Advertisement
சைவம்

கேரளத்து கடலை கறி இப்படித்தான் செய்யணும் ஆப்பத்தோடு, கடலை கறி அசல் கேரள உணவு சாப்பிட்ட திருப்தி உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்!

Advertisement

உங்களுக்கு கேரளா ரெசிபிக்கள் ரொம்ப பிடிக்குமா? வீட்டில் கேரளா ரெசிபிக்களை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் கேரளா ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கடலை கறியை வீட்டில் செய்து சாப்பிடுங்கள். நமது அண்டை மாநிலமான கேரளாவில் பிரபலமான காலை உணவாக பகடலை கறி உள்ளது. காலை வேளையில் நமது வீட்டில் உள்ளோருக்கு ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரு ரெசிபி செய்து கொடுக்க நினைத்தால், நீங்கள் கடலை கறியை தேர்வு செய்து கொள்ளலாம்.

இதில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். இந்த கேரளா கடலை கறி சப்பாத்தி, சாதம், பூரி, அப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

Advertisement

மேலும் இது அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். கேரளாவில் மிகவும் பிரபலாமான உணவுகளில் கடலை கறியும் ஒன்று. நாம் என்னதான் விதவிதமாக கொண்டைக்கடலையில் சமைத்தாலும் கேரளா ஸ்பெஷல் கடலை கறிதான் உலகளவில் புகழ்பெற்று விளங்குகிறது. அத்தகைய சுவைமிகுந்த கேரளா ஸ்பெஷல் கடலை கறி ரெசிபியை எப்படி எளிதாக வீட்டிலேயே சமைப்பது என்பது குறித்துப் பார்க்கலாம்.

கேரளா கடலை கறி | Kerala Kadalai curry Recipe In Tamil

Print Recipe
உங்களுக்கு கேரளா ரெசிபிக்கள் ரொம்ப பிடிக்குமா? வீட்டில் கேரளா ரெசிபிக்களை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் கேரளா ரெஸ்டாரண்ட் ஸ்டைல் கடலை கறியை வீட்டில் செய்து சாப்பிடுங்கள். நமது அண்டை மாநிலமான கேரளாவில் பிரபலமான காலை உணவாக பகடலை கறி உள்ளது. காலை வேளையில் நமது வீட்டில் உள்ளோருக்கு ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரு ரெசிபி செய்து கொடுக்க நினைத்தால், நீங்கள் கடலை கறியை தேர்வு செய்து கொள்ளலாம்.
Advertisement
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Kerala Kadalai curry
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 62

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் கொண்டைக்கடலை
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

அரைக்க

  • 6 சிறிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 3 கிராம்பு
  • 1 பட்டை
  • 1/4 கப் துருவிய தேங்காய்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • கொஞ்சம் கருவேபபிலை கொத்த மல்லி இலை பொடியாக நறுக்கியது

Instructions

  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து  எண்ணெய்விட்டு காய்ந்ததும் அதில் சின்ன வெங்காயம், பட்டை, சோம்பு, சீரகம், மிளகு கிராம்பு மற்றும் மஞ்சள் தூள் மிளகாய் தூள், மல்லித்தூள், தேங்காய் அனைத்தையும் சேர்த்து வறுக்கவும்.
     
  • வறுத்ததை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின் முதல் நாள் இரவே ஊறவிட்ட கருப்பு கொண்டை கடலையை ஏழு விசில் வரை விட்டு வேக வைக்கவும்.
  • பின்னர் ஒரு அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் சேர்தது காய்ந்தவுடன் கடுகு, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து பொரிய விட்டு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  •  வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். பிறகு இவற்றில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதன் பின்பு வேக வைத்த கடலையும் தண்ணீருடன் சேர்த்து கலந்து விட்டு கொதிக்க விடவும்.
  •  ஐந்து நிமிடம் நன்கு கொதிக்க விட்டு பிறகு கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான கேரளா கடலை கறி தயார்.
     
  • புட்டு ஆப்பம் இடியாப்பம் போன்றவற்றுக்கு பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 62kcal | Carbohydrates: 11g | Protein: 4.1g | Fat: 0.2g | Potassium: 354mg | Fiber: 3.6g | Vitamin C: 58mg | Calcium: 4.6mg | Iron: 2.1mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சாதம் இப்படி ஒரு முறை வீட்டிலயே செய்து பாருங்க!

சிலர் பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மிகவும் விருப்பமான ஒரு உணவுமுறை…

2 மணி நேரங்கள் ago

குளு குளுனு 90’Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…

6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 21 மே 2024!

மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…

13 மணி நேரங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

1 நாள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

1 நாள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 நாட்கள் ago