என்ன இது புதுசா சோம்பேறி சிக்கன் வறுவல் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்று யோசிக்கிறீங்களா.. ஆமாங்க எப்ப பார்த்தாலும் சிக்கன் வாங்கி சமைக்கணும்னு நினைச்சாலே அது ரொம்ப பெரிய வேலையாக தெரியும். அப்படி ரொம்ப பீல் பண்ணி என்னடா பண்றது அப்படின்னு யோசிக்கிறவங்களுக்கு எல்லாம் தான் இந்த ஈஸியான சோம்பேறி சிக்கன் வறுவல். நாம் சிக்கனை யூஸ் பண்ணி 65, பெப்பர் ப்ரை, குழம்பு , பிரியாணி, தந்தூரி இப்படி வித்தியாசமா உணவுகள் செய்திருப்போம்.
ஆனால் இப்ப பண்ண போறது சோம்பேறி சிக்கன் எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்க போறோம். ரொம்ப நிறைய வேலை செய்து வேலை செய்து டயர்டு ஆகுது அப்படி நினைக்கிறீங்களா ? அப்போ ரொம்ப ஈஸியா சிம்பிளா எதையாவது பண்ணி வேலைய முடிச்சுட்டே ரெஸ்ட் எடுக்கலாம் அப்படின்னு உங்களுக்கு தோணுதா ?அப்போ நீங்க இந்த சோம்பேறி சிக்கன் வறுவல் ரெடி பண்ணி சாப்பிடலாம். அப்படி என்ன இந்த சோம்பேறி சிக்கன் வறுவல் இருக்கு அப்படின்னா ரொம்ப வேலை செய்ய அலுப்பா இருக்கு அப்படின்னு நினைக்கிறவங்க எல்லாம் சிம்பிளா இந்த சிக்கனை செய்து டேஸ்ட்டாவே சாப்பிடலாம்.
அதே மசாலா வச்சி கொஞ்சம் வேற மாதிரி யூஸ் பண்ணி இந்த சிக்கன் செய்ய போறோம். நம்மளும் எவ்வளவு நாளைக்கு தான் ரொம்ப வேகமா நிறைய வேலைகளை செய்றது. அதுக்கு தான் சுலபமா சோம்பேறித்தனமா எப்படி சமைக்கிறது அப்படிங்கறது கத்துக்க போறோம். சுலபமா ஈஸியா இந்த சோம்பேறி சிக்கன் பண்ண போறோம். வாங்க இந்த சோம்பேறி சிக்கன் எப்படி செய்யலாம்.
சோம்பேறி சிக்கன் வறுவல் | Lazy Chicken Fry In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கிலோ சிக்கன்
- 1 வெங்காயம்
- 1 தக்காளி
- 1 பச்சைமிளகாய்
- 1 துண்டு இஞ்சி
- 4 பல் பூண்டு
- 1 ஸ்பூன் மிளகாய்தூள்
- 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- 1 கொத்து கறிவேப்பிலை
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவைகளை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு கடாயில் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து அதில் மஞ்சள் தூள், மிளகாய்தூள் உப்பு சேர்த்து பிசறி கொள்ளவும்.பிறகு கலந்துவைத்துள்ள சிக்கனில் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக பிசறி கொள்ளவும்.
- இப்பொழுது இந்த கடாயை எடுத்து அடுப்பில் வைத்து மேலாக எண்ணெய் ஊற்றி மூடி போட்டு வேக விடவும்.ஐந்து நிமிடம் ஆனவுடன் மூடியை எடுத்து விட்டு நன்றாக சிக்கனை கிளறி விடவும்.
- உங்களுக்கு இந்த சிக்கன் குழம்பு போல் வேண்டுமென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து வேக வைக்கவும்.அப்படி இல்லை வறுவல் போல் வேண்டும் என்றால் தண்ணீர் சேர்க்காமல் எண்ணெய் ஊற்றி நன்றாக கிளறி விடவும்.
- சிக்கனை மூடி போட்டு வேக வைக்கவும். அவ்வப்போது திறந்து கிளறிவிட்டுக் கொண்டே இருக்கவும்.
- சிக்கனில் இருக்கும் நீரிலேயே இந்த சிக்கன் நன்றாக வெந்துவிடும். சிக்கன் நன்றாக வெந்து சுருள வந்தவுடன் மேலே கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி பரிமாறினால் சுவையான சுலபமான சோம்பேறி சிக்கன் தயார்