தூக்கி போடும் கொத்தமல்லி வேரில் சாதப்பொடி , அற்புதமான சுவையில் இருக்கும்!

- Advertisement -

சாத பொடி அப்படின்னு சொன்னா நம்ம எல்லாருக்கும் அதிகமா ஞாபகம் வருது இந்த பருப்பு பொடி, பூண்டு பொடி,கருவேப்பிலை பொடி இந்த மாதிரி தான் நம்ம சொல்லுவோம். ஆனால் எப்பவுமே யூஸ் பண்ணாம குப்பையில் போடக்கூடிய ஒரு பொருளை வைத்து சூப்பரான ஒரு சாத பொடி செய்து சாப்பிட போறோம். அது என்ன குப்பைல தூக்கி போடல அப்படின்னு யோசிக்கிறீங்களா நம்ம எப்பவுமே இந்த கீரைகள் காய்கறிகள் அப்படின்னு வாங்கும்போது அதுல இருக்கிற காம்பு , வேர், சில தண்டுகள் எல்லாமே தூக்கி போட்டுருவோம்₹ அந்த மாதிரி தூக்கி போடக்கூடிய ஒரு பொருள்தான் கொத்தமல்லி தழைகள்ள இருக்கக்கூடிய வேர்ப்பகுதி மொத்தமான தண்டுகள் எல்லாம்.

-விளம்பரம்-

இத வச்சு சூப்பரான ஒரு சாதபடி செய்யலாம் அப்படின்னு சொன்னா உங்களுக்கெல்லாம் நம்ப முடியுதா ? அட ஆமாங்க உண்மையிலேயே கொத்தமல்லி வேரை வச்சு தான் நம்ம இந்த சாதப்படி செய்ய போறோம். கொத்தமல்லி அப்படின்னு சொன்ன உடனே நீங்க வரகொத்தமல்லின்னு நினைச்சிடாதீங்க. வரக்கொத்தமல்லி பொடி அது வேற நம்ம செய்ய போறது பச்சையா இருக்கக்கூடிய ரசத்துக்கு சாம்பார் போடக்கூடிய கொத்தமல்லி உடைய வேர் மற்றும் மொத்தமான தண்டுகளை வைத்து தான் இந்த பொடி நம்ம பண்ண போறோம். இந்த பொடி ரொம்ப சூப்பரா இருக்கும் .

- Advertisement -

கொத்தமல்லி ஓட வாசனை அப்படிங்கறது நம்ம எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு பிளேவர். அந்த வாசனை எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் அந்த மாதிரி கொத்தமல்லியோட வாசனை ஓட இந்த பொடி சாப்பிடுவதற்கு அவ்வளவு சூப்பரா இருக்கும். சும்மா சாப்பிட சாப்பிட தட்டில் சாதம் காலி ஆகிக்கொண்டே இருக்கும். பொடியும் தான் காலியாகும் சரியா போன திருப்பி திருப்பி ரெடி பண்ணி வச்சுக்கலாம். எந்த பொருளும் வேஸ்ட் பண்ணாம சமைக்க போறது எப்படி அப்படிங்கறத இதுல கத்துக்க போறோம் . அதுக்கு தான் இந்த கொத்தமல்லி வேர் பொடி எப்படி செய்வது அப்படின்னு பார்க்கலாம்.

Print
No ratings yet

கொத்தமல்லி வேர் சாதப்பொடி | Kothamalli ver satha podi recipe in tamil

கொத்தமல்லி ஓட வாசனை அப்படிங்கறது நம்ம எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு பிளேவர். அந்த வாசனை எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும் அந்த மாதிரி கொத்தமல்லியோட வாசனை ஓட இந்த பொடி சாப்பிடுவதற்கு அவ்வளவு சூப்பரா இருக்கும். சும்மா சாப்பிட சாப்பிட தட்டில் சாதம் காலி ஆகிக்கொண்டே இருக்கும். பொடியும் தான் காலியாகும் சரியா போன திருப்பி திருப்பி ரெடி பண்ணி வச்சுக்கலாம். எந்த பொருளும் வேஸ்ட் பண்ணாம சமைக்க போறது எப்படி அப்படிங்கறத இதுல கத்துக்க போறோம் . அதுக்கு தான் இந்த கொத்தமல்லி வேர் பொடி எப்படி செய்வது அப்படின்னு பார்க்கலாம்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: Side Dish
Cuisine: tamilnadu
Keyword: Curry Leaves Amla Podi, Garlic Podi, Grountnut Podi Rice, Idli Podi Sadam
Yield: 9 People
Calories: 50kcal
Cost: 50

Equipment

 • 1 மிக்ஸி
 • 1 கடாய்
 • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

 • 1 கப் கொத்தமல்லி வேர் தண்டு
 • 3 காய்ந்த மிளகாய்
 • 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
 • 1 ஸ்பூன் மிளகு
 • 2 ஸ்பூன் வெள்ளை எள்ளு
 • 1 ஸ்பூன் உளுந்து
 • உப்பு தேவையான அளவு

செய்முறை

 • முதலில் கொத்தமல்லி தழையுடைய வேர் மற்றும் அடி் தண்டுகளை நறுக்கி விட்டு நன்றாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
 • பிறகு ஒரு டிஷ்யூ பேப்பரில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள கொத்தமல்லி வேர் மட்டும் தண்டுகளை வைத்து நன்றாக காய வைக்க வேண்டும்.
 • இந்த கொத்தமல்லி வேர் காய்வதற்கு அரை நாள் ஆகலாம்.
 • பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்க்காமல் உலர்ந்த கொத்தமல்லி வேர் மட்டும் தண்டுகளை சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 • பிறகு அதே கடாயில் கடலைப்பருப்பு, வெள்ளை எள்ளு , மிளகு , உளுந்து சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
 • பிறகு அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்து ஆற வைத்துக் கொள்ளவும்.
 • பிறகு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி வேர் தண்டு மற்றும் வறுத்து ஆற வைத்துள்ள பொருட்களை எல்லாம் சேர்த்து பொடித்து எடுத்துக் கொண்டால் சுவையான கொத்தமல்லி வேர் பொடி தயார். இதை சாதத்தில் சேர்த்து மேலே நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Nutrition

Calories: 50kcal | Carbohydrates: 10g | Protein: 15g | Fat: 9g