சாப்பாட்டுக்கு ரொம்ப ஃபேமஸ் ஆன மதுரை அப்படின்னு சொன்னாலே நம்ம ஞாபகத்துக்கு நிறைய யோசனைகள் வரும் கறி தோசை பரோட்டா ரோட்டு கடை ஜிகர்தண்டா அப்படின்னு சாப்பிடுற ஐட்டம்ஸ் தான் நிறைய பேருக்கு ஃபர்ஸ்ட் ஞாபகத்துக்கு வரும். அந்த வகையில மதுரையில ரோட்டு கடைகளில் ரொம்பவே பேமஸான ரொம்ப டேஸ்டா இருக்கக்கூடிய மதுரை தண்ணி சட்னி தான் எப்படி செய்வது என்று பார்க்க போறோம்.
இட்லி தோசைக்கு இந்த தண்ணி சட்னி வச்சு சாப்பிட்டா இன்னும் இரண்டு இட்லி இரண்டு தோசை சேர்த்து சாப்பிடலாம். நம்ம வீட்ல என்னதான் நிறைய உணவுகள் செஞ்சாலும் அடிக்கடி செய்யக்கூடியது நா இட்லியும் தோசையும் தான் அந்த இட்லி தோசைக்கு கொஞ்சம் வெரைட்டியா சட்னி ஏதாவது செஞ்சு வச்சா சாப்பிடறவங்க ரொம்பவே விரும்பி அதை சாப்பிடுவாங்க.
நம்ம பொதுவா கடைகளில் போய் சாப்பிடுவதற்கு காரணமே அவங்க கொடுக்கிற சட்னி தான். அந்த வகையில கடைல கிடைக்கிற மாதிரியே சட்னி நம்ம வீட்டிலேயே செஞ்சோம் அப்படின்னா நிறையவே வச்சு சாப்பிடலாம். அதனால மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி தான் இன்னைக்கு நம்ம பாக்க போறோம்.
இந்த தண்ணி சட்னி குழந்தைகளுக்கு பெரியவர்கள் வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இட்லி தோசை சாப்பிடுகிறார்களோ இல்லையோ சட்னியை ஊத்தி ஊத்தி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு ஒரு டேஸ்டான சட்னி தான் இந்த தண்ணி சட்னி.நீங்களும் உங்க வீட்ல ஒரு தடவை இதை ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் இப்ப வாங்க இந்த மதுரை ஸ்டைல் தண்ணி சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
மதுரை தண்ணி சட்னி | Madurai Thanni Chutney In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
- 2 பெரிய வெங்காயம்
- 4 பச்சை மிளகாய்
- 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக் கடலை
- 1 சிறிய நெல்லிக்காய் அளவு புளி
- 5 பல் பூண்டு
- 2 கொத்து கருவேப்பிலை
- 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 2 காய்ந்தமிளகாய்
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- பிறகு பச்சை மிளகாய் பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு சிறிதளவு புளி பொட்டுக்கடலை ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- அனைத்தையும் அற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும் பிறகு அதனுடன் தேங்காய் துருவல் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை காய்ந்த மிளகாய்,நறுக்கிய ஒரு சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கி அந்த தாளிப்பை சட்னிகள் சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றினால் சுவையான மதுரை ஸ்டைல் தண்ணி சட்னி தயார்
Nutrition
இதையும் படியுங்கள் : வறுத்து அரைச்ச ருசியான தேங்காய் சட்னி இனி இப்படி வீட்டில் செஞ்சி கொடுங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!