Advertisement
சைவம்

காலை உணவுக்கு கம்பு வெந்தயக்கீரை ரொட்டி இப்படி செஞ்சி பாருங்கள்!

Advertisement

கம்பு வெந்தயக்கீரை ரொட்டி என்பது கம்பு மற்றும் வெந்தய இலைகளால் செய்யப்பட்ட ஆரோக்கியமான சுவையான முழு ரொட்டி ஆகும். இந்த கம்பு வெந்தயக்கீரை ரொட்டி சுவை மற்றும் ஊட்டச்சத்துடன் நிரம்பியுள்ளது. அதோடு அவை சாதாரண பராத்தாவிற்கு ஒரு சிறந்த ஆரோக்கியமான மாற்றாகும். இந்த கம்பு வெந்தயக்கீரை ரொட்டி செய்முறையை சில நிமிடங்களில் செய்து விடலாம் . கம்பு வெந்தயக்கீரை ரொட்டி, தயிர், ஊறுகாய் மற்றும் கறிகளுடன் பரிமாறவும்!

உடலுக்கு ஆரோக்கியம் தரும் ரெசிபியை மிக மிக சுலபமான முறையில் செய்து கொடுக்க வேண்டும். அதே சமயம் அந்த ரெசிபி சுவையானதாகவும் இருக்க வேண்டும். குழந்தைகள் விருப்பமாக சாப்பிடும் பொருளாகவும் இருக்க வேண்டும். அப்படி ஒரு சூப்பரான  கம்பு வெந்தயக்கீரை ரொட்டி தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம்.  

Advertisement

ஆரோக்கியம் தரக்கூடிய வெந்தயக் கீரையை கடைந்து கொடுத்தால், குழம்பு வைத்துக் கொடுத்தால் குழந்தைகள் நிச்சயம் சாப்பிட மாட்டார்கள். இப்படி சிறுதானியதுடன் சேர்த்து செய்து லஞ்சுக்கு பாக்ஸில் போட்டு கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் வெளியூர் செல்வதாக இருந்தால் இந்த கம்பு வெந்தயக்கீரை ரொட்டி எடுத்து வைத்து சாப்பிடலாம். இதற்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய், தயிரில் காராபூந்தி சேர்த்து பச்சடி இருந்தாலும் போதும்.

கம்பு வெந்தயக்கீரை ரொட்டி | Pearl Millet Methi Roti In Tamil

Print Recipe
உடலுக்கு ஆரோக்கியம் தரும் ரெசிபியைமிக மிக சுலபமான முறையில் செய்து
Advertisement
கொடுக்க வேண்டும். அதே சமயம் அந்த ரெசிபி சுவையானதாகவும்இருக்க வேண்டும். குழந்தைகள் விருப்பமாக சாப்பிடும் பொருளாகவும் இருக்க வேண்டும். அப்படிஒரு சூப்பரான  கம்பு வெந்தயக்கீரை ரொட்டி தான்இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம்.   ஆரோக்கியம்தரக்கூடிய வெந்தயக் கீரையை கடைந்து கொடுத்தால், குழம்பு வைத்துக் கொடுத்தால் குழந்தைகள்நிச்சயம் சாப்பிட மாட்டார்கள். இப்படி சிறுதானியதுடன் சேர்த்து செய்து லஞ்சுக்கு பாக்ஸில்போட்டு கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள்.
Advertisement
Course Breakfast, LUNCH
Cuisine tamilnadu
Keyword Pearl Miller Methi Roti
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 60

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1/4 கிலோ கம்பு மாவு
  • 1/2 கப் வெந்தயக் கீரை
  • 1/4 கப் கோதுமை மாவு
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் ஓமம்
  • 1/4 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1/4 கப் தயிர்
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • வெண்ணெய் தேவைக்கேற்ப

Instructions

  •  கம்புமாவு, கோதுமை மாவு, சீரகம், ஓமம், உப்பு, மிளகாய்த்தூள், தயிர், வெந்தயக் கீரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.
  • தேவைக்கேற்ப நீர் சேர்த்து, சப்பாத்தி மாவு போல பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • பிறகு,சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவேண்டும்.
  • உருண்டையை சப்பாத்தி போல் திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவேண்டும்.
  • மேலே வெண்ணெய் தடவி பரிமாறவேண்டும்
  • பரிமாற சுவையான கம்பு வெந்தயக்கீரை ரொட்டி தயார்!

Nutrition

Serving: 2nos | Calories: 60kcal | Carbohydrates: 14g | Protein: 9g | Saturated Fat: 0.8g | Cholesterol: 42mg | Sodium: 8.9mg | Potassium: 56mg | Fiber: 2g | Sugar: 4.5g | Calcium: 38mg
Advertisement
Prem Kumar

Recent Posts

உங்களுக்கு அத்தோ மிகவும் பிடிக்குமா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு முறை இந்த அத்தோ செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…

9 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ஃப்ரை செஞ்சு போர் அடிச்சுருச்சுன்னா இந்த தந்தூரி மீன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…

9 மணி நேரங்கள் ago

வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…

9 மணி நேரங்கள் ago

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

11 மணி நேரங்கள் ago

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

12 மணி நேரங்கள் ago

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…

12 மணி நேரங்கள் ago