மதியம் மீந்து போன சாதத்தில் சுவையான பக்கோடா செய்யலாம். இது மிகவும் ருசியாக இருக்கும்,இது மேலே மொறு மொறுவென்று உள்ளே பஞ்சு போன்றும் இருக்கும். இனி சாதம் மிந்துவிட்டால் வீணாக்காமல் இந்த பக்கோடாவை செய்து தரலாம். ஒரு முறை செய்தீர்கள் என்றால் ,மாரு முறை இந்த பக்கோடாவை செய்வதற்கென்றே சாதம் அதிகமாக மதியம் வைத்து மதியம் சுவையான இந்த பக்கோடா செய்யவீர்கள்
டீ போடும் நேரத்தில் டக்கென சுலபமாக இதை செய்து முடித்து விடலாம். விருந்தினர் திடீரென்று வந்தாலும் மதியம் சாதம் இருந்தால் அதை வைத்து சட்டென்று சுலபமாக சுவையாக பக்கோடா செய்து விருந்தினருக்கு விருந்தளிக்கலாம். வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை பக்கவாடாவிற்கு ஒரு முக்கிய சுவை சேர்க்கிறது. மாவில் சிறிதளவு எண்ணெய் சேர்த்தால் பகோடா மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும். சாதம் ஏற்கனவே வெந்து விட்டதால் இந்த பக்கோடா எண்ணெய் அதிகம் குடிக்காது.. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
சாதத்தில் பகோடா | Leftover Rice Pakoda Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் மீந்த சாதம்
- 1/2 கப் கோதுமை மாவு
- 1/2 கப் நறுக்கிய வெங்காயம்
- பொடியாக நறுக்கிய இஞ்சி சிறிதளவு
- 2 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
- உப்பு தேவையானஅளவு
- எண்ணெய் பகோடாபொரிக்க
- கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை
- மீந்த சாதத்தை மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் மைய ஒரு அரை அரைத்து பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- அத்துடன் சிறிது கடலை மாவு, சிறிது கோதுமை மாவு சேர்த்து கெட்டியாக பகோடா போடும் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- அதில் நறுக்கின வெங்காயம், நறுக்கின இஞ்சி, பொடியாய் நறுக்கின பச்சை மிளகாய், தேவையான உப்பு, கறிவேப்பிலை சேர்த்து கிளறி வைக்கவும்.
- வாணலியில்எண்ணெய் ஊற்றி, சூடானதும் இந்த மாவினைக்கிள்ளிப் போட்டு பகோடாக்களாகப் பொரித்து எடுக்கலாம். சுவையான பகோடா தயார். இது தக்காளி சாஸ் அல்லது சட்னியுடன் சேர்த்து சூடாக பரிமாறவும்.