கேரளா ஸ்டைல் சுவையான மட்டன் ரோஸ்ட் செய்வது எப்படி ?

- Advertisement -

இந்த செய்முறை மிகவும் அடிப்படையான பொருள்களைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது. இந்த கேரளா மட்டன் ரோஸ்ட் மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் ஆகவும் இருக்கும். மட்டன் பிரியர்களுக்கு மட்டனில் எந்த ரெசிபி செய்து கொடுத்தாலும் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதையும் படியுங்கள் : சுவையான கேரளா அரிசி புட்டு செய்வது எப்படி ?

- Advertisement -

அந்த வகையில் அவர்களுக்கு ஒரு முறை இந்த மாதிரியான கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட் செய்து கொடுங்கள் அவ்வளவு அற்புதமாக இருக்கும் அவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.இந்த கேரளா மட்டன் ரோஸ்ட் தேங்காய் எண்ணெய்யில் செய்வதால் மணமும் தூக்கலாக இருக்கும். இந்த ரெசிபியை எப்படி செய்யலாம் என்பதை நாங்கள் கீழே கொடுத்துளோம் அதனை படித்து பார்த்து நீங்களும் செய்து பாருங்கள் அற்புதமான சுவையில் இருக்கும்.

Print
No ratings yet

கேரளா மட்டன் ரோஸ்ட் | Kerala Style Mutton Recipe In Tamil

இந்த செய்முறை மிகவும் அடிப்படையான பொருள்களைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது. இந்த கேரளா மட்டன் ரோஸ்ட் மிகவும் சுவையாகவும், ஸ்பைசி ஆகவும் இருக்கும். மட்டன் பிரியர்களுக்கு மட்டனில் எந்த ரெசிபி செய்து கொடுத்தாலும் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.அந்த வகையில் அவர்களுக்கு ஒரு முறை இந்த மாதரியான கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட் செய்து கொடுங்கள் அவ்வளவு அற்புதமாக இருக்கும் அவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Prep Time10 mins
Active Time30 mins
Total Time40 mins
Course: LUNCH
Cuisine: Indian, KARALA
Keyword: mutton, மட்டன்
Yield: 4 people
Calories: 97kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • ½ கிலோ மட்டன்
  • 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • கறிவேப்பிலை சிறிது
  • 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை பவுடர்

அரைப்பதற்கு:

  • 1 டேபிள் ஸ்பூன் சோம்பு
  • 5 வர மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 இஞ்சி பெரிய துண்டு
  • 6 பூண்டு பெரிய பற்கள்

செய்முறை

  • முதலில் மட்டனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து இரண்டு முறை தண்ணீர் வைத்து நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
  • பின் சுத்தம் செய்த மட்டனை ஒரு பவுளில் போட்டு, அத்துடன் உப்பு, மற்றும் மஞ்சள் தூள், சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • அடுத்து அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
  • பிறகு அரைத்த விழுதை மட்டனுடன் சேர்த்து நன்கு பிரட்டி, அதனை குக்கரில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
  • விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து அடுப்பில் வைத்து, மட்டனில் உள்ள நீர் வற்றும் வரை அடுப்பில் வேக வைக்க வேண்டும். மட்டனில் உள்ள நீரானது வற்றியதும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் மட்டனை சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்ட வேண்டும்.
  • கடைசியாக அதில் பொட்டுக்கடலை பவுடரை சேர்த்து 10 நிமிடம் பிரட்டி இறக்கினால், கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட் இனிதே ரெடி.

Nutrition

Serving: 200gram | Calories: 97kcal | Protein: 25g | Fat: 21g | Saturated Fat: 9g | Sodium: 72mg | Potassium: 310mg

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here