- Advertisement -
இட்லி, தோசைக்கு சூப்பரான கொள்ளு சட்னி சுலபமாக எப்படி செய்யலாம் என்று தான் இன்று பார்க்க போகிறோம். உடலுக்கும் மிகவும் ஆரோகியதை தரும் கொள்ளு சட்னி சுட சுட இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : இட்லி தோசைக்கு ஏற்ற சுவையான வேர்க்கடலை சட்னி இப்படி செய்து பாருங்க? குறைந்தது 10 இட்லி சாப்பிடுவாங்க!
- Advertisement -
உடல் எடை குறைவதற்கும் மிகவும் நல்லது. இந்த கொள்ளு சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
கொள்ளு சட்னி | Kollu Chutney Recipe In Tamil
இட்லி, தோசைக்கு சூப்பரான கொள்ளு சட்னி சுலபமாக எப்படி செய்யலாம் என்று தான் இன்று பார்க்க போகிறோம். உடலுக்கும் மிகவும் ஆரோகியதை தரும் கொள்ளு சட்னி சுட சுட இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். உடல் எடை குறைவதற்கும் மிகவும் நல்லது. இந்த கொள்ளு சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Calories: 130kcal
Equipment
- 1 கடாய்
- 1 ம
தேவையான பொருட்கள்
- 3 டேபிள் ஸ்பூன் கொள்ளு
- 2 டீஸ்பூன் எண்ணெய்
- 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 10 சின்ன வெங்காயம்
- 5 பல் பூண்டு
- 5 காய்ந்த மிளகாய் காரத்திற்கேற்ப
- புளி நெல்லிக்காய் அளவு
- தேங்காய் கொஞ்சம் நறுக்கியது
- பெருங்காயப்பொடி கொஞ்சம்
- 1 டீஸ்பூன் கடுகு
- கருவேப்பிலை கொஞ்சம்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஒரு வாணலில் கொள்ளை சேர்த்து நன்கு வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
- அடுத்து அதே வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சேர்த்து பொன்னிறமாக மாறியதும் சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, தேங்காய், பெருங்காயப்பொடி, சேர்த்து நன்கு வதக்கி ஆறவிடவும்.
- ஆறியதும் மிக்சியில் முதலில் வறுத்த கொள்ளை சேர்த்து கோர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பிறகு அதில் வதக்கியதை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.
- அரைத்தும் அதில் தேவையான அளவு உப்பு போட்டு கலந்துகொள்ளவும்.
- அடுத்து ஒரு தாளிப்பு கரண்டில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் சட்டினியில் சேர்த்து பரிமாறவும்.
Nutrition
Serving: 600G | Calories: 130kcal | Carbohydrates: 67g | Protein: 13g | Potassium: 412mg | Fiber: 10g | Sugar: 0.7g