Advertisement
அசைவம்

ஹோட்டல் சிக்கன் கிரேவி இந்த மாதிரி செஞ்சி பாருங்க!

Advertisement

நாம் நட்சதீர ஹோட்டல்களில் தயாரிக்க படும் சிக்கன் டிக்கா மசாலா அவ்வளவு சுவையாக இருக்கும். அதுவும் சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.

ஆனால் ஒரு நாளும் வீட்டில் அதை செய்து ருசிக்கவிளையா? இனி கவலை வேண்டாம் ஹோட்டல்களில் செய்யப்படும் சிக்கன் டிக்கா மசாலா அதே சுவையில் சுலபமாகவும் ருசியாகவும் இனி வீட்டிலேயே செய்து விடலாம்.

Advertisement

இந்த சிக்கன் டிக்கா மசாலா செய்து அத்துடன் ரொட்டி, நான், புலாவ், போறவடற்றுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அப்புறம் மீண்டும் மீண்டும் இதை செய்ய தோன்றும்.

இந்த சிக்கன் டிக்கா மசாலா ரெசிபியை எப்படி வீட்டிலே செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

சிக்கன் கிரேவி | Chicken Tikka Masala Recipe In Tamil

Print Recipe
நாம் நட்சதீர ஹோட்டல்களில் தயாரிக்க படும் சிக்கன் டிக்கா மசாலா அவ்வளவு சுவையாக இருக்கும். அதுவும் சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.
ஆனால் ஒரு நாளும் வீட்டில் அதை செய்து ருசிக்கவிளையா? இனி கவலை வேண்டாம் ஹோட்டல்களில் செய்யப்படும் சிக்கன் டிக்கா மசாலா அதே சுவையில் சுலபமாகவும் ருசியாகவும் இனி வீட்டிலேயே செய்து விடலாம்.
இந்த சிக்கன் டிக்கா மசாலா செய்து அத்துடன் ரொட்டி, நான், புலாவ், போறவடற்றுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அப்புறம் மீண்டும் மீண்டும் இதை செய்ய தோன்றும்.
இந்த சிக்கன் டிக்கா மசாலா ரெசிபியை எப்படி வீட்டிலே செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword chicken tikka masala, சிக்கன் கிரேவி
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 26 minutes
Servings 4 people

Equipment

  • 1 கடாய்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • ¼ கிலோ போன் லெஸ் சிக்கன்
  • ½ டீஸ்பூன் உப்பு
  • ½ டீஸ்பூன் இஞ்சி போன்று விழுது
  • 2 டேபிள் ஸ்பூன் தயிர் கெட்டியான தயிர்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் கேஸ்மீரி மிளகாய் தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா பொடி
  • 1 டீஸ்பூன் வறுத்து பொடித்த சீரக பொடி
  • டேபிள் ஸ்பூன் எண்ணெய்

தாளிக்க:

  • ½ டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • ¼ டீஸ்பூன் சீரகம்
  • 1 கப் வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் கேஸ்மீரி மிளகாய் தூள்
  • 1 கப் தக்காளி விழுது சுடுதண்ணீரில் வேக வைத்து தோல் நீக்கி அரைத்துக்கொள்ளவும்.
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • ½ டீஸ்பூன் மிளகாய் தூள்
  • ½ டீஸ்பூன் மல்லித்தூள்
  • ½ டீஸ்பூன் கரம் மசாலா பொடி
  • ½ டீஸ்பூன் வறுத்து பொடித்த சீரக பொடி
  • உப்பு தேவைக்கேற்ப
  • 1 டேபிள் ஸ்பூன் கத்தூரி மேத்தி
  • 1 டீஸ்பூன் சர்க்கரை
  • 2 டேபிள் ஸ்பூன் பிரெஷ் க்ரீம்
  • கொத்தமல்லிஇலைகள் பொடியாக நறுக்கியது

Instructions

செய்முறை:

  • முதலில் எலும்பில்லாத சிக்கனை கழுவி சுத்தம் செய்து ஒரு பௌலில் போட்டு, அத்துடன் உப்பு, இஞ்சி பூண்டு விழுது, தயிர், மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள், கேஸ்மீரி மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா பொடி, சீரக பொடி, சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
  • பிறகு ஒரு பேனில் 1½ டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சிக்கன் துண்டுகளை எடுத்து போட்டு மிதமான தீயில் ரோஸ்ட் பதத்தில் முக்கால் பதம் வெந்ததும் அதனை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.

தாளிக்க:

  • பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், சேர்த்து பொரிந்து சிவந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி போல் வதக்கவும்.
  • வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு கேஸ்மீரி மிளகாய் தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
  • பிறகு தக்காளி விழுதை சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரகப்பொடி, கரம் மசாலா சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும்.
  • எண்ணெய் பிரிந்து வந்ததும் வறுத்து எடுத்து வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து 1 நிமிடம் மசாலாவுடன் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு 1 கப் தண்ணீர் சேர்த்து கலந்து கஸ்தூரி மேத்தி, மற்றும் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்.
  • சிக்கன் வெந்து கிரேவி பதம் வந்ததும், பிரெஷ் கிரீம் சேர்த்து கலந்து 2 நிமிடம் வேகவிடவும்.
  • கடைசியாக கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.
  • இப்பொழுது ருசியான சிக்கன் டிக்கா தயார்.
Advertisement
swetha

Recent Posts

எல்லா வகையான சாதத்திற்கும் சாப்பிட ருசியான இந்த பேபி கார்ன் மஞ்சூரியனை உங்கள் வீட்டிலும் ஒரு முறை செய்து பாருங்க!

பேபி கார்ன் இப்போது பரவலாக அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. பொதுவாக பேபி கார்ன் வைத்து பஜ்ஜி, கிரேவி, கார்ன் 65…

16 நிமிடங்கள் ago

தித்திக்கும் சுவையில் பால் பணியாரம் இப்படி ஒரு தரம் வீட்டிலே செய்து பாருங்க!

சதா இட்லி, தோசை ஒரே மாதிரி யான உணவை சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு பணியாரம் போல விதவிதமான உணவுகளை செய்து…

4 மணி நேரங்கள் ago

காரசாரமான சிக்கன் லெக் ஃப்ரை இப்படி ஒரு தடவ செஞ்சு பாருங்க எல்லாமே டக்குன்னு காலியாகிவிடும்

சிக்கன் அப்படின்னா யாருக்கு தான் பிடிக்காது சிக்கன் எழுதிக் கொடுத்தாலே ஒரு சில பேருக்கு நாக்குல இருந்து எச்சில் வடியும்…

4 மணி நேரங்கள் ago

பீர்க்கங்காய் மசாலா கறி

இன்று மதியம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதுவரை வீட்டில் செய்திராத ஒரு குழம்பை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள்…

5 மணி நேரங்கள் ago

வீட்டில் முலாம் பழம் இருந்தால் சூப்பரான முலாம் பழ ஐஸ்கிரீம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முலாம் பழத்தில் ஐஸ்கிரீமா அப்படினு ஷாக் ஆகாதீங்க. சாக்லேட் ஐஸ்கிரீம், ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம், மேங்கோ ஐஸ் கிரீம், சேமியா ஐஸ்…

6 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் அதிகரிக்க செய்ய வேண்டிய எளிமையான ஒரு விஷயம்

இந்த உலகம் பணத்தால் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம் பணம் மட்டும் இல்லை என்றால் இந்த உலகமே அசையாது…

7 மணி நேரங்கள் ago