந்த பிறகு கலந்து விட்டு சூடாக பரிமாறினால்சுவையான கருப்பு கொண்டை கடலை கேரள கூட்டு கறி தயார்

Nutrition

Serving: 100g | Calories: 200kcal | Carbohydrates: 67g | Protein: 13g | Sodium: 13mg | Potassium: 274mg | Fiber: 6g

இதையும் படியுங்கள் : குடைமிளகாய் சென்னா மசாலாவை ஒரு முறை இப்படி வீட்டில் செய்து பாருங்கள், அவ்வளவு!