2025ம் ஆண்டில் குரு பெயர்ச்சியால் உருவாகும் கஜகேசரி யோகத்தால் இந்த 5 ராசிகள் கோடி நன்மைகளை பெற போகிறார்கள்!!!

- Advertisement -

2024 ஆம் ஆண்டு முடியப் போகிறது. இன்னும் சில நாட்களில் புத்தாண்டு தொடங்கும். ஜோதிட சாஸ்திரப்படி, புத்தாண்டின் தொடக்கத்தில் இருக்கும் கிரகங்களின் நிலை 12 ராசிகளையும் பாதிக்கிறது. இந்த புத்தாண்டில் குரு பகவானும் முக்கிய ஜோதிட மாற்றங்களை அடையவுள்ளார். 2025 ஆம் ஆண்டில் புதன் பகவானை அதிபதியாக கொண்ட மிதுன ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாக உள்ளார். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். 2025 பிப்ரவரி மாதத்தில் நடக்கவுள்ள குரு வக்ர நிவர்த்தி மற்றும் 2025 மே மாதத்தில் நடக்கவுள்ள குரு பெயர்ச்சி காரணமாக உருவாகும் கஜகேசரி யோகம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் பலன் தரும் என்பதை இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

மிதுனம்

2025 ஆண்டின் குரு பெயர்ச்சி மற்றும் கஜ கேசரி யோகம் காரணமாக, மிதுன ராசியினர், இன்னல்கள் அனைத்தும் நீங்கி இன்ப வாழ்வைப் பெறுவார்கள். அறிவுத்திறன் மற்றும் வேலைத்திறன் அதிகரிக்கும். அரசியலில் இருப்போர் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. அரசாங்க ஊழியர்கள் வளர்ச்சி அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு கூடும். நற்பண்புகளுக்கான வாய்ப்புகள் இருக்கும். அலுவலகத்தில் உங்கள் முன்னேற்றம் உறுதியாகும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கையெழுத்திடும் சமயங்களில் கவனமாக இருங்கள்.

- Advertisement -

கன்னி

குரு பெயர்ச்சி மற்றும் கஜகேசரி யோகத்தால் கன்னி ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வாழ்க்கையில் வசதிகளும் வாய்ப்புகளும் உருவாகும். எதிர்பார்த்த பதவி, இடமாற்றம் தாமதமானாலும் நிச்சயம் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணையுடன் சுமுகமான போக்கு நிலவும். மாணவர்களுக்கு மதிப்பெண் உயரும். கலைஞர்கள், சினிமாத்துறையினர் வாய்ப்புகளை வரிசையாகப் பெறுவீர்கள். திருமண வாய்ப்புகள் உண்டாகும்.

துலாம்

குரு பெயர்ச்சி மற்றும் கஜகேசரி யோகத்தால், துலாம் ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையையும், வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலையும் பெறுவார்கள். பண வரவு மகிழ்ச்சியைக் கொடுக்கும். தம்பதியர் இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துகள் சேரும். அதேசமயம் விட்டுக் கொடுத்தலும், வீண் ரோஷம் தவிர்ப்பதும் முக்கியமாகும். அலுவலகத்தில் நீங்கள் திறமையால் முன்னேற்றங்களைக் காணலாம். வெளிநாடு, வெளியூர் செல்லும் வாய்ப்புகள் வரும். எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வுகள் பொறுமைக்குப் பரிசாகக் கிட்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சி மற்றும் கஜகேசரி யோகத்தால், நிதி ஆதாயங்களைப் பெற்று, முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். பதவி, பொறுப்புகள் அதிகரித்து மகிழ்ச்சி சேர்க்கும். பேச்சுக்கு மதிப்பு கூடும். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு சீராகும். பழைய கடன்கள் சுலபமாக அடைபடும். வீடு, வாகனம் சேரும், பழைய வழக்குகள் சுமுகமாகத் தீர்வாகும். தம்பதியரிடையே இருந்த விரிசல்கள் நீங்கும். சிலருக்கு புதிய பணி வாய்ப்பு கைகூடி வரும்.

-விளம்பரம்-

கும்பம்

குரு பெயர்ச்சி மற்றும் கஜகேசரி யோகம் குறிப்பாக கும்ப ராசியினருக்கு சாதகமாக இருக்கும். ஏழரை நாட்டு சனியின் கடைசிக் கட்டத்தைக் கடப்பவர்கள் தங்கள் தொழிலில் முன்னேற்றத்தைப் பெறுவார்கள். அரசியலில் உள்ளோரின் செல்வாக்கு அதிகரிக்கும். பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் யோகம் உண்டு. சினிமா, இசை துறையினரின் முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி சேர்க்கும்.

இதனையும் படியுங்கள் : 2025ம் ஆண்டில் சனி புதன் இணைவால் இனி அமர்க்களமாக இருக்க போகும் ராசிகள் இவை தான்!!