Advertisement
ஆன்மிகம்

நாளை மகா சிவராத்திரியில் மறந்தும் கூட இதை செய்யாதீர்கள் இது மிகப்பெரிய பாவத்தை சேர்க்குமாம்!

Advertisement

உலகில் உள்ள இந்து மதத்தை சார்ந்த அனைவரும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் நாட்களில் இந்த மகா சிவராத்திரியும் ஒன்று. இந்த நாளில் பலரும் உணவு, தண்ணீர் எதுவும் இன்றி கடுமையான விரதங்களை கடைப்பிடித்து வருவார்கள். ஆனால் பலராலும் இப்படி கடுமையாக விரதம் இருக்க முடியாது என்பதனால் பால், பழம், உலர வைத்த பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டு விரதம் இருக்கலாம் என்று சாஸ்திரங்கள் நமக்கு கூறியுள்ளது. இப்படி விரதம் இருந்து மகா சிவராத்திரி அன்று இரவு முழுக்க கண்விழித்து நாம் சிவபெருமானே நினைத்து பிரார்த்தனை செய்யும் இந்த சிவராத்திரி அன்று செய்யக்கூடாத விஷயங்கள் என்று சில உள்ளனர் அதை பற்றி நாம் இந்த ஆன்மீகம் குறித்து தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

மகா சிவராத்திரி

இந்த மகா சிவராத்திரியின் முழு நோக்கமே சிவனின் அருளை பெறுவது மட்டும் தான். அதனால் முறையான விரதத்தை கடைபிடித்து நம் உடலுக்கும் மனதிற்கும் ஓய்வு அளிக்க வேண்டும். ஆம் நம் மனம் முழுவதும் அந்த இறைவன் ஒருவனே நிரம்பி இருக்க வேண்டும் அந்த இறைவனே உணர்வது தான் மகா சிவராத்திரியின் உண்மையான நோக்கம். ஆனால் மகா சிவராத்திரி அன்று இரவு கண் விழித்து சிவனை வழிபட்டு வருவதை நாம் காலங்காலமாக செய்து வருகிறோம். இந்த நாளில் எவர் வேண்டுமானாலும் விரதம் இருக்கலாம் குழந்தைகள் முதல் வயதில் மூத்தவர்கள் வரை விரதம் இருந்து வழிபட்டு வரலாம். ஆனால் வயதானவர்களும் கர்ப்பிணிப் பெண்களும் மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பின் விரதம் இருக்கலாம். அந்த வகையில் என்னென்ன விஷயங்கள் சிவராத்திரி அன்று செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

Advertisement

சிவராத்திரி அன்று செய்ய கூடாது

மகா சிவராத்திரி இன்று பகலில் எக்காரணம் கொண்டும் தூங்க கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Advertisement

மது குடிப்பது புகை பிடிப்பது இன்னும் இருக்கின்ற எந்தவிதமான போதை பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது.

அசைவ உணவுகள் சாப்பிடுவது கண்டிப்பான முறையில் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் நீங்கள் சாப்பிடும் உணவுடன் பூண்டு வெங்காயம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளாமல் தவிர்த்து விடுங்கள்.

இதை செய்தால் பாவத்ததை சேர்க்கும்

நீங்கள் விரதத்தை கடைபிடிக்கும்

Advertisement
போது எப்பொழுதும் பாதியில் கைவிடக்கூடாது இது உங்களுக்கு மிகப்பெரிய பாவத்தை கொண்டு வந்து சேர்க்கக் கூடியது.

சிவராத்திரி விரதம் இருக்கும்போது பாரனை செய்வதற்காக சொல்லப்பட்டுள்ள நேரத்திற்கு முன்பாக விரதத்தை எக்காரணத்தை கொண்டும் நிறைவு செய்து கூடாது.

அதேபோல் இரவு முழுவதும் கண்டுபிடித்திருக்க வேண்டும் என்பதற்காக செல்போன் பயன்படுத்துவது, தியேட்டர் செல்வது, டிவி பார்ப்பது போன்ற நேரத்தை செலவழிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் இதுவும் பாவத்தை சேர்க்கும்.

இப்படி அபிஷேகம் செய்ய கூடாது

நாம் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்கு தேங்காய் தண்ணீர் பயன்படுத்தக் கூடாது அதற்கு பதிலாக இளநீர் மட்டுமே அபிஷேகத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

சிவனுக்கு அபிஷேகம் செய்பவர்கள் வெறும் நெற்றியோடு இருத்தல் கூடாது திருநீறு பூசி இருக்க வேண்டும்.

அதேபோல் பிறர் மனதை நோகடிக்கும் படியான வார்த்தைகளை பேசுவது, கோபப்படுவது, பொய் கூறுவது, ஏமாற்றுவது போன்ற செயல்களை தவிர்த்து விடுங்கள்.

Advertisement
Prem Kumar

Recent Posts

ரிஷப ராசியில் சூரியன் மற்றும் குருவின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெற போகும் சிலர் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன் மற்றும் குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிஷப ராசியில் சேர்கிறார்கள். 2024 வது…

25 நிமிடங்கள் ago

காலை டிபனுக்கு தக்காளி அவல் உப்புமா இப்படி செஞ்சி பாருங்க! அப்புறம் அடிக்கடி செய்வீங்க!

காலை வேளையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் உப்புமா செய்து சாப்பிடுங்கள். உப்புமா என்றதும் வெள்ளை ரவை அல்லது…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 11மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு சாதகமான பலன் தரக்கூடிய நாள். பயணங்கள் மூலம் சில அனுகூல பலன்களை பெறுவீர்கள். ஒட்டிய பக்தர்கள்…

5 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு பக்காவான முள்ளங்கி ஊத்தாப்பம் ஒரு தடவை இப்படி செய்து பாருங்கள்! 2 ஊத்தாப்பம் அதிகமாவே சாப்பிடுவாங்க!

தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால்…

14 மணி நேரங்கள் ago

சப்பாத்தி, புலவுடன் சாப்பிட ருசியான மஷ்ரூம் பட்டாணி கறி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

காளான் பிரியரா நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அதனை ஒரே மாதிரி சமைத்து போர்…

15 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தால் ஏற்படும் நன்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திருதியை திதியை அட்சய திருதியையாக கொண்டாடுகிறோம். அத்தகைய அட்சய திருதியை அன்று…

15 மணி நேரங்கள் ago