சவையான கோவில் அன்னதான சாம்பார் சாதம் செய்வது எப்படி ?

- Advertisement -

இன்று நாம் காலை உணவாக சாப்பிடுவதற்கு ஒரு அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக நம் வீட்டில் செய்யும் உணவு பொருள்களை நம் பிரசாதமாக செய்து கொடுப்பார்கள் ஆனால் நாம் செய்யும் உணவிற்கும் அவர்கள் செய்யும் பிரசாதத்திற்கும் இடையிலான சுவை வித்தியாசம் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் கோவில்களில் அன்னதானத்தில் சாம்பார் சாதம் பரிமாறப்படும். அந்த சாம்பார் சாதத்தை சாப்பிட்டவர்களுக்கு

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : கோவில் ஸ்டைல் சுண்டல் செய்வது எப்படி ?

- Advertisement -

அதன் சுவை பற்றி கண்டிப்பாக தெரிந்து இருக்கும். ஆகையால் என்று நாம் கோவில் அன்னதான சாம்பார் சாதம் எப்படி செய்வது என்பது பற்றி தான் பார்க்க போகிறோம். இதுபோல் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அற்புதமாக இருக்கும் அதனால் இன்று இந்த கோவில் அன்னதான சாம்பார் சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்

Print
No ratings yet

கோவில் அன்னதான சாம்பார் சாதம் |Kovil Annathana Sambar Sadam Recipe in Tamil

நாம் செய்யும் உணவிற்கும் அவர்கள் செய்யும் பிரசாதத்திற்கும் இடையிலான சுவை வித்தியாசம் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் கோவில்களில் அன்னதானத்தில் சாம்பார் சாதம் பரிமாறப்படும். அந்த சாம்பார் சாதத்தை சாப்பிட்டவர்களுக்கு அதன் சுவை பற்றி கண்டிப்பாக தெரிந்து இருக்கும். ஆகையால் என்று நாம் கோவில் அன்னதான சாம்பார் சாதம் எப்படி செய்வது என்பது பற்றி தான் பார்க்க போகிறோம். இதுபோல் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
Prep Time10 minutes
Active Time30 minutes
Total Time40 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Sambar Sadam, சாம்பார் சாதம்
Yield: 4 4
Calories: 328.1kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

சாம்பார் பொடி அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:

  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் வரமல்லி            
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகு                 
  • 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் சோம்பு
  • 1 டேபிள் ஸ்பூன் சீரகம்                      
  • 4 சிவப்பு மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவியது

சாம்பார் சாதம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 12 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 12 டேபிள் ஸ்பூன் பெருங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 12 சின்ன வெங்காயம்
  • 2 கேரட் சிறிதாக நறுக்கியது
  • 8 பீன்ஸ் சிறிதாக நறுக்கியது
  • 2 தக்காளி சிறிதாக நறுக்கியது
  • 2 கத்திரிக்காய் சிறிதாக நறுக்கியது
  • 1 முருங்கைக்காய் சிறிதாக நறுக்கியது
  • 2 உருளை கிழங்கு சிறிதாக நறுக்கியது
  • 14 கப் பச்சைபட்டாணி
  • புலிதண்ணீர் சிறிதளவு

தாளிப்பதற்கு தேவையன:

  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 10 டேபிள் ஸ்பூன் முந்திரி
  • 12 டேபிள் ஸ்பூன் கடுகு   
  • 14 டேபிள் ஸ்பூன் வெந்தயம்  
  • 3 சிவப்பு மிளகாய்
  • கருவேப்பிலை சிறிதளவு

செய்முறை

  • முதலில்  34 கப் அரிசி, 12 கப் துவரம் பருப்பு,இரண்டையும் நன்றாக கழுவி குக்கரில் சேர்த்து வழக்கமாக தண்ணீர் சேர்ப்பதை விட 4 கப் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் 4 விசில் வரும் வரை விடவும்.

சாம்பார் பொடி செய்வது.

  • ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்
  • எண்ணெய் சூடானதும் அதில் 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் மல்லி, 2 டேபிள் ஸ்பூன் மிளகு, 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் சோம்பு, 1 டேபிள் ஸ்பூன் சீரகம், 4 சிவப்பு மிளகாய், சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். 
  • பின்பு அதில் 2 டேபிள் ஸ்பூன்  துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வறுத்து அதை மிக்சியில் சேர்த்து அரைக்கவும். 
  • அரைத்து அதனை தனியாக எடுத்து வைக்கவும்.

சாம்பார் செய்யும் முறை:

  • ஒரு பெரிய பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்
  • எண்ணெய் சூடானதும் அதில் 12 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள், 14 டேபிள் ஸ்பூன் பெருங்காயப்பொடி, 2 பச்சைமிளகாய், 12 சின்னவெங்காயம், சேர்த்து கிளறவும்
  • பின்பு அதில் 2 நறுக்கிய  கேரட், 2 நறுக்கிய  உருளைக்கிழங்கு, 8 நறுக்கிய பீன்ஸ்,2 நறுக்கிய கத்திரிக்காய், 1 முருகைக்காய் சிறிதாக நறுக்கியது, 2 நறுக்கிய தக்காளி, பச்சை பட்டாணி 14 கப் சேர்க்கவும்
  • பின்பு அதில் நாம் அரைத்த சாம்பார் பொடி சேர்த்து கலந்து காய்கறிகள் வேகுறளவிற்கு தண்ணீர் சேர்த்து கூடவே தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து காய்கறிகளை நன்றாக வேகவிடவும்
  • காய்கறிகள் வெந்த பிறகு புளி தண்ணீர் சிறிதளவு சேர்த்து  அளவிற்கு தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்
  • பின்பு வேகவைத்த அரிசி மற்றும் பருப்பை அதில்  சேர்த்து அதை 5 நிமிடம் வேகவிடவும்.

தாளிப்பது.

  • ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து, அதில் 10 முந்திரியை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
  • அதே நெயில் 12 டேபிள் ஸ்பூன் கடுகு, 14 டேபிள் ஸ்பூன் வெந்தயம், 3 சிவப்பு மிளகாய், கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து தாளிக்கவும்
  • பிறகு வேகவைத்த சாம்பார் சாதத்தில் தாளித்ததை சேர்த்து கிளறவும்
  • இப்பொழுது சுவையான சாம்பார் சாதம் தயார்.

Nutrition

Serving: 800gram | Calories: 328.1kcal | Carbohydrates: 78g | Protein: 13g | Fat: 2g | Cholesterol: 8mg | Sodium: 6mg | Potassium: 462mg | Fiber: 6.89g | Sugar: 2.7g | Vitamin A: 10IU | Vitamin C: 2mg

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here