Advertisement
சைவம்

வெண்டைக்காய் 65 இனி இப்படி செய்து பாருங்க!

Advertisement

பொதுவாக சிக்கன், கோபி மஞ்சூரியன், பன்னீர், முட்டை, சோயா ஆகியவற்றை பயன்படுத்தி 65 ரெசிபிகளை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பத்தே நிமிடத்தில் வெண்டைக்காய் 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம். பொதுவாக வெண்டைக்காய் வைத்து பொரியல், கிரேவி போன்றவை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் வெண்டைக்காய் வைத்து சுவையான வெண்டைக்காய் 65 செய்ய உள்ளோம். இதனை குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி மிகவும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை சூப்பராக இருக்கும். வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போதும் தங்களுக்கு வித்தியாசமான உணவுகளை சாப்பிட கேட்பார்கள். வெண்டைக்காய் வறுவல் கொடுத்தால் சாப்பிடும் குழந்தைகள், கிரேவி அல்லது குழம்பு வைத்து கொடுத்தால் சாப்பிடுவது இல்லை. அவர்களுக்கு வெண்டைக்காய் 65 செய்து கொடுத்தால் சுவைத்து சாப்பிடுவார்கள்.

இன்று வீட்டிலேயே வெண்டைக்காய் 65 செய்வது குறித்து தெரிந்து கொள்ளலாம். மாலையில் மொறு மொறுவென்று சூடாக ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால் வீட்டில் வெண்டைக்காய் இருந்தால், அதனைக் கொண்டு 65 செய்து சாப்பிடுங்கள். நாம் வழக்கமாக செய்து உண்ணும் மாலை நேர சிற்றுண்டிகளுக்கு இவை ஒரு அருமையான மாற்று. இதை நாம் குறைந்த பொருட்களை வைத்தே வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமும் இன்றி செய்து விடலாம். இவை செய்வதற்கும் அதிக நேரம் எடுக்காது. அது மட்டுமின்றி பள்ளியிலிருந்து வரும் நம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் இந்த வெண்டைக்காய் 65 செய்து கொடுத்தால் அதை அவர்கள் கட்டாயம் மிகவும் விரும்பி உண்பார்கள்.

Advertisement

வெண்டைக்காய் 65 | Ladys Finger 65 Recipe In Tamil

Print Recipe
பொதுவாக சிக்கன், கோபி மஞ்சூரியன், பன்னீர், முட்டை, சோயா ஆகியவற்றை பயன்படுத்தி 65 ரெசிபிகளை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பத்தே நிமிடத்தில் வெண்டைக்காய் 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம். பொதுவாக வெண்டைக்காய் வைத்து பொரியல், கிரேவி போன்றவை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் வெண்டைக்காய் வைத்து சுவையான வெண்டைக்காய் 65 செய்ய உள்ளோம். இதனை குழந்தைகளும் சரி,
Advertisement
பெரியவர்களும் சரி மிகவும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை சூப்பராக இருக்கும். வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போதும் தங்களுக்கு வித்தியாசமான உணவுகளை சாப்பிட கேட்பார்கள். வெண்டைக்காய் வறுவல் கொடுத்தால் சாப்பிடும் குழந்தைகள், கிரேவி அல்லது குழம்பு வைத்து கொடுத்தால் சாப்பிடுவது இல்லை. அவர்களுக்கு வெண்டைக்காய் 65 செய்து கொடுத்தால் சுவைத்து சாப்பிடுவார்கள்.
Course evening
Cuisine Indian
Keyword Ladys Finger 65
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time
Advertisement
20 minutes
Servings 4 People
Calories 81

Equipment

  • 1 பவுள்
  • 1 வாணலி

Ingredients

  • 250 கி வெண்டைக்காய்
  • 3 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 டீஸ்பூன் சிகப்பு புட் கலர்

Instructions

  • முதலில் வெண்டைக்காயை நன்கு அலசி ஒரு துணியில் துடைத்து விட்டு உங்கள் விருப்பத்திற்கேற்ப நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பவுளில் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சைச்சாறு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், அரிசி மாவு, சோள மாவு, உப்பு, கேசரி பவுடர், கறிவேப்பிலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
  • அதன்பிறகு இதனுடன் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காய் துண்டுகளை சேர்த்து கலந்து 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எ‌ண்ணெ‌ய் சேர்த்து நன்கு காய்ந்ததும் வெண்டைக்காய் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொறித்து எடுத்துக் கொள்ளவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான ‌வெண்டைக்காய் 65 தயார். இது சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 300g | Calories: 81kcal | Carbohydrates: 3.6g | Protein: 5.1g | Fat: 2g | Sodium: 83mg | Potassium: 72mg | Fiber: 4g | Vitamin C: 9.1mg | Calcium: 46mg | Iron: 4.2mg

இதனையும் படியுங்கள் : மொறு மொறுனு சூப்பரான வெண்டைக்காய் சாப்ஸ் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

4 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

7 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

17 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago