- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- evening
பொதுவாக சிக்கன், கோபி மஞ்சூரியன், பன்னீர், முட்டை, சோயா ஆகியவற்றை பயன்படுத்தி 65 ரெசிபிகளை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பத்தே நிமிடத்தில் வெண்டைக்காய் 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம். பொதுவாக வெண்டைக்காய் வைத்து பொரியல், கிரேவி போன்றவை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் வெண்டைக்காய் வைத்து சுவையான வெண்டைக்காய் 65 செய்ய உள்ளோம். இதனை குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி மிகவும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை சூப்பராக இருக்கும். வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போதும் தங்களுக்கு வித்தியாசமான உணவுகளை சாப்பிட கேட்பார்கள். வெண்டைக்காய் வறுவல் கொடுத்தால் சாப்பிடும் குழந்தைகள், கிரேவி அல்லது குழம்பு வைத்து கொடுத்தால் சாப்பிடுவது இல்லை. அவர்களுக்கு வெண்டைக்காய் 65 செய்து கொடுத்தால் சுவைத்து சாப்பிடுவார்கள்.
இன்று வீட்டிலேயே வெண்டைக்காய் 65 செய்வது குறித்து தெரிந்து கொள்ளலாம். மாலையில் மொறு மொறுவென்று சூடாக ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால் வீட்டில் வெண்டைக்காய் இருந்தால், அதனைக் கொண்டு 65 செய்து சாப்பிடுங்கள். நாம் வழக்கமாக செய்து உண்ணும் மாலை நேர சிற்றுண்டிகளுக்கு இவை ஒரு அருமையான மாற்று. இதை நாம் குறைந்த பொருட்களை வைத்தே வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமும் இன்றி செய்து விடலாம். இவை செய்வதற்கும் அதிக நேரம் எடுக்காது. அது மட்டுமின்றி பள்ளியிலிருந்து வரும் நம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் இந்த வெண்டைக்காய் 65 செய்து கொடுத்தால் அதை அவர்கள் கட்டாயம் மிகவும் விரும்பி உண்பார்கள்.
இதனையும் படியுங்கள் : மொறு மொறுனு சூப்பரான வெண்டைக்காய் சாப்ஸ் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!
Ingredients
Method
முதலில் வெண்டைக்காயை நன்கு அலசி ஒரு துணியில் துடைத்து விட்டு உங்கள் விருப்பத்திற்கேற்ப நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பவுளில் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சைச்சாறு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், அரிசி மாவு, சோள மாவு, உப்பு, கேசரி பவுடர், கறிவேப்பிலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
அதன்பிறகு இதனுடன் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காய் துண்டுகளை சேர்த்து கலந்து 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து நன்கு காய்ந்ததும் வெண்டைக்காய் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொறித்து எடுத்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான வெண்டைக்காய் 65 தயார். இது சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.






