கொள்ளு சாப்பிட்டால், உடல் வலிமை பெறும் என்று நம் முன்னோர்கள் சொல்வதை கேட்டிருப்பீர்கள். ஆனால் பலருக்கு கொள்ளு என்றால் பிடிக்காது. அதற்கு அதனை அவர்கள் சரியான முறையில் சமைத்து சாப்பிடாததே காரணம் என்று சொல்லலாம். கொள்ளுவை விரும்பி சாப்பிட வேண்டுமெனில், அதனை குழம்பு செய்து சாப்பிட வேண்டும். அதிக ஆரோக்கியம் நிறைந்த பருப்பு வகைகளில் ஒன்றுதான் கொள்ளு பருப்பு. இது உடல் உஷ்ணத்தை ஏற்படுத்தும் என்பதால் வெயில் காலத்தில் உண்பதை தவிர்க்க வேண்டும். அதே சமயம் மழை மற்றும் குளிர்காலத்திற்கு ஏற்ற பருப்பாக திகழ்வதால் இந்த பருப்பை எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். கொள்ளு நாவிற்கு ருசியை மட்டும் கொடுக்காமல் நம் உணவில் கொள்ளுவை சேர்த்துக் கொள்வதால் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை கொடுத்து நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு வழி வகுக்கும்.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாரத்தில் 2 லிருந்து 3 நாட்கள் உணவில் கொள்ளு சேர்த்துக் கொள்ள வேண்டும். நாம் சிறு தானிய வகைகளில் ஒன்றான கொள்ளுவை வைத்து பல வகையான உணவுகளை செய்யலாம். இந்த கொள்ளை சுண்டல் செய்து சாப்பிடுவார்கள். கொள்ளு ரசம் வைத்து சாப்பிடுவார்கள். அத்துடன் கொள்ளு குழம்பும் வைப்பர்கள். அதனை எப்படி வைப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். கொள்ளு குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். மேலும் இதனை வீட்டில் செய்தால், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். கொள்ளு குழம்பு வைத்து அதனுடன் கொள்ளு ரசமும் வைத்து நாம் சாப்பிடும் பொழுது அதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.
கொள்ளு குழம்பு | Kollu Kulambu Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 வாணலி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 2 கப் கொள்ளு
- 2 பெரிய வெங்காயம்
- 10 பல் பூண்டு
- 1 டீஸ்பூன் கரம் மசாலா
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் தனியா தூள்
- 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
அரைக்க :
- 1/2 கப் சின்ன வெங்காயம்
- 1 கப் தேங்காய் துருவல்
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- 1 துண்டு இஞ்சி
- 3 தக்காளி
செய்முறை
- முதலில் கொள்ளை நன்கு கழுவி இரவு முழுவதும் ஊறவைத்து, பின் வடிகட்டி ஒரு துணியில் முடித்து வைத்து முளை கட்டி எடுத்துக் கொள்ளவும்.
- பின் அதை குக்கரில் சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- இவை ஆறியவுடன் ஒரு மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு மை போல் அரைத்துக் கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பின் மிளகாய்த்தூள், கறி மசாலா தூள், தனியாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் நாம் அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் வேகவைத்த கொள்ளை சேர்த்து கலந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும்.
- குழம்பு நன்கு கொதித்து கெட்டியானதும் கொத்தமல்லி தழை தூவி நெய் விட்டு கிளறி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கொள்ளு குழம்பு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : இனி சாம்பார் தேவையில்லை கொள்ளு சட்னி இனி இப்படி செய்து பாருங்க 1 இட்லி கூட மீதமாகாது!