மீன் குழம்பு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் அயிரை மீன் குழம்பை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். கிராமத்தில் இந்த அயிரை மீனை அதிகம் சமைப்பார்கள். அதிலும் குறிப்பாக மழைக்காலங்களில் இந்த மீனை அதிகம் சமைப்பார்கள். மதுரை சென்றாலே அயிரை மீன் குழம்பு தான் ஞாபகத்துக்கு வரும். ஏனெனில் மதுரையில் மல்லிக்கு அடுத்தபடியாக ஸ்பெஷான ஒன்று என்றால் அது அயிரை மீன் குழம்பு தான். மீன்கள் என்றாலே சத்துக்கள் நிறைந்தது. அதிலும் சின்ன சின்ன மீன்களில் நிறைய சத்துக்கள் உள்ளன. அப்படியானால், அயிரை மீனை பற்றி சொல்லவா வேண்டும்? இந்த மீன் குழம்பு மிகவும் சுவையாகவும், மணமாகவும் இருக்கும். பொதுவாக அசைவ உணவகங்களில் பெரும்பாலும் கடல் மீன் வகைகள்தான் இடம்பெறும். அதிலும் சற்று வித்தியாசமாக உணவைத் தருவது மதுரை உணவகங்களுக்கு உரிய சிறப்பாகும்.
அசைவ உணவகங்களில் மதிய நேரங்களில் மட்டுமே மீன் வகைகள் கிடைக்கும். ஆனால், மதுரை நகர பகுதிகளில் இருக்கும் சில உணவகங்களில் இரவு நேரங்களிலும் சுடச்சுட மீன் உணவுகளை ருசிக்கலாம். இது மதுரைக்கே உரிய சிறப்பாகும். எத்தனையோ வகை மீன்களை சாப்பிட்டாலும் மதுரையில் கிடைக்கக்கூடிய அயிரை மீன் குழம்பிற்கு ஈடாக முடியாது. அயிரை மீன் குழம்பு கிராமங்களில் வீடுகளில் மட்டுமே காண முடியும். அதிலும் மழை நேரங்களில் கிராமத்து வீடுகளில் அயிரை மீன் குழம்புதான். அயிரை மீனில் உள்ள அமினோ அமிலங்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய்களின் தாக்கத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும். அயிரை மீன்களில் அதிகளவு புரோட்டீன், ஏராளமான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன.
மேலும் இதில் கெட்ட கொழுப்புக்கள் குறைவாகவும்,நல்ல கொழுப்புக்கள் அதிகமான அளவிலும் உள்ளது. மிகவும் சிறிய வகை மீனான இந்த அயிரை மீனை கிராமங்களில் உழக்கு என்று சொல்லக்கூடிய எடை அளவில் அளந்து கொடுப்பது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. ருசியான சத்தான இந்த மீனை வாங்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது ஊட்ட சத்து நிபுணர்களின் கருத்தாகும். இன்று இந்த மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
மதுரை மீன் குழம்பு | Madurai Meen Kulambu Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1/2 கி அயிரை மீன்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 பச்சை மிளகாய்
- 2 வர மிளகாய்
- 1/4 கி சின்ன வெங்காயம்
- 2 டீஸ்பூன் மல்லி
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1/4 கப் தேங்காய்
- புளி கரைசல் தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் வெந்தயம்
- 2 தக்காளி
- 10 பல் பூண்டு
- 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
செய்முறை
- முதலில் மீனை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம், வெந்தயம், பூண்டு, சீரகம், தேங்காய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- பின் இதில் மல்லி, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி ஆற விடவும். இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், வரமிளகாய், கருவேப்பிலை, வெந்தயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை நறுக்கி சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியதும் அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து புளி கரைசலையும் சேர்த்து மூடி போட்டு நன்கு கொதிக்கவிடவும்.
- குழம்பு நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் மீன் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மதுரை மீன் குழம்பு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : இந்த வாரம் சண்டே ஸ்பெஷலாக மிளகு மீன் வறுவல் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!