Advertisement
சைவம்

குழிப்பணியாரம் இனி இப்படி செய்து பாருங்க!

Advertisement

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடாக்குடிய உணவுகளில் குழிப்பணியாரம் ஓன்று தான். ஆனால் வீட்டில் அதை செய்வதற்கு பெண்கள் சலித்துக்கொள்வார்கள். அதனால் கடைகளில் வாங்கி சாப்பிடுவார்கள் அந்தளவு ருசியாகவும் இருக்காது. இனி அந்த கவலை வேண்டாம் சுலபமாக குறைந்த நேரத்தில் ருசியாக செய்து விடலாம்.

இந்த முறையில் குழிப்பணியாரம் செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. ஏனென்றால் பச்சை பயிர் வைத்து தான் இந்த குழிப்பணியாரம் செய்யப்போகிறோம்.

Advertisement

இனி இந்த மாறி செய்து காரச்சட்னி சேர்த்து கொடுத்து பாருங்க சீக்கிரம் காலியாகிவிடும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

குழிப்பணியாரம் | Kuhi Paniyaram Recipe In Tamil

Print Recipe
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடாக்குடிய உணவுகளில் குழிப்பணியாரம் ஓன்று தான். ஆனால் வீட்டில் அதை செய்வதற்கு பெண்கள் சலித்துக்கொள்வார்கள். அதனால் கடைகளில் வாங்கி சாப்பிடுவார்கள் அந்தளவு ருசியாகவும் இருக்காது. இனி அந்த கவலை வேண்டாம் சுலபமாக குறைந்த நேரத்தில் ருசியாக செய்து விடலாம்.
இந்த முறையில் குழிப்பணியாரம் செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. ஏனென்றால் பச்சை பயிர் வைத்து தான் இந்த குழிப்பணியாரம் செய்யப்போகிறோம்.
இனி இந்த மாறி செய்து காரச்சட்னி சேர்த்து கொடுத்து பாருங்க சீக்கிரம் காலியாகிவிடும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword kuzhi paniyaram, குழிப்பணியாரம்
Prep Time
Advertisement
5 hours
Cook Time 5 hours 10 minutes
Total Time 10 hours 12 minutes
Servings 4 people

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 1 கப் பச்சை பயிறு
  • ½ கப் உளுத்தப்பருப்பு
  • ¼ கப் இட்லி அரிசி
  • ½ டீஸ்பூன் வெந்தயம்
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • ¼ டீஸ்பூன் பெருங்காய பொடி
  • 1 டீஸ்பூன் இஞ்சி
  • 2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  • 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • கொத்தமல்லி இலை கொஞ்சம் பொடியாக நறுக்கியது
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்

Instructions

செய்முறை:

  • முதலில் பச்சைப்பயிர், உளுத்தம் பருப்பு, இட்லி அரிசி, வெந்தயம், இவற்றை அனைத்தும் குறைந்ததும் 5 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • 5 மணி நேரம் ஊறியதும் அதனை கிரைண்டர், அல்லது மிக்சியில் சேர்த்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.
  • அரைத்தும் மாவை புளிக்க வைக்கவேண்டும். அதற்கு ½ டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து குறைந்தது 5 மணி நேரம் அப்படியே மூடி போட்டு வைக்கவும்.
  • மாவு புளித்ததும், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, சேர்த்து பொரிந்து சிவந்து வந்ததும் பெருங்காய பொடி, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும், அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வெங்காயம் வெந்தால் போதும் அதுவரை வதக்கவும்.
  • பிறகு இதனை ஒரு தட்டில் கொட்டி ஆறியதும் மாவில் சேர்த்து கூடவே கொத்தமல்லி இலை, தேங்காய் துருவல் சேர்த்து கலந்துகொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் பணியார கல் வைத்து சூடானதும் எண்ணெய் அல்லது நெய் விட்டு மாவை குளிக்கரண்டியால் எடுத்து ஊற்றவும்.
  • பின்பு பொன்னிறமாக வெந்ததும் திருப்பி போட்டு சிறிது எண்ணெய் விட்டு இருபுறமும் சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.
  • இப்பொழுது ருசியான குழிப்பணியாரம் தயார்.
Advertisement
swetha

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

4 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

4 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

4 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

5 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

5 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

9 மணி நேரங்கள் ago