Home ஜூஸ் லிட்சி பழ மில்க் ஷேக் இப்படி ஈஸியாக வீட்டிலயே ட்ரை பண்ணி பாருங்க! அமிர்தமாக...

லிட்சி பழ மில்க் ஷேக் இப்படி ஈஸியாக வீட்டிலயே ட்ரை பண்ணி பாருங்க! அமிர்தமாக இருக்கும்!

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க் ஷேக், வெண்ணிலா மில்க் ஷேக் மற்றும் ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் என்று ‌சொல்லிக் கொண்டே செல்லலாம். நாம் சற்று ‌வித்தியாசமாக லிட்சி மில்க் ஷேக் செய்து பருகலாம். லிச்சி பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் இதில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளதால், இது செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு, உடலுக்கு எனர்ஜியை தரக்கூடியது.

-விளம்பரம்-

இந்த பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை சிறப்பான முறையில் மில்க் ஷேக் போட்டு குடிக்கலாம். தற்போதைய காலத்தில் குழந்தைகள் அனைவரும் விரும்பி குடிக்கும் ஒரு பானம் என்றால் அது மில்க் ஷேக் தான். மேலும் இந்த லிச்சி மில்க் ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது குழந்தைகளுக்கு பிடித்தவாறும், வித்தியாசமான சுவையிலும் இருக்கும்.

மாலையில் குழந்தைகளுக்கு எப்போதும் டீ, காபி, பால் கொடுப்பதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக பிஸ்கட் கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள். கடைகளில் விற்கும் மில்க் ஷேக் கெடாமல் இருப்பதற்காக சில ரசாயன பொருட்கள் சேர்த்து தயார் செய்து இருப்பார்கள். ஆனால் வீட்டில் இயற்கையான முறையில் எளிமையாக மில்க் ஷேக் தயாரிக்கலாம். ஆம் இப்போது அந்த லிச்சி மில்க் ஷேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Print
1 from 1 vote

லிட்சி மில்க் ஷேக் | Litchi Milk Shake Recipe In Tamil

மாலையில் குழந்தைகளுக்கு எப்போதும் டீ, காபி, பால் கொடுப்பதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக பிஸ்கட் கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள். கடைகளில் விற்கும் மில்க் ஷேக் கெடாமல் இருப்பதற்காக சில ரசாயன பொருட்கள் சேர்த்து தயார் செய்து இருப்பார்கள். ஆனால் வீட்டில் இயற்கையான முறையில் எளிமையாக மில்க் ஷேக் தயாரிக்கலாம். ஆம் இப்போது அந்த லிச்சி மில்க் ஷேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போம்.மேலும் இந்த லிச்சி மில்க் ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது குழந்தைகளுக்கு பிடித்தவாறும், வித்தியாசமான சுவையிலும் இருக்கும்.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: Drinks
Cuisine: tamil nadu
Keyword: லிட்சி மில்க் ஷேக்
Yield: 4
Calories: 47kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 15 லிட்சி பழம்
  • 1 கப் காய்ச்சியபால்
  • 1/2 கப் வெண்ணிலா ஐஸ்கிரீம்
  • 3/4 கப் சர்க்கரை
  • 4 ஐஸ் கட்டிகள்

செய்முறை

  • முதலில் லிட்சி பழத்தை நன்கு கழுவி அதில் இருக்கும் தோல் மற்றும் கொட்டை நீக்கி அதில் இருக்கும் பழத்தின் விழுதை மட்டும் தனியே எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு மிக்ஸியில் பழத்தின் விழுது, சிறிதளவு தண்ணீர், காய்ச்சிய பால் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  • பின்னர் அதில் வெண்ணிலா ஐஸ்கிரீம் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்ததை ஒரு கண்ணாடி டம்ளருக்கு மாற்றி சிறிது ஐஸ் கட்டிகள் சேர்த்து இறுதியாக நறுக்கிய உலர் பருப்பு தூவலைச் சேர்த்து அருந்தினால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
  • அவ்வளவுதான் சுவையான லிட்சி மில்க் ஷேக் தயார்.

Nutrition

Serving: 40g | Calories: 47kcal | Carbohydrates: 8.9g | Protein: 15g | Saturated Fat: 2.4g | Sodium: 27mg | Potassium: 87mg | Sugar: 8.9g