சிக்கன் ரோஸ்ட் இவ்வளவு டேஸ்ட்டா செய்ய முடியுமான்னு அது இந்த மலபார் சிக்கன் ரோஸ்ட் தான்!

- Advertisement -

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான சமையல் முறையை பின்பற்றுகின்றனர். ஒவ்வொருவரும் அவரவருக்கென்று இருக்கும் கைப்பக்குவம், மற்றும் மசாலா அரைக்கும் பக்குவம் இவற்றை பொறுப்பு செய்யும் சமையலில் சுவை வேறுபடும். இவ்வாறு மலபாரில் செய்யும் சிக்கன் ரோஸ்ட் மிகவும் காரமாகவும் சுவையாகவும் இருக்கும். இந்த மலபார் சிக்கன் ரோஸ்ட் நீங்களும் சுவைக்க வேண்டும் என்றால் இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

சிக்கன் பிரியர்களுக்கு அதை சமைப்பதில் இருக்கும் சிரமங்கள் ஏராளம்! ஆனால் பொதுவாக பார்த்து பார்த்து பக்குவமாக மசாலாக்களை சேர்த்து செய்யும் மலபார் சிக்கன் ரோஸ்ட் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப செய்யப்படுவது வழக்கம். சமையல் தெரியாதவர்கள் கூட ரொம்பவே சுலபமாக விரும்பி செய்யக்கூடிய இந்த சிக்கன் சமையல் செய்வதற்கு பத்து நிமிடம் கூட ஆகாது! ரொம்ப ரொம்ப நேரம் குறைவாக செய்யக்கூடிய இந்த அருமையான மலபார் சிக்கன் ரோஸ்ட் எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

- Advertisement -
Print
No ratings yet

மலபார் சிக்கன் ரோஸ்ட் | Malabar Chicken Roast Recipe In Tamil

சிக்கன் பிரியர்களுக்கு அதை சமைப்பதில் இருக்கும் சிரமங்கள் ஏராளம்! ஆனால் பொதுவாக பார்த்து பார்த்து பக்குவமாகமசாலாக்களை சேர்த்து செய்யும் சிக்கன் ரோஸ்ட் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப செய்யப்படுவதுவழக்கம். சமையல் தெரியாதவர்கள் கூட ரொம்பவே சுலபமாக விரும்பி செய்யக்கூடிய இந்த சிக்கன்சமையல் செய்வதற்கு பத்து நிமிடம் கூட ஆகாது! ரொம்ப ரொம்ப நேரம் குறைவாக செய்யக்கூடியஇந்த அருமையான மலபார் சிக்கன் ரோஸ்ட் எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம்இனி பார்க்க இருக்கிறோம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: LUNCH, starters
Cuisine: Kerala
Keyword: Malabar Chicken Roast
Yield: 4
Calories: 230kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 6 சிக்கன் லெக்பீஸ்
  • 2 வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 2 பச்சை மிளகாய் நீளமாக கீறியது
  • 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் மிளகுத் தூள்
  • எண்ணெய் தேவையான அளவு

சிக்கன் ஊற வைப்பதற்கு

  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 2 டீஸ்பூன் சோள மாவு
  • 1 டீஸ்பூன் அரிசி மாவு
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை

செய்முறை

  •  
    முதலில் சிக்கன் லெக் பீஸை நீரில் சுத்தமாக கழுவி, அதில் ஆங்காங்கே கத்தியால் கீறி விட வேண்டும்
     
  • பின் ஒரு பாத்திரத்தில் சிக்கன் லெக் வைப்பதற்கு கொடுத்துள்ள பீஸை வைத்து, அதில் ஊற பொருட்களைசேர்த்து பிரட்டி, 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்
  • பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு நன்கு பொரித்து எடுக்க வேண்டும்
  • பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பச்சை மிளகாய்மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு 1 நிமிடம் வதக்கவும்
     
  • பின் அதில் வெங்காயத்தை சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும் . அடுத்து அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து. அதோடு மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், மலபார் சிக்கன் ரோஸ்ட் ரெடி!!!

Nutrition

Serving: 300g | Calories: 230kcal | Carbohydrates: 8g | Protein: 46g | Fat: 12g | Saturated Fat: 4.3g | Cholesterol: 67mg | Sodium: 37mg | Potassium: 1050mg