Advertisement
ஆன்மிகம்

தீபாவளி அன்று குளிக்கும் தண்ணீர் இதை மட்டும் சேருங்கள் தரித்திரம் நீங்கி பண மழை பொழியும்!

Advertisement

இன்றைய கால சூழலில் பணம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. பணம் இல்லாமல் எதையுமே செய்ய முடியாது என்ற நிலைமை வந்து விட்டது. இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொருவரும் பல்வேறு காரணங்களுக்காக பணத்தை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறோம். எவ்வளவு தான் நாம் உழைத்தாலும் பணத்தைச் சேர்க்க முடியவில்லை. அனைவரின் அன்றாட தேவையை பூர்த்தி செய்வது பணம் தான். இந்த பணமானது சாதாரணமாக அனைவருக்கும் கிடைக்கவில்லை அவர் அவர் உழைப்புக்கு கிடைக்கும் பரிசு, ஆனால் சில விஷயத்தை செய்வதால் பணம் நம்மிடம் தங்காது. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் தீபாவளி அன்று இந்த ஒரு காரியத்தை நாம் செய்வதன் மூலம் நமக்கு இருக்கும் பணம் தடைகள் அனைத்தும் நீங்கி பணம் மழையாக பொழியும் என நம்பப்படுகிறது. அது என்ன என்பது பற்றி இந்த ஆன்மீக பதிவில் பார்க்கலாம்.

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன் ?

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது மிகவும் அவசியாயமானதாகும். தீபாவளி தினத்தில் சுவாமி படத்திற்கு முன் ஒரு கிண்ணத்தில் எண்ணெய், சீயக்காய் வைத்து, எங்கள் குடும்பத்தில் அனைவரும் உடல் ஆரோக்கியம் பெற‌ வேண்டும் என வேண்டி தலையில் எண்ணெய் வைக்க வேண்டும். அனைவரும் கங்கா நதியில் சென்று குளிக்க முடியாது என்பதற்காக தான் தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்தால் கங்கா நதியில் குளிப்பதற்கு சமமாகும். ஏனென்றால் எண்ணையில் மகாலட்சுமியும், சீயக்காயில் சரஸ்வதியும், வெந்நீரில் கங்கா தேவியும் குடியிருப்பதாக நம்பப்படுகிறது.

Advertisement

சூரிய உதயத்துக்கு முன், எவரும் எண்ணெய் குளியல் செய்யக்கூடாது என்பது சாஸ்திர நியதி. ஆனால் தீபாவளி அன்று மட்டும், தன் பிள்ளையான நரகாசுரனின் நினைவாக சூரிய உதய காலத்துக்கு முன் அனைவரும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று, பகவான் கிருஷ்ணரிடம் பூமாதேவி வேண்டிக் கொண்டாள் என சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் தீபாவளி அன்று அதாவது அமாவசை தினத்தில், எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது நம் உடலுக்கு

Advertisement
ஒரு ஆண்டுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கின்றது. எண்ணெய் தேய்த்துக் கொண்டு கால் அல்லது அரை மணி நேரமாவது இளம் வெயிலில் நில்லுங்கள். உங்களுக்கு தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் டி சூரிய ஒளி மூலம் எண்ணெய் மூலம் உங்கள் உடலுக்கு கிடைக்கும். அதனால் தான் தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

குளிக்கும் தண்ணீர் மற்றும் எண்ணையில் சேர்க்க வேண்டிய பொருட்கள்
Advertisement

ஒரு கிண்ணத்தில் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தேவையான அளவு நல்லெண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு நபருக்கு மூன்று என்ற எண்ணிகையில் பூண்டு பற்களை எடுத்து இரண்டாக நறுக்கி எண்ணெயில் சேர்ந்துக் கொள்ளுங்கள். இதனுடன் சிறிதளவு சீரகம், வீட்டில் மூன்று பேர் இருந்தால் மூன்று குறு மிளகு, மற்றும் ஒரு துண்டு பச்சை கற்பூரத்தை பொடி செய்து சேர்த்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து அடுப்பில் வைத்து சூடு பண்ணி எடுத்து தலையில் தேய்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் குளிக்க எடுத்து வைத்திருக்கும் வெந்நீரில் நொச்சி இலை, பன்னீர், ரோஜா அல்லது மல்லிகை பூ சேர்த்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து நீங்கள் குளிக்கும் பொழுது உங்களை பிடித்திருக்கும் அனைத்து தரித்திரமும் விலகிவிடும். வாழ்க்கையில் கஷ்டங்களை மட்டுமே பார்த்தவர்களுக்கு கஷ்டங்கள் விலகக்கூடிய வழிகள் பிறக்கும் என நம்பப்படுகிறது. அதனால் நம்பிக்கை உள்ளவர்கள் இதனை செய்து பலன் அடைந்து கொள்ளுங்கள்.

இதனையும் படியுங்கள் : தீபாவளிக்கு முன்பாக பணம் தானாக உங்களைத் தேடி வர வேண்டுமா ? இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

Advertisement
Prem Kumar

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

7 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

13 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

23 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

1 நாள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

1 நாள் ago