- Advertisement -
மணத்தக்காளி தண்டு சூப் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த சூப் செய்து சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு கொடுத்தால் உடலுக்கு ஆரோக்கியானதும் கூட.
-விளம்பரம்-
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
- Advertisement -
மணத்தக்காளி தண்டு சூப் | Manathakali Thandu Soup Recipe In Tamil
மணத்தக்காளி தண்டு சூப் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த சூப் செய்து சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு கொடுத்தால் உடலுக்கு ஆரோக்கியானதும் கூட.எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- கடாய்
தேவையான பொருட்கள்
- மணத்தக்காளி தண்டு ஒரு கைப்பிடி
- 2 தக்காளி
- 5 சின்ன வெங்காயம்
- 4 பல் பூண்டு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 10 மிளகு பொடித்து கொள்ளவும்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் மணத்தக்காளிக் கீரையை ஆய்ந்த பிறகு, கையால் ஒடிக்கக் கூடிய அளவிற்கு பிஞ்சாக இருக்கும் தண்டை தனியாக ஒடித்து சுத்தம் செய்து வைக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- பிறகு சீரகம் மற்றும் மிளகை நைசாகப் பொடி செய்து கொள்ளவும். வெங்காயம் மற்றும் பூண்டை தட்டி வைக்கவும்.
- அடுத்து கீரைத் தண்டு, தக்காளி, பொடி செய்த சீரகம், மிளகு, நசுக்கிய பூண்டு, வெங்காயம், உப்பு மற்றும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து 5, 6 விசில் வேக விட்டு எடுக்கவும்.
- சுவையான மணத்தக்காளி தண்டு சூப் தயார். கீரைத் தண்டைத் தனியாக எடுத்து விட்டு சூப்பை பரிமாறவும்.
- தண்ணீருக்குப் பதில் பருப்பு வேக வைத்த தண்ணீர் சேர்த்தும் செய்யலாம்.