அசத்தலான சுவையில் ஒரு கிச்சடி சாதம் இப்படி செய்து பாருங்க! ஒரு கைப்பிடி சாதம் கூட மிஞ்சாது!

- Advertisement -

அரிசி பருப்பு வைத்து பொங்கல் செய்து கிச்சடி இருப்போம் ஆனால் இது போல கிச்சடி செய்து சாப்பிட்டு இருப்போமா? ரொம்ப சுவையாக இருக்கக்கூடிய இந்தகிச்சடி சாதம் ஆரோக்கியம் தரக்கூடியதும் ஆகும். சுலபமாக நம் வீட்டிலேயே வித்தியாசமான சுவையுடன் கூடிய இந்த ‘கிச்சடி சாதம்’ வீட்டிலேயே சுலபமாக செய்திடலாம்.

-விளம்பரம்-

ஒருமுறை இப்படி சுவையான கிச்சடி சாதம் செய்து உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறி பாருங்கள். இதன் சுவைக்கு இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு கேட்டு சாப்பிடுவார்கள். மதிய உணவாக எப்போதும் செய்யும் குழம்பு, ரசம் தவிர்த்து சற்று வித்தியாசமாகவும், ஆரோக்கியமாகவும் கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிறைந்து விடும் அளவிற்கு மிகவும் சுவையான இந்த கிச்சடி சாதம் ஒரு முறை செய்து தான் பாருங்களேன்.

- Advertisement -

இதன் சுவை சாம்பார் சாதம் போன்று அவ்வளவு சுவையாக இருக்கும். குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். பெரிய அளவில் இதனை செய்வதற்கு காய்கறிகள் எதுவும் கூடத்தேவையில்லை. வீட்டில் இருக்கும் சாதாரண காய்கறி, பொருட்களை வைத்தே இந்த அருமையான உணவை சட்டென செய்துவிட முடியும். அரிசி, பருப்பு, மசாலா சேர்த்து குக்கரில் வைத்து விசில் விட்டால் போதும் சுவையான கிச்சடி சாதம் தயாராகிவிடும்.
கிட்டத்தட்ட இது பொங்கல் செய்வது போல தான் இருக்கும். ஆனால், பொங்கல் இல்லை. பொங்கல் சுவையிலும் இது இருக்காது. அருமையான கிச்சடி சாதம் ரெசிபி உங்களுக்காக. நிஜமாவே குக்கரில் அரிசி பருப்பை வேக வைத்து விட்டால், இந்த கிச்சடியை தாளித்துக் கொட்டி தாயார் செய்து விடலாம். மணக்க மணக்க இந்த கிச்சடி சாதம் ஒருமுறை மத்திய உணவுக்கு அல்லது இரவு உணவுக்கு செய்து பாருங்க. வாங்க நேரத்தைக் கடத்தாமல் இதன் செய்முறையை பார்த்துவிடுவோம்.

Print
3.50 from 2 votes

கிச்சடி சாதம் | Kichadi Rice Recipe In Tamil

ஒரு முறை இப்படி சுவையான கிச்சடி சாதம் செய்துஉங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறி பாருங்கள். இதன் சுவைக்கு இன்னும் கொஞ்சம்வேண்டும் என்று கேட்டு கேட்டு சாப்பிடுவார்கள். மதிய உணவாக எப்போதும் செய்யும் குழம்பு,ரசம் தவிர்த்து சற்று வித்தியாசமாகவும், ஆரோக்கியமாகவும் கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறுநிறைந்து விடும் அளவிற்கு மிகவும் சுவையான இந்த கிச்சடி சாதம் ஒரு முறை செய்து தான்பாருங்களேன். இதன் சுவை சாம்பார் சாதம் போன்று அவ்வளவு சுவையாக இருக்கும். குழந்தைகளும்சரி, பெரியவர்களும் சரி அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். பெரிய அளவில் இதனைசெய்வதற்கு காய்கறிகள் எதுவும் கூடத்தேவையில்லை. வீட்டில் இருக்கும் சாதாரண காய்கறி,பொருட்களை வைத்தே இந்த அருமையான உணவை சட்டென செய்துவிட முடியும். அரிசி, பருப்பு, மசாலாசேர்த்து குக்கரில் வைத்து விசில் விட்டால் போதும் சுவையான கிச்சடி சாதம் தயாராகிவிடும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: dinner, LUNCH
Cuisine: mumbai
Keyword: Kichadi Rice
Yield: 4
Calories: 238kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் அரிசி
  • 1/2 கப் தேங்காய், பயத்தம் பருப்பு –
  • 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 3 பச்சை மிளகாய்
  • 2 தக்காளி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தேக்கரண்டி சோம்பு
  • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி தனியத்தூள்
  • 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  • 1/2 தேக்கரண்டி மிளகு தூள்
  • 1/4 தேக்கரண்டி சீரகத்தூள்
  • 1 ஏலக்காய்
  • 1 சிறு துண்டு பட்டை
  • 3 கிராம்பு
  • 1/4 கப் நெய்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 கைப்பிடி புதினா
  • 2 தேக்கரண்டி உப்பு
  • 1/4 கிலோ காய்கறி கேரட், பீன்ஸ், காலிஃபிளவர், பட்டாணி

செய்முறை

  • முதலில் வெங்காயம் தக்காளி மற்றும் காய்கறிகளை நறுக்கவும். அரிசி பருப்பை கழுவி ஊறவிடவும்.
  • தேங்காய் மைய அரைக்கவும்.அடிகனமான பாத்திரத்தில் வாசனைப் பொருட்களைப் போட்டு பொரிய விட்டு பின்பு வெங்காயத்தைப் போடவும்.
  • வெங்காயம்பொன் முறுவலானதும் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு நன்கு வதக்கவும். பிறகு அதில் மசாலா பொடிகளைப் போட்டு வதக்கவும்.
  • பச்சைவாசனை நீங்கியதும் தக்காளியைப் போட்டு குழைய விடவும் பிறகு பிடித்தமான காய்கறிகள், புதினா கொத்தமல்லியைப் போட்டு, அரைது வைத்துள்ள தேங்காய் கலவையை ஊற்றி நன்கு கலக்கவும்.
  • பிறகு அதில் அரிசிக் கலவையைக் கொட்டி இலேசாக கிளரவும், பிறகு அதில் நீரைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • ஐந்து கப் நீர் போதுமானது. எல்லாம் சேர்ந்து நன்கு கொதிக்கும் போது குக்கர் மூடியை போட்டு மூன்று  விசில்விடவும்
  • அரிசி முழுவதுமாக வெந்தவுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.

Nutrition

Serving: 400g | Calories: 238kcal | Carbohydrates: 72g | Protein: 13g | Fat: 8g | Saturated Fat: 1.6g | Cholesterol: 8mg | Sodium: 3mg | Potassium: 381mg | Fiber: 4g | Calcium: 2mg