இந்த வாரம் சண்டே ஸ்பெஷலாக மிளகு மீன் வறுவல் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

- Advertisement -

அசைவ உணவுகளில் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் உணவானது கடல் உணவுகள் அதிலும் முக்கியமாக மீனுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த மீனை பொறுத்தவரை நாம் குழம்பு,பிரியாணி, புட்டு இவைகள் எல்லாம் விரும்பி உண்பதை விட வறுவல் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். மீன்ல வறுவல் அப்படின்னு செய்யும்போது அது ரொம்பவே சுவையா இருக்கும். அது எல்லாம் சாப்பாடு கூடயும் சேர்த்து சாப்பிட அட்டகாசமா இருக்கும். அந்த மாதிரி சுவையான மீன் வறுவல் தான் இப்ப நம்ம செய்ய போற மீன் வறுவல் மட்டும் செய்து கொடுத்தீங்கன்னா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

-விளம்பரம்-

குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடித்த மீன் உணவு என்றால் அது வறுவல் தான். அப்படிப்பட்ட மீனை மிளகு வறுவல் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள இருக்கிறோம். குழந்தைகளுக்கு மீன் மிகவும் பிடிக்கும். உணவில் பிரதானம் சுவையாக உண்ண வேண்டும் என்பதுதான். நாம் இந்த மீன் மிளகு வறுவலை செய்ய இருக்கிறோம். மீன் குழம்பு அதிக சுவையுடையதாகத்தான் இருக்கும். மீன் பிரியாணியும் பிடித்தவர்களுக்கும் மீன் எப்படி செய்தாலும் நல்ல சுவையாக இருக்கும். இருந்தாலும் மீன் வறுவலுக்கு என்று தனியாக ஒரு கூட்டமே இருக்கின்றது .மீனில் இருக்கும் ஒமேகா 3 கால்சியம் வைட்டமின்கள் போன்றவை உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரக்கூடியவை.

- Advertisement -

இவைகளில் கெட்ட கொழுப்புகள் இல்லாததால் இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதய நோயாளிகள் கூட மீன் உணவை உணவில் எடுத்து கொள்ளலாம். இந்த மிளகு மீன் வறுவலை எந்த மீனில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் வஞ்சரம் மீனில் செய்யலாம். முள் இல்லாத மீன் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதற்கு ஏதுவாகவும் இருக்கும்.அசைவ உணவு விருந்தென்றால் அதில் மீன் இல்லாமல் இருக்கவே இருக்காது அப்படிப்பட்ட மீனில் நீங்கள் மிளகு வறுவல் செய்து கொடுத்தீர்கள் என்றால் வந்த விருந்தினர்களும் குடும்பத்தினர்களும் குழந்தைகளும் ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட பெப்பர் சுலபமாக வீட்டில் இருக்கிற பொருட்களை வைத்து ரொம்ப குறைவான நேரத்தில் டேஸ்டியான மீன் வறுவல் எப்படி செய்து சாப்பிடலாம்.எப்படி மிளகு சேர்த்து மீன் வறுவல் செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 1 vote

மிளகு மீன் வறுவல் | Pepper fish fry recipe in tamil

இந்த மிளகு மீன் வறுவலை எந்த மீனில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் வஞ்சரம் மீனில் செய்யலாம். முள் இல்லாத மீன் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதற்கு ஏதுவாகவும் இருக்கும்.அசைவ உணவு விருந்தென்றால் அதில் மீன் இல்லாமல் இருக்கவே இருக்காது அப்படிப்பட்ட மீனில் நீங்கள் மிளகு வறுவல் செய்து கொடுத்தீர்கள் என்றால் வந்த விருந்தினர்களும் குடும்பத்தினர்களும் குழந்தைகளும் ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட பெப்பர் சுலபமாக வீட்டில் இருக்கிற பொருட்களை வைத்து ரொம்ப குறைவான நேரத்தில் டேஸ்டியான மீன் வறுவல் எப்படி செய்து சாப்பிடலாம்.எப்படி மிளகு சேர்த்து மீன் வறுவல் செய்வது என்று பார்க்கலாம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: Side Dish
Cuisine: tamilnadu
Keyword: Anchovies Fish Fry, Andhra Style Fish Fry, Ayirai Fish Kulambu, Crispy Fish Balls
Yield: 5 People
Calories: 159kcal
Cost: 250

Equipment

  • 1 வாணலி
  • 1 பவுள்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ வஞ்சிரம் மீன்
  • 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 ஸ்பூன் சோம்பு   
  • 2 ஸ்பூன் மிளகு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி    சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு  தேவையான அளவு                      

செய்முறை

  • முதலில் வஞ்சிரம் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  • ஒரு கடாயில் மிளகு மற்றும் பெருஞ்சீரகத்தை போட்டு எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  • மிளகு , பெருஞ்சீரகம் ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு பொடித்து கொள்ளவும்.
  • ஒரு தட்டில் இஞ்சி பூண்டு விழுது, பொடித்த மிளகு பொடி, உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • இந்த கலவையில் மீன் துண்டுகளை எடுத்து கலவையில் நன்கு இரண்டு பக்கமும் தடவி அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
  • பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும மீன்களை போட்டு இருபுறமும் பொன் நிறமாகும் வரை வறுக்கவும்.
  • பின் வறுத்த மீன் துண்டுகளை ஒரு தட்டில் வைத்து மேலே லெமன் சாறு ஊற்றி வெங்காயம் வைத்து பரிமாறினால் சூடான சுவையான நாவில் நீர் சுரக்கும் மிளகு மீன் வறுவல் தயார்

Nutrition

Calories: 159kcal | Carbohydrates: 17g | Protein: 18g | Fat: 15g

இதையும் படியுங்கள்: எதாவது ஸ்பெஷல் ரெசிபி சாப்பிட மீன் கபாப் இப்படி ட்ரை பண்ணி பார்க்கலாம்! பார்த்தாலே நாவில் எச்சி ஊறும்!