குரு 2024 வரை பார்த்துக் கொள்வார்! உச்ச கட்ட பணயோகம் உள்ள ராசிகார்கள் இவர்கள் தான்!!

- Advertisement -

ஜோதிடத்தில் குரு அதிர்ஷ்டத்திற்கான கிரகம் என்பார்கள். நல்ல அதிர்ஷ்டம், ஆரோக்கியம் மற்றும் நிறைந்த செல்வம் ஆகியவற்றை நிறைவாகத் தர வல்லவர். ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் குரு வலுவாக இருப்பின் அந்த நபருக்கு எந்த ஒரு கடின நிலையில் குருவின் அற்புத பலனால் நிலையான பலன்களைத் தான் பெறுவார்கள் என்பது ஜாதகப்படியான விதி.

-விளம்பரம்-

குரு ஒரு ராசியில் 12 மாதங்கள் பயணம் செய்வார். சில நேரங்களில் அதிசாரமாகவும், பின்னர் வக்ரகதியிலும் பயணம் செய்வார். குருவின் சஞ்சாரம், பார்வையால் சிலருக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். திருமணம் சுபகாரியம் நடைபெறும், நல்ல வேலை கிடைக்கும், சிலருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும்.‌குருபகவான் இப்போது மேஷம் ராசியில் பயணம் செய்கிறார். இந்த குருவின் பார்வை தற்போது சிம்மம், கன்னி, மேஷம் ராசிகளின் மீது விழுகிறது. செப்டம்பர் மாதம் வக்ரமடையும் குரு பகவான் டிசம்பர் வரை மேஷ ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்வார். குரு வக்ர பெயர்ச்சியால் குபேர யோகமும் கோடீஸ்வர யோகமும் யாருக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம்.

- Advertisement -

மேஷ ராசி

எதிலும் வேகத்துடன் விவேகமாகவும் செயல்படும் மேஷ ராசி அன்பர்களே! குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக பஞ்சம ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

அடுத்த ஆண்டு வரை உங்களுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சகபணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய முதலீடுகள் லாபத்தை பெற்று தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும் புதிய வருமானங்கள் அதிகரிக்கும்.

சிம்ம ராசி

எந்த சூழ்நிலையிலும் தன்மானத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் சிம்ம ராசியினரே!குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக ராசியில் ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக தைரிய வீரிய ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக பஞ்சம ஸ்தானத்தையும் பார்க்கிறார். பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குருவின் பார்வை சிம்மம் ராசிக்கு விழுகிறது.

-விளம்பரம்-

உங்கள் ராசிக்கு 13 மாதங்கள் தொடர்ந்து குருபகவான் யோகத்தை தரப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம்.

சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும், வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் வரும்.

கன்னி ராசி

உழைப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வாழ்வில் வெற்றி பெறும் கன்னி ராசிக்காரர்ளே! குரு பகவான் தனது ஐந்தாம் பார்வையாக அயன சயன போக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக சுக ஸ்தானத்தையும், பார்க்கிறார்.

-விளம்பரம்-

குரு பகவானின் சஞ்சாரமானது உங்களுக்கு சாதகமான சூழ்நிலையில் உண்டாக்கப் போகின்றது. அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்பு கிடைக்கப் பெறுவார்கள்.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த விஷயங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்புள்ளது. சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். எப்போதோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம்.

இதனையும் படியுங்கள் : ராஜயோகம் பெற உள்ள ராசிகள் எவை ? 2023 சனிபெயர்ச்சி பலன்கள்