சூப்பரான மாங்காய் துவையல் இது போன்று ஒரு முறை செய்து பாருங்க! ரச சாதம், சாம்பார் சாதமுடன் சாப்பிட பக்காவாக இருக்கும்!

- Advertisement -

கோடை காலம் வந்து விட்டது. எனவே மாம்பழம் சீசன் என்பதால் உங்களுக்கு தாராளமாக கிடைக்கும். இதற்காக நீங்கள் தேடி தேடி அலைய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மாங்காயை அப்படியே எடுத்தால் புளிப்புச் சுவையுடன் சிறந்த டேஸ்ட்டை கொடுக்கும். இதுவே பழுத்த மாம்பழம் என்றால் நீங்கள் தித்திக்கும் சுவையை பெற முடியும். பொதுவாக மாங்காய் நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர். மாங்காய் ஊறுகாய், மாங்காய் பச்சடி, மாங்காய் சாம்பார் என மாங்காயை வைத்து பல ரெசிபிக்களை செய்திருப்போம். இந்த முறை மாங்காயை வைத்து செய்யக்கூடிய ஒரு புது ரெசிப்பி பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். மாங்காய் மற்றும் தேங்காயை பயன்படுத்தி ஒரு சூப்பரான துவையல் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம். தொற்று நோய்களிலிருந்து நம்மை காக்க வேண்டும் என்றால் நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் மாங்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளன. எனவே உங்கள் வீட்டில் சாதம், பருப்பு போன்ற பாரம்பரிய உணவுடன் இனி ஒரு ஸ்பூன் மாங்காய் துவயலை சேர்த்துக் கொள்ளும். இது ஊட்டச்சத்துக்களுடன் உங்களுக்கு நோயெதிரிப்பு சக்தியை வழங்கவும் உதவி செய்யும். எனவே இந்த மாங்காயை கொண்டு தயாரிக்கும் துவையல் நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதை சாதத்துக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். சூடான சாதம் மற்றும் நெய்யுடன் பரிமாற நன்றாக இருக்கும். இதற்கு தேவையான பொருட்கள், துருவிய தேங்காய் மற்றும் மாங்காய்தான். இதைச் செய்வதும் மிக எளிதானது. இதை 15 நிமிடங்களில் செய்துவிடலாம். இந்த துவையலுக்கு நாம் தேங்காய் பயன்படுத்துவதால் இதை நாம் நீண்ட நாட்கள் வைத்துக்கொள்ள முடியாது. இதை ஒரு நாளில் அரைத்து சாப்பிட்டு முடித்துவிடவேண்டும். இதை இட்லி, தோசைக்கும் சாப்பிடலாம். இன்று மாங்காய் துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

- Advertisement -
Print
4 from 1 vote

மாங்காய் துவையல் | Mangai Thuvaiyal Recipe In Tamil

கோடை காலம் வந்து விட்டது. எனவே மாம்பழம் சீசன் என்பதால் உங்களுக்கு தாராளமாக கிடைக்கும். இதற்காக நீங்கள் தேடி தேடி அலைய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மாங்காயை அப்படியே எடுத்தால் புளிப்புச் சுவையுடன் சிறந்த டேஸ்ட்டை கொடுக்கும். இதுவே பழுத்த மாம்பழம் என்றால் நீங்கள் தித்திக்கும் சுவையை பெற முடியும். பொதுவாக மாங்காய் நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்.
மாங்காய் ஊறுகாய், மாங்காய் பச்சடி, மாங்காய் சாம்பார் என மாங்காயை வைத்து பல ரெசிபிக்களை செய்திருப்போம். இந்த முறை மாங்காயை வைத்து செய்யக்கூடிய ஒரு புது ரெசிப்பி பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். மாங்காய் மற்றும் தேங்காயை பயன்படுத்தி ஒரு சூப்பரான துவையல் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH, thuvayal
Cuisine: Indian
Keyword: Mangai Thuvaiyal
Yield: 4 People
Calories: 99kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 பெரிய மாங்காய்
  • 1/2 கப் தேங்காய்
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 2 வர ‌மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • நல்லெண்ணை தேவையான அளவு

வறுக்க :

  • 2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 8 வர ‌மிளகாய்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

  • முதலில் மாங்காயை சுத்தம் செய்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை‌ அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் மாங்காய், தேங்காய், பச்சை மிளகாய், வர மிளகாய், கறிவேப்பிலை, சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் அதே எண்ணெயில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து கருகாமல் சிவக்க வறுத்து எடுத்து ஆற விடவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் நாம் வறுத்த அனைத்தையும் சேர்த்து அதனுடன் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, பெருங்காயத்தூள், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் நாம் அரைத்து வைத்துள்ள கலவையை தாளிப்புடன் சேர்த்து கலந்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான, சுலபமான, மாங்காய் துவையல் தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 99kcal | Carbohydrates: 2.5g | Protein: 7.4g | Fat: 1.6g | Sodium: 26mg | Potassium: 277mg | Fiber: 2.6g | Vitamin A: 76IU | Vitamin C: 60.1mg | Calcium: 14mg | Iron: 5.3mg

இதனையும் படியுங்கள் : இட்லி, தோசைக்கு ஏற்ற ருசியான மாங்காய் மிளகாய் சட்னி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!