வெயிலுக்கு இதமா குளு குளுனு கிவி ஐஸ்கிரீம் இப்படி வீட்டிலே செய்து பாருங்க!

- Advertisement -

கோடை காலம் வந்தாலே முதல்ல சாப்பிடணும்னு தோன்ற விஷயம் ஐஸ்கிரீம். கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஆயிரம் பானங்களை குடித்தாலும் சரி, வேறெதுவும் ஐஸ்கிரீம்க்கு நிகராக இருக்க முடியாது. வெயிலுக்கு ஜில்லுனு தொண்டைக்குள்ள ஐஸ்கிரீம் போகும் போது அடடா அந்த அனுபவமே தனி சொர்கம். அதுவும் அதை நம்மளே சிரத்தை எடுத்து பண்ணி வீட்டுல இருக்கவங்களுக்கு குடுத்து அவங்க சாப்பிடுறத ரசிக்கிறது இன்னொரு ஆனந்த அனுபவம் தான்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : வெயிலுக்கு இதமா மாம்பழ குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! மாம்பழ சீசன் வந்துவிட்டது!

- Advertisement -

ஐஸ்கிரீம் கோடையில் வார இறுதி விடுமுறை மதிய உணவிற்குப் பிறகு ஒரு ஆச்சரியமான விருந்தாகும், இது குடும்பத்தாரால் அதிகமாக விரும்பப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமை, நாம் எப்போதும் கடையில் தான் வாங்கி சாப்பிடுவோம். இனி நாம் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமை வீட்டிலேயே செய்து மகிழ்ச்சியுடன் சாப்பிடலாம்.

Print
No ratings yet

கிவி ஐஸ்கிரீம் | Kiwi Icecream Recipe in Tamil

கோடை காலம் வந்தாலே முதல்ல சாப்பிடணும்னு தோன்ற விஷயம் ஐஸ்கிரீம். கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள ஆயிரம் பானங்களை குடித்தாலும் சரி, வேறெதுவும் ஐஸ்கிரீம்க்கு நிகராக இருக்க முடியாது. வெயிலுக்கு ஜில்லுனு தொண்டைக்குள்ள ஐஸ் கிரீம் போகும் போது அடடா அந்த அனுபவமே தனி சொர்கம். அதுவும் அதை நம்மளே சிரத்தை எடுத்து பண்ணி வீட்டுல இருக்கவங்களுக்கு குடுத்து அவங்க சாப்பிடுறத ரசிக்கிறது இன்னொரு ஆனந்த அனுபவம் தான்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Dessert
Cuisine: Indian
Keyword: icecream
Yield: 4 People
Calories: 198kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் கிவி பழம்
  • 1/2 கப் விப்பிங் கிரீம்
  • 1/4 கப் கன்டென்ஸ்டு மில்க்
  • 1 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  • 1/4 கப் பால்
  • 1 சிட்டிகை க்ரீன் கபுட் கலர்

செய்முறை

  • கிவி பழ துண்டுகள் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • பின்னர் நறுக்கி துண்டுகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து, பால் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • விப்பிங் கிரீம், கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நல்ல பீட் செய்யவும்.
  • பீட் செய்த விப்பிங் கிரீமை ஒரு பௌலில் சேர்க்கவும்.
  • அதில் வெனிலா எசன்ஸ், அரைத்து வைத்துள்ள கிவி பழ விழுது சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பின்னர் கொஞ்சம் நறுக்கிய கிவி பழ துண்டுகள் தூவி பேப்பர் வைத்து காற்று புகாத டப்பாவில் மூடி ஃப்ரீசரில் குறைந்தது எட்டு மணி நேரம் வைக்கவும்.
  • பேப்பரை எடுத்தால் மிகவும் நல்ல பச்சை வண்ண கிவி ஐஸ்கிரீம் சுவைக்கத் தயார். தயாரான ஐஸ்கிரீமை ஐஸ்கிரீம் பௌலில் சேர்த்து சுவைக்கக் கொடுக்கவும்.

Nutrition

Serving: 150g | Calories: 198kcal | Carbohydrates: 12.3g | Protein: 4.9g | Fat: 15g | Saturated Fat: 2.8g | Sodium: 170mg | Fiber: 1.2g | Sugar: 1.5g