Home சைவம் அசைவம் சாப்பிட முடியாத நேரத்துல இந்த குஸ்கா செஞ்சு சாப்பிட்டு பாருங்க அசைவம் சாப்பிட்ட ஃபீல்...

அசைவம் சாப்பிட முடியாத நேரத்துல இந்த குஸ்கா செஞ்சு சாப்பிட்டு பாருங்க அசைவம் சாப்பிட்ட ஃபீல் அப்படியே கிடைக்கும்!!!

சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி மீன் பிரியாணி காளான் பிரியாணி வெஜிடபிள் பிரியாணி சென்னா பிரியாணி அப்படின்னு பிரியாணி நாலே நம்ம அதுல ஏதாவது ஒன்னு போட்டு தான் செய்வோம். இதுல ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு பிரியாணி ரொம்ப பிடிக்கும் ஆனால் ஒரு சிலருக்கு சாப்பாடு எதுவுமே போடாம ப்ளைனா குஸ்கா மாதிரி செஞ்சு சாப்பிட ரொம்பவே பிடிக்கும்.

-விளம்பரம்-

அந்த குஸ்காக்கு அவங்க சைடு டிஷ் காரசாரமா வேற ஏதாவது செஞ்சு சாப்பிடுவாங்க. என்னதான் எல்லார் வீட்டிலேயும் குஸ்கா செஞ்சு சாப்பிட்டாலும் டேஸ்ட்டாவே இருக்க மாட்டேங்குது அப்படின்னு ஒரு சிலர் பீல் பண்ணுவாங்க அவங்களுக்காகவே இன்னைக்கு நம்ம சூப்பரா அசத்தலான ஒரு குஸ்கா செய்யப் போறோம். இந்த குஸ்கா கண்டிப்பா சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே பிடிக்கும்.பெரிய பெரிய கடைகள் ல கிடைக்கிறத விட சூப்பரான டேஸ்ட்ல நம்ம வீட்டுலயே இந்த குஸ்கா வ செய்யலாம்.

நம்ம குழந்தைங்க லஞ்ச் பாக்ஸ், கணவர்களோட ஆபிஸ் லஞ்ச் பாக்ஸ் னு எல்லாத்துக்குமே இந்த குஸ்காவை நீங்க செஞ்சு கொடுத்தா எல்லார்கிட்ட இருந்தும் உங்களுக்கு பாராட்டு மழை தான் கிடைக்கும். யாராவது விருந்தாளிகள் வந்திருக்கும் போது சுடச்சுட இந்த குஸ்கா வச்சு அது கூட கொஞ்சம் தயிர் பச்சடி வச்சு கொடுத்தீங்கன்னா அவங்க ரொம்பவே விரும்பி சாப்டுட்டு போவாங்க. அதோட இந்த குஸ்காவை எப்படி செஞ்சீங்கன்னு உங்ககிட்ட ரெசிப்பியும் கேட்டுட்டு போவாங்க அந்த அளவுக்கு இந்த குஸ்கா டேஸ்டியானதா இருக்கும். இப்ப வாங்க இந்த அருமையான அட்டகாசமான குஸ்கா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 1 vote

குஸ்கா | Kuska Recipe In Tamil

குஸ்காக்கு அவங்க சைடு டிஷ் காரசாரமா வேற ஏதாவது செஞ்சு சாப்பிடுவாங்க. என்னதான் எல்லார் வீட்டிலேயும் குஸ்கா செஞ்சு சாப்பிட்டாலும் டேஸ்ட்டாவே இருக்க மாட்டேங்குது அப்படின்னு ஒரு சிலர் பீல் பண்ணுவாங்க அவங்களுக்காகவே இன்னைக்கு நம்ம சூப்பரா அசத்தலான ஒரு குஸ்கா செய்யப் போறோம். இந்த குஸ்கா கண்டிப்பா சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே பிடிக்கும்.பெரிய பெரிய கடைகள் ல கிடைக்கிறத விட சூப்பரான டேஸ்ட்ல நம்ம வீட்டுலயே இந்த குஸ்காவ செய்யலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: kuska
Yield: 4
Calories: 112kcal

Equipment

  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பாஸ்மதி அரிசி
  • 1 தக்காளி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
  • 1 கைப்பிடி புதினா இலைகள்
  • டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • டீஸ்பூன் கரம் மசாலா
  • டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 பட்டை
  • 1 கிராம்பு
  • 1 பிரியாணி இலை
  • 1 அன்னாச்சி பூ
  • 1 ஏலக்காய்
  • 1/2 கப் தேங்காய் பால்
  • நெய்
  • தயிர்
  • எலுமிச்சை பழச்சாறு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • ஒரு குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி கிராம்பு அன்னாசி பூ ஏலக்காய் பிரியாணிஇலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நாளைக்கு சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • பேசு தக்காளியை சேர்த்து நன்றாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
  • ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • அடுத்து தயிர் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்க வேண்டும் அதன் பிறகு பாஸ்மதி அரிசி கழுவி அதில் சேர்த்து கிளறி கொள்ளவும்.
  • ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு ஒரு கப் தண்ணீர் மற்றும் அரை கப் தேங்காய் பால் சேர்க்க வேண்டும்.
  • இறுதியாக கால் டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து மூடி வைத்து ஒரு விசில் விட்டு இறக்கினால் சுவையான சூப்பரான குஸ்கா தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 112kcal | Carbohydrates: 9g | Protein: 1.2g | Sodium: 21mg | Potassium: 125mg

இதையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ருசியான குதிரைவாலி குஸ்கா இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ஒரு பிடி சாதம் கூட மிஞ்சாது!