இன்று மகாளய அமாவாசை முன்னோர்களுக்காக காலை, மதியம் மற்றும் மாலை செய்ய வேண்டிய வழிபாடு!!

- Advertisement -

முன்னோர்களை வழிபட்டு, அவர்களின் ஆசியை பெறுவதற்குரிய நாள் அமாவாசை. அனைத்து மாதங்களில் வரும் அமாவாசைகளிலும், மற்ற நாட்களிலும் கூட முன்னோர் வழிபாட்டினை மேற்கொள்ளலாம். இருந்தாலும் தை, ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை மிக விசேஷமானது. இந்த மூன்று அமாவாசைகளிலும் விரதம் இருந்து முன்னோர்களை வழிபட முடியாதவர்களும், புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை அன்று மட்டுமாவது முன்னோர்களை நினைத்து கண்டிப்பாக வழிபட வேண்டும்.

-விளம்பரம்-

ஒருவர் இறந்த பிறகு, அடுத்த வரும் அமாவாசையில் இருந்தே அவர்களை நினைத்து நாம் விரதம் இருந்து வழிபட துவங்கி விடலாம். மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்காக விளக்கேற்றி, அவர்களை நினைத்து தானம் கொடுப்பதன் மூலம் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு நற்கதி கிடைக்கிறது என்பது நம்பிக்கை. அவர்களுக்கு பிறவா நிலை என்னும் சொர்க்க பதவியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

- Advertisement -

மகாளய அமாவாசை விரதம் யாரெல்லாம் இருக்கலாம் ?

தாயோ தந்தையோ இல்லாத ஆண்கள் கண்டிப்பாக இந்த விரதம் மேற்கொள்ள வேண்டும். இரண்டு ‌பேரும் இல்லை என்பவர்கள் இந்த விரதம் கண்டிப்பாக இருக்க வேண்டும். குழந்தைகளில் ஏதேனும்‌ஒரு குழந்தை தவறியவர்கள், மனைவி தவறிய ஆண்கள் அனைவரும் இந்த விரதம் இருக்க வேண்டும். பெண்கள் கணவன் உயிருடன் இருக்கும் வரை இந்த விரதத்தை மேற்கொள்ள கூடாது. எள்ளும் தண்ணீரும் இரைப்பதோ, விரதம் இருப்பதோ, எதனையும் கணவன் உள்ள பெண்கள் செய்ய கூடாது.

வெளியில் சென்று ‌இந்த விரதம்‌ கடைபிடிக்கலாமா?

கடற்கரை தளங்களுக்குச் சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. குளத்தோடு அமைந்திருக்கும் கோயில்களுக்குச் சென்றும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். வசதி இல்லாதவர்கள், என்னால் கோவிலுக்கு சென்று வழிபட முடியாது என்று சொல்பவர்கள் வீட்டிலேயே இந்த வழிபாட்டை செய்யலாம்.

வீட்டிலேயே விரதம் எப்படி மேற்கொள்ள வேண்டும்?

அமாவாசை தினத்தில் காலையில் எழுந்தவுடன் குளித்து விட்டு 6 மணிக்கு மேல் எள்ளையும் தண்ணீரையும் சூரிய பகவானை பார்த்து மனதிற்குள் காசி காசி என்று சொல்லிக் கொண்டே நம் முன்னோர்கள் அனைவரையும் மனதில் நினைத்துக் கொண்டே இரைக்க வேண்டும். இரைத்த அந்த நீரை வீட்டு சின்க்கில் ஊற வேண்டும். பின்னர் விரதம் இருந்து வீட்டு பூஜை அறையில் சாமி படத்திற்கு முன்னால் ‌விளக்கு ஏற்றி, முன்னோர்களின் படத்திற்கு முன்னால் ஒரு விளக்கையும் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

-விளம்பரம்-

அதன்பிறகு முன்னோர்களின் படத்திற்கு முன்னால் வாழையிலை போட்டு அவர்களுக்கு பிடித்த உணவுகள் அனைத்தையும் வைத்து, சாம்பிராணி காட்டி, காக்கைக்கு சாப்பாடு வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பூஜையறையில் வைத்து வழிபடக் கூடாது. ஒருவேளை கணவன்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளவில்லை, எங்களுக்கு பித்ரு தோஷம் உள்ளது என்று கூறும் பெண்கள் தாராளமாக இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

படையல் போடும் நேரம்

காலை 10.45 மணி முதல் 1.20 வரை படையல் போட்டுக்கலாம். படையல் போட்டு முடித்த பின்‌ வரதம்‌ இருப்பவர்கள் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். பிறகு மாலை 6 மணிக்கு பிறகு வீட்டிலோ அல்லது கோவிலிலோ முன்னோர்கள் பெயரில் விளக்கேற்றி, வழிபட வேண்டும்.

அன்னதானம்

இந்த மகாளய பட்ச அமாவாசையில் ஏழை குழந்தைகள், ஆதரவற்றோர்கள், பசியால் வாடுபவர்கள், வீடு வாசல் இல்லாதவர்கள் ஆகியோர்களுக்கு வயிறார அன்னதானம் செய்ய வேண்டும். மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல் காகம், பசு, பூனை, நாய் ஆகிய ஜீவராசிகளுக்கும் அன்னத்தை ஈட்டு நாம் செய்த பாவங்களை போக்கிக் கொள்ளலாம். அன்னதானம் தர இயலாதவர்கள் பசு மாட்டிற்கு வாழைப்பழங்கள் அல்லது அகத்திக்கீரை கொடுக்கலாம்.

-விளம்பரம்-

மகாளய அமாவாசை 2023 தேதி

இந்த ஆண்டு மகாளய பட்சம் செப்டம்பர் 30 ம் தேதி துவங்கி, அக்டோபர் 14 ம் தேதி வரை உள்ளது. அக்டோபர் 14 ம் தேதி மகாளய அமாவாசை வருகிறது. அக்டோபர் 13 ம் தேதி இரவு 10.41 மணி துவங்கி, அக்டோபர் 14 ம் தேதி இரவு 11.57 வரை அமாவாசை திதி உள்ளது. அன்றைய தினம் புரட்டாசி கடைசி சனிக்கிழமையும் சேர்ந்து வருவதால் இந்த நாள் இன்னும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது‌.

இதனையும் படியுங்கள் : யார் யாரெல்லாம் வியாழன் கிழமை குரு பகவானுக்கு விரதம் இருந்து வழிபடலாம்!