Advertisement
அசைவம்

மதியம் செஞ்ச சாதம் மீந்து போயிடுச்சா அப்ப கவலையே படாதீங்க இந்த முட்டை சோறு செஞ்சு சாப்பிடுங்க!

Advertisement

பொதுவா நம்ம வீட்ல மதியம் செஞ்ச சாதம் மிந்து போயிடுச்சு அப்படின்னா அதுல தண்ணி ஊத்தி வச்சு அடுத்த நாள் பழைய சாதமா சாப்பிடுவோம் அப்படி இல்லன்னா அந்த பழைய சாதத்தை பிழிஞ்சு வச்சு மிளகாய் தூள் சீரகம் உப்பெல்லாம் சேர்த்து வடகம் மாதிரி வெயில்ல காய வச்சு எடுத்து பொரிச்சு சாப்பிடுவோம். ஆனா இனிமேல் உங்க வீட்ல மதியம் செஞ்ச சாதம் மீந்து போயிடுச்சு அப்படின்னா நைட்டுக்கு சுட சுட முட்டை சோறு செஞ்சு கொடுங்க சட்டுனு பத்து நிமிஷத்துல எல்லா சாதமும் காலி ஆகிடும் அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கக்கூடிய முட்டை சோறு தான் இப்ப பாக்க போறோம்.

பொது வாழ்ந்த முட்டை சாதம் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக செய்வாங்க ஒருத்தர் மசாலா எதுவுமே சேர்க்காமல் பிளேனா செய்வாங்க. ஒவ்வொருத்தவங்க மசாலா எல்லாம் சேர்த்து செய்வாங்க. அந்த வகையில இப்ப நம்ம மசாலா எல்லாம் சேர்த்து நல்லா காரசாரமா சைட் டிஷ் எதுவுமே தேவைப்படாமல் அப்படியே சாப்பிடக்கூடிய முட்டை சோறு தான் செய்யப் போறோம். இந்த முட்டை சோறு நைட்டுக்கு மட்டும்தான் நம்ம பழைய சாதத்தில் செய்யணும் அப்படின்ற அவசியம் இல்ல காலையில செஞ்சு கூட குழந்தைகளுக்கு லஞ்சுக்கு கொடுத்து விடலாம் லஞ்ச் பாக்ஸ் காலியாக தான் வரும் அந்த அளவுக்கு இந்த முட்டை சோறு ரொம்ப டேஸ்டா இருக்கும்.

Advertisement

குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.நாலு முட்டை இருந்தா போதும் டக்குனு இந்த முட்டை சோறு செஞ்சு முடிச்சிடலாம். சுட சுட ஆவி பறக்க எடுத்து சாப்டா இந்த முட்டை சோறுக்கு எந்த சைடு டிஷ்ஷூம் தேவையில்லை.இப்ப வாங்க இந்த சுவையான அட்டகாசமான முட்டை சோறு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Egg Rice Recipe In Tamil

Print Recipe
முட்டை சாதம் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக செய்வாங்க ஒருத்தர்
Advertisement
மசாலா எதுவுமே சேர்க்காமல் பிளேனாசெய்வாங்க. ஒவ்வொருத்தவங்க மசாலா எல்லாம் சேர்த்து செய்வாங்க. அந்த வகையில இப்ப நம்மமசாலா எல்லாம் சேர்த்து நல்லா காரசாரமா சைட் டிஷ் எதுவுமே தேவைப்படாமல் அப்படியே சாப்பிடக்கூடியமுட்டை சோறு தான் செய்யப் போறோம். இந்த முட்டை சோறு நைட்டுக்கு மட்டும்தான் நம்ம பழையசாதத்தில் செய்யணும் அப்படின்ற அவசியம் இல்ல காலையில செஞ்சு கூட குழந்தைகளுக்கு லஞ்சுக்குகொடுத்து விடலாம் லஞ்ச் பாக்ஸ் காலியாக தான் வரும் அந்த அளவுக்கு இந்த முட்டை சோறுரொம்ப டேஸ்டா இருக்கும்.
Advertisement
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword egg rice
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 245

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 4 முட்டை
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 கப் சாதம்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 கொத்து கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/4 டீஸ்பூன் கரம் மசாலா
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  •  
    ஒரு கடாயில் எண்ணெய் தாராளமாக ஊற்றி சோம்பு பட்டை கிராம்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்
  •  
    ஒரு கடாயில் எண்ணெய் தாராளமாக ஊற்றி சோம்பு பட்டை கிராம்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்
  • தக்காளியையும் சேர்த்து நன்றாக குழைவாக வதக்கி எடுக்கவும்.
  • பிறகு அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கிக்கொள்ளவும்
  • இதனை ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்து விட்டு கடாயில் மற்றொரு பக்கம் 4 முட்டைகளை உடைத்து நன்றாக கிளறி முட்டை வெந்தவுடன் மசாலாவுடன் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
  • பிறகு ஆரிய உதிரி உதிரியான சாதத்தை அதில் போட்டு கிளறி கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையானமுட்டை சோறு தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 245kcal | Carbohydrates: 199g | Protein: 12g | Sodium: 216mg | Potassium: 23.2mg | Vitamin A: 13IU

இதையும் படியுங்கள் : காரசாரமான எக் கீமா தோசை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க ஜம்முனு இருக்கும்!

Advertisement
Ramya

Recent Posts

உங்களுக்கு அத்தோ மிகவும் பிடிக்குமா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு முறை இந்த அத்தோ செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…

4 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ஃப்ரை செஞ்சு போர் அடிச்சுருச்சுன்னா இந்த தந்தூரி மீன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…

4 மணி நேரங்கள் ago

வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…

4 மணி நேரங்கள் ago

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

6 மணி நேரங்கள் ago

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

7 மணி நேரங்கள் ago

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…

7 மணி நேரங்கள் ago