உங்களுக்கு இருக்கு கடன்‌ தொல்லையை முழுவதுமாக நீக்கி! உங்களிடம் பல கோடியை கூட குவிக்கும் குளிகை நேரம்!

- Advertisement -

ராகு காலம், எமகண்டம் போன்று குளிகை என்ற கால நேரத்தினையும் பஞ்சாங்கம் மற்றும் காலண்டர்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். சனி கிரகத்தினுடைய துணைக்கோள் குளிகன். இந்த குளிகன் ஒவ்வொரு நாளும் பூமியின் மீது உண்டாக்கும் தாக்கத்திற்கான கால அளவினை குளிகை என்ற பெயரில் குறிப்பிடுகிறார்கள். குளிகனை சனியின் மைந்தன் என்று சொல்வோரும் உண்டு. குளிகனை சனிக்கிழமைகளில் மாலை வேளைகளில் வணங்கலாம். சனீஸ்வரனை வணங்கும்போது மனதினில் குளிகனை எண்ணி வணங்கலாம். பொதுவாக குளிகை நேரத்தில் செய்கின்ற காரியங்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டிருக்கும் என்று சொல்வார்கள். எனவே அந்த நேரத்தில் சுபகாரியங்களைச் செய்யலாம்.

-விளம்பரம்-

கடன் தீர்க்கும் குளிகை காலம்

குளிகை காலம் இது காரியசித்திக்கு ஏற்ற நேரம். இந்த நேரத்தில் செய்யத் தொடங்கும் செயல்கள் திரும்ப திரும்ப நடைபெறும். குளிகை காலத்தில் ஈமச்சடங்கு செய்ய மாட்டார்கள். நகை அடகு வைப்பதோ, படம் கடன் வாங்கவோ மாட்டார்கள். மாறாக கடன் திரும்ப கொடுக்கலாம். அடகு வைத்த நகையை திருப்பலாம்.

- Advertisement -

குளிகை நேரத்தில் என்ன செய்ய கூடாது?

சுப காரியங்களைச் செய்யக்கூடாது. உதாரணத்திற்கு குளிகை நேரத்தில் கடன் வாங்கினால் தொடர்ந்து கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகிவிடும். குளிகை நேரத்தில் திருமணம் செய்யக்கூடாது, பெண் பார்ப்பது, மாப்பிள்ளை பார்ப்பது போன்றவைகள் செய்யக்கூடாது,அப்படி செய்தால் மீண்டும் மீண்டும் திருமணம் செய்கின்ற நிலை உண்டாகும்.

குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்

வங்கியில் சேமிப்புக் கணக்கு துவக்குதல், சொத்து வாங்கி பத்திரப் பதிவு செய்தல், நகை வாங்குதல் முதலான செயல்களை குளிகை நேரத்தில் செய்யலாம். அடிப்படையில் குளிகையில் செய்யும் செயல் மீண்டும் மீண்டும் தொடரும் என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு தீர்மானித்துக்கொள்ள வேண்டும். எடுத்த காரியத்தில் தடங்கல் வராமல், அந்த காரியம் பல மடங்கு லாபத்தை கொடுக்க வேண்டும் என்றால் அதை நாம் இந்த குளிகை நேரத்தில் தொடங்கலாம். நம்முடைய வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதாக இருந்தாலும் இந்த குளிகை நேரத்தில் வாங்கினால் அது பலமடங்கு அதிகரிக்கும்.

இதனையும் படியுங்கள் : https://recipes.behindtalkies.com/lakshmi-pickle-money-parikaram/

-விளம்பரம்-

குளிகை என்ற நல்ல வேளையில் சொத்து வாங்குவது, சுப நிகழ்வுகள்,கடனைத் திருப்பிக் கொடுப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது போன்றவற்றைச் செய்வதால், அவை எந்தத் தடையும் இல்லாமல் நடப்பது மட்டுமின்றி, இது போன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டும் இருக்கும்.ஆனால் அடகு வைப்பது, கடன் வாங்குவது, வீட்டைக் காலிசெய்வது, இறந்தவர் உடலைக் கொண்டு செல்வது போன்றவற்றை குளிகை நேரத்தில் செய்யக் கூடாது என்று பல்வேறு ஜோதிட நூல்களில் நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.