Advertisement
ஆன்மிக கதைகள்

மகாபாரத கதையில் சகுனி நல்லவனா ? கெட்டவனா ? பாகம் -1

Advertisement

மகாபாரத போர் என்று எடுத்துக் கொண்டால் அந்தப் போர் நடப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ! அந்த போரை வழிநடத்தி கொண்டு சென்றார் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும்! ஒரு கதைக்கு திருப்புமுனையாக அமைவது ஒரு செய்யும் தவறான் விஷயம் தான்! அந்த வகையில் இந்த பாரத போர் நடப்பதற்கு ஒரு முக்கிய காரணம் என்றால் அது சகுனி தான். என்னதான் சகுனியை நாம் மகாபாரத போரில் ஒரு வில்லனாக பார்த்தாலும் அவனுடைய பக்கத்திலிருந்து அவனுடைய நியாயத்தை நாம் பார்க்கும் போது அதில் சகுனி ஹீரோவாகத்தான் தெரிவார் அப்படி சகுனிக்கு என்ன நடந்தது எப்படி மகாபாரத போர் க்கு ஆரம்பிப்பதற்கும் சகுனிக்கும் என்ன சம்பந்தம்! தொடர்ந்து பாருங்கள்!

சகுனி – 1

இந்த சம்பவம் நடக்கும் போது அஸ்தினாபுரத்தின் அரசனாக இருப்பதற்கு முழு தகுதியும் இருந்தும் அரசனாகாமல் அஸ்தினாபுரத்திற்காகவும் தன்னுடைய வருங்கால வாரிசுகள் நலமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அஸ்தினாபுரத்தை மேலோங்க செய்து கொண்டிருந்தவர்தான் பீஷ்மர். இப்படியே நாட்டு வளர்ச்சி பாதையில் கூட்டி செல்வதில்லையே மும்மரமாக இருந்த பீஷ்மர் அஸ்தினாபுரத்தின் இளவரசர் திருதராஷ்டருரூக்கு மண முடித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. அப்படி இளவரசர் திருதராஷ்டரரூக்கு பெண் பார்க்கும் போது தான் காந்தாரா தேசத்தை சேர்ந்த இளவரசி காந்தாரியை மணம் முடிக்கலாம் என்ற முடிவுக்கு பீஷ்மர் வருகிறார். ஆனால் பீஷ்மர் காந்தார தேசத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் தன்னுடைய ஒற்றர்களை காந்தார தேசத்துக்கு அனுப்பி வெவு பார்க்கத் தொடங்கினார். அப்போது பீஷ்மருக்கு காது கேட்டிய செய்தி அவரை மிகவும் கோபப்படுத்துயதி. அதாவது காந்தாரிக்கு திருமண வாழ்வில் ஒரு தோஷம் இருப்பதாகவும் அந்த தோசப்படி காந்தாரியின் முதல் கணவர் இறந்து விடுவான் என்றும் ஜோதிடம் பார்த்து தெரிய வந்ததால் காந்தாரியன் தந்தை காந்தாரிக்கு முதலில் ஒரு ஆட்டை கல்யாணம் செய்து வைத்து கல்யாணம் முடிந்தவுடன் ஆட்டை வெட்டி கொன்று விடுகிறார். இந்த செய்தி அறிந்த பீஷ்மர் ஒரு ஆட்டுடன் திருமணம் செய்து வைத்து அந்த ஆட்டை வெட்டியதால் இப்போது காந்தரி விதவையாக இருக்கிறாள். ஒரு விதவையை அஸ்தினாபுரத்திற்கு மருமகளாக்குவதா என்ற கோபத்தில் காந்தாரியின் தந்தை மற்றும் சகோதரர்களை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டு அவர்களுக்கு ஒரு நாளைக்கு உணவாக ஒரு கைப்பிடி மட்டும் உணவு கொடுக்க சொல்லியும் உத்தரவு போடுகிறார். அப்படி சிறையில் அடைக்கப்பட்ட காந்தாரியின் தந்தை மற்றும் அவரது சகோதரர்கள் பலர் அதில் ஒருவர்

Advertisement
தான் சகுனியும் கூட இப்படி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் கோபத்தின் உச்சிக்கே எரிமலை போல் பொங்கினர் அப்பொழுது அவர்கள் நம்மில் இருந்து ஒருவர் தப்பிக்க வேண்டும் தப்பித்து இதற்கு அஸ்தினாபுரத்தை பழி தீர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
Advertisement

அப்படி நினைத்தவர்கள் யார் உயிர் பிழைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரும்போது அங்கு இருந்தவர்கள் நம்மில் அதி புத்திசாலியாக இருப்பவன் சகுனி தான் நம்மை விட இளையவனும் கூட அவன் தான் அதனால் அவனை உயிர் பிழைக்க வேண்டும் என்று திட்டமிட்டு ஒரு நாளுக்கு தங்களுக்கு தரப்படும் ஒரு கைப்பிடி உணவையும் சகுனிக்கு கொடுத்து வருகின்றனர். இப்படி சிறைச்சாலையில் உணவில்லாமல் ஓவ்வொருவராக மறைந்து கொண்டே வரும்போது கடைசியில் சாகும் நிலையில் இருக்கும் காந்தாரியின் தந்தை மனதில் ஒரு எண்ணம் தோன்றுகிறது நானும் இறக்க போகிறேன் ஒரு வேளை உயிர் பிழைக்கும் இந்த சகுனி பழி வாங்கும் எண்ணத்தை நாளடைவில் மறந்து விட்டால் என்ன செய்வது அவன் மறக்கக்கூடாது அதற்கு என்ன செய்ய வேண்டும் என நினைத்த காந்தாரியின் தந்தை சகுனியின் ஒரு காலை உடைத்து நொண்டியாக்கி விடுகிறார். காலை உடைத்தவுடன் சகுனியை பார்த்து நீ இப்படி வாழ்க்கை முழுவதும் நொண்டியாக திரியும் போதெல்லாம் பழி தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் உன் மனதில் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்றும் காந்தரின் தந்தையும் மடிந்து போகிறார். தந்தை இறந்த பெரும் கோபத்தில் இருந்த சகுனி தன் தந்தையின் இரண்டு விரல்களை துண்டித்து அதை பகடைக்காயாக மாற்றவும் செய்கிறார் இந்தப் பகடைக்காயை சகுனி எப்பவும் தன்னுடனே வைத்திருப்பார் அவர் என்ன நினைக்கிறாரோ அது மட்டுமே அந்த பகடைக்காயில் செய்யும் என்றால் பழி தீர்க்கவேண்டும் என்ற கோபத்திலேயே இறந்து போன அவருடைய தந்தையின் விரல்கள் அது. இப்படி சிறைச்சாலையில் தன் கண்முன்னே இறந்து போன தந்தை சகோதரர்கள் அவர்களுக்கு நடந்த கொடூரம் தான் உயிர் வாழ அவர்கள் செய்த தியாகம் என அனைத்தையும் நினைத்து பார்த்த சகுனியின் மனத்திற்குற்குள் உலகம் கண்டிராத ஒரு மிகப்பெரிய பாரத போர் நடப்பதற்கான விதை இங்கு போடப்பட்ருக்கிறது அதை போட்டவர் பிஷ்மர் இவர் செய்த இந்த காரியம் தான் மகாபாரத்தின் திருப்பு முனையாக இருக்கிறது

Advertisement

தொடரும்…..

Advertisement
Prem Kumar

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

7 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

13 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

23 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

1 நாள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

1 நாள் ago