காரசாரமான கூரை கடை தண்ணீர் சட்னி இப்படி செஞ்சி பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

- Advertisement -

ரோட்டோர கடைகள் சின்ன சின்ன கூரை கடைகள் எல்லாம் வைக்கப்படற தண்ணி சட்னி ரொம்பவே சுவையா இருக்கும். என்னதான் வீட்ல சட்னிகள் கெட்டியா அரைச்சு வச்சாலும் அதுல இருக்கிற சுவையை விட ரோட்டுக்கடைகளில் கிடைக்கிற தண்ணியான சட்னிக்கு தான் எப்பவுமே மவுசு அதிகம். அதே சட்னியை வீட்டில் தண்ணியாக நம்ம வைத்தால்  யாருமே விரும்பி சாப்பிட மாட்டாங்க.

-விளம்பரம்-

அந்த மாதிரியான ரோட்டு கடைகள் வைக்கிற தண்ணி சட்னி எப்படி சுவையா வீட்டுல செய்யறது எப்படின்னு  இந்த பதிவில் பார்க்கலாம். இந்த சட்னியை கெட்டி சட்னியாவும் நம்ம இட்லி , தோசைக்கு பயன்படுத்திக்கலாம். பொங்கலுக்கு கூட சாப்பிடலாம் அப்படி இல்லன்னா தண்ணி சேர்த்து தண்ணி சட்னியாகவும் சாப்பிடலாம். எல்லாமே நம்ம விருப்பத்துக்கு நம்ம பண்ணிக்கலாம்.

- Advertisement -

இந்த சட்னி ரொம்ப சுவையா இருக்குறதுக்கு வெறும் வேர்க்கடலையும் , பொட்டுக்கடலையும் மட்டும் பயன்படுத்தி இந்த சட்னி பண்ண போறோம்.  தோசை, கல் தோசை, இட்லி, பொங்கல் எல்லாத்துக்குமே ரொம்ப சுவையா இருக்கும் சேர்த்து சாப்பிடும்போது. இந்த சுவையான ரோட்டுக்கடை தண்ணி சட்னி எப்படி ரொம்ப டேஸ்ட்டா எல்லாருக்கும் புடிச்ச மாதிரி பண்றது எப்படி தெரிஞ்சுக்கலாம். இந்த சட்னி சின்னவங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே பிடிக்கும். அது மட்டும் இல்லாம இதுல நம்ம வேர்க்கடலை யூஸ் பண்ணி பண்றதுனால இதுல அதிக அளவு புரதச்சத்தும் இருக்கறதுனால இது நல்ல ஆரோக்கியமான ஒரு சட்னியும் கூட. இந்த ரோடு கடை தண்ணக சட்னி எப்படி பண்ணலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
5 from 2 votes

கூரை கடை தண்ணி சட்னி | Koorai Kadai Thanni Chutney

ரோட்டோர கடைகள் சின்ன சின்ன கூரை கடைகள் எல்லாம் வைக்கப்படற தண்ணி சட்னி ரொம்பவே சுவையா இருக்கும். சட்னி ரொம்ப சுவையா இருக்குறதுக்கு வெறும் வேர்க்கடலையும் , பொட்டுக்கடலையும் மட்டும் பயன்படுத்தி இந்த சட்னி பண்ண போறோம். இந்த சுவையான ரோட்டுக்கடை தண்ணி சட்னி எப்படி ரொம்ப டேஸ்ட்டா எல்லாருக்கும் புடிச்ச மாதிரி பண்றது எப்படி தெரிஞ்சுக்கலாம். இந்த சட்னி சின்னவங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே பிடிக்கும். அது மட்டும் இல்லாம இதுல நம்ம வேர்க்கடலை யூஸ் பண்ணி பண்றதுனால இதுல அதிக அளவு புரதச்சத்தும் இருக்கறதுனால இது நல்ல ஆரோக்கியமான ஒரு சட்னியும் கூட. இந்த ரோடு கடை தண்ணக சட்னி எப்படி பண்ணலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: chutney
Cuisine: tamil nadu
Keyword: Koorai Kadai Thanni Chutney
Yield: 4
Calories: 83kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் வேர்க்கடலை
  • 12 பொட்டுக்கடலை
  • 10 பல் பூண்டு
  • 4 பச்சைமிளகாய்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 காய்ந்தமிளகாய்
  • எண்ணெய் தேவையான அளவு 
  • உப்பு தேவையான அளவு 

செய்முறை

  • முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து என்னை ஊற்றி சீரகம், பூண்டு சேர்த்து வறுத்துக் கொள்ளவும். பிறகு அதில் பச்சை மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பொருள்களை எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
  • வறுத்து எடுத்து வைத்துள்ள பொருட்கள் ஆரியபிறகு அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.பின்பு அந்த மிக்ஸி ஜாரில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை சேர்த்து ஒரு முறை அரைத்து எடுக்கவும் .
  • பிறகு அதில் கொத்தமல்லி, உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு , காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  • அதில்அரைத்து வைத்துள்ள இந்த சட்னியை சேர்த்து நன்றாக கலந்து விட்டால் சுவயான கூரை கடை சட்னி தயார்.
     

செய்முறை குறிப்புகள்

 இந்த சட்னியை கெட்டியாகவும் சாப்பிடலாம் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தண்ணி சட்னியாகவும் சாப்பிடலாம்

Nutrition

Serving: 100g | Calories: 83kcal | Carbohydrates: 14.2g | Protein: 3.6g | Fiber: 3.6g

இதையும் படிக்கலாமே: ருசியான கற்றாழை சட்னி அவசியம் இப்படி ஒரு முறை வீட்டில் செய்து பாருங்க! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!