- Advertisement -
நாம் நட்சதீர ஹோட்டல்களில் தயாரிக்க படும் சிக்கன் டிக்கா மசாலா அவ்வளவு சுவையாக இருக்கும். அதுவும் சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.
ஆனால் ஒரு நாளும் வீட்டில் அதை செய்து ருசிக்கவிளையா? இனி கவலை வேண்டாம் ஹோட்டல்களில் செய்யப்படும் சிக்கன் டிக்கா மசாலா அதே சுவையில் சுலபமாகவும் ருசியாகவும் இனி வீட்டிலேயே செய்து விடலாம்.
- Advertisement -
இந்த சிக்கன் டிக்கா மசாலா செய்து அத்துடன் ரொட்டி, நான், புலாவ், போறவடற்றுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அப்புறம் மீண்டும் மீண்டும் இதை செய்ய தோன்றும்.
-விளம்பரம்-
இந்த சிக்கன் டிக்கா மசாலா ரெசிபியை எப்படி வீட்டிலே செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
சிக்கன் கிரேவி | Chicken Tikka Masala Recipe In Tamil
நாம் நட்சதீர ஹோட்டல்களில் தயாரிக்க படும் சிக்கன் டிக்கா மசாலா அவ்வளவு சுவையாக இருக்கும். அதுவும் சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.ஆனால் ஒரு நாளும் வீட்டில் அதை செய்து ருசிக்கவிளையா? இனி கவலை வேண்டாம் ஹோட்டல்களில் செய்யப்படும் சிக்கன் டிக்கா மசாலா அதே சுவையில் சுலபமாகவும் ருசியாகவும் இனி வீட்டிலேயே செய்து விடலாம்.இந்த சிக்கன் டிக்கா மசாலா செய்து அத்துடன் ரொட்டி, நான், புலாவ், போறவடற்றுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அப்புறம் மீண்டும் மீண்டும் இதை செய்ய தோன்றும்.இந்த சிக்கன் டிக்கா மசாலா ரெசிபியை எப்படி வீட்டிலே செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Yield: 4 people
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
- ¼ கிலோ போன் லெஸ் சிக்கன்
- ½ டீஸ்பூன் உப்பு
- ½ டீஸ்பூன் இஞ்சி போன்று விழுது
- 2 டேபிள் ஸ்பூன் தயிர் கெட்டியான தயிர்
- ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1 டீஸ்பூன் கேஸ்மீரி மிளகாய் தூள்
- 1 டீஸ்பூன் மல்லி தூள்
- 1 டீஸ்பூன் கரம் மசாலா பொடி
- 1 டீஸ்பூன் வறுத்து பொடித்த சீரக பொடி
- 1½ டேபிள் ஸ்பூன் எண்ணெய்
தாளிக்க:
- ½ டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- ¼ டீஸ்பூன் சீரகம்
- 1 கப் வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 டீஸ்பூன் கேஸ்மீரி மிளகாய் தூள்
- 1 கப் தக்காளி விழுது சுடுதண்ணீரில் வேக வைத்து தோல் நீக்கி அரைத்துக்கொள்ளவும்.
- ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- ½ டீஸ்பூன் மிளகாய் தூள்
- ½ டீஸ்பூன் மல்லித்தூள்
- ½ டீஸ்பூன் கரம் மசாலா பொடி
- ½ டீஸ்பூன் வறுத்து பொடித்த சீரக பொடி
- உப்பு தேவைக்கேற்ப
- 1 டேபிள் ஸ்பூன் கத்தூரி மேத்தி
- 1 டீஸ்பூன் சர்க்கரை
- 2 டேபிள் ஸ்பூன் பிரெஷ் க்ரீம்
- கொத்தமல்லிஇலைகள் பொடியாக நறுக்கியது
செய்முறை
செய்முறை:
- முதலில் எலும்பில்லாத சிக்கனை கழுவி சுத்தம் செய்து ஒரு பௌலில் போட்டு, அத்துடன் உப்பு, இஞ்சி பூண்டு விழுது, தயிர், மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள், கேஸ்மீரி மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா பொடி, சீரக பொடி, சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
- பிறகு ஒரு பேனில் 1½ டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சிக்கன் துண்டுகளை எடுத்து போட்டு மிதமான தீயில் ரோஸ்ட் பதத்தில் முக்கால் பதம் வெந்ததும் அதனை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
தாளிக்க:
- பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், சேர்த்து பொரிந்து சிவந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி போல் வதக்கவும்.
- வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு கேஸ்மீரி மிளகாய் தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
- பிறகு தக்காளி விழுதை சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரகப்பொடி, கரம் மசாலா சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும்.
- எண்ணெய் பிரிந்து வந்ததும் வறுத்து எடுத்து வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து 1 நிமிடம் மசாலாவுடன் சேர்த்து வதக்கவும்.
- பிறகு 1 கப் தண்ணீர் சேர்த்து கலந்து கஸ்தூரி மேத்தி, மற்றும் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்.
- சிக்கன் வெந்து கிரேவி பதம் வந்ததும், பிரெஷ் கிரீம் சேர்த்து கலந்து 2 நிமிடம் வேகவிடவும்.
- கடைசியாக கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.
- இப்பொழுது ருசியான சிக்கன் டிக்கா தயார்.