வித்தியாசமான ஸ்நாக்ஸ் சாப்பிட நினைத்தால் சுவையான இந்த மாம்பழ பிரெட் டோஸ்ட் ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

இப்போ ஸ்கூலுக்கு போற குழந்தைங்க, காலேஜுக்கு போற பிள்ளைங்க ஆபீஸ்க்கு போறவங்க எல்லாருமே ஈவினிங் ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் இல்ல அப்படின்னு யோசிப்பாங்க. மாலை நேரத்தில் சுட சுட டீ காபி இல்ல நா பாலோட ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிட்டால் ரொம்பவே சூப்பரா அந்த ஈவினிங் போகும்.

-விளம்பரம்-

ஆனா எப்ப பார்த்தாலும் பஜ்ஜி ,பக்கோடா ,ரோல், போண்டா, வடை அப்படின்னு சாப்பிட்டு ரொம்பவே போர் அடிச்சு போயிருக்கும். அவங்க எல்லாரும் டிஃபரண்டா ஏதாவது ஸ்னாக்ஸ் செஞ்சு சாப்பிடணும்னு யோசிச்சுக்கிட்டே இருப்பாங்க. அவங்களுக்காக தான் இப்ப நம்ம ஒரு சூப்பரான சுவையான மாம்பழ பிரட் டோஸ்ட் பாக்க போறோம். பிரட் வச்சு நம்ம நிறைய ஸ்னாக்ஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம்.

- Advertisement -

பிரட் டோஸ்ட், பிரட் ஆம்லெட் ,பிரட் சாண்ட்விச் அப்படின்னு பிரட் வச்சு செய்யக்கூடிய எக்கச்சக்கமான ஸ்நாக்ஸ் இருந்தாலும் இப்ப நம்ம செய்ய போற இந்த மாம்பழ பிரட் டோஸ்ட் நீங்க இதுவரைக்கும் சாப்பிட்டு பாக்காத வகையில் ஒரு சூப்பரான ஸ்நாக்ஸா இருக்கும். மாம்பழம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அப்படின்னா கண்டிப்பா நீங்க இத ட்ரை பண்ணி பார்க்கலாம்.

மாம்பழம் பிடிக்கும் ஆனால் சில பேருக்கு ஒழுங்கா சாப்பிட தெரியாது அவங்களுக்கு எல்லாத்துக்கும் இந்த பிரட் டோஸ்ட் செஞ்சு கொடுத்தீங்கன்னா ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. ஒரு தடவை உங்க வீட்டுல இந்த ஸ்னாக்ஸை ட்ரை பண்ணி பார்த்தா போதும் அடிக்கடி குழந்தைகள் இது உங்க கிட்ட கேட்டுகிட்டே இருப்பாங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் தான் இந்த மாம்பழ பிரட் டோஸ்ட். இப்ப வாங்க இந்த சுவையான மாம்பழ பிரட் டோஸ்ட் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
No ratings yet

மாம்பழ பிரெட் டோஸ்ட் | Mango Bread Toast Recipe In Tamil

மாம்பழம் பிடிக்கும் ஆனால் சில பேருக்கு ஒழுங்கா சாப்பிட தெரியாது அவங்களுக்கு எல்லாத்துக்கும் இந்த பிரட் டோஸ்ட் செஞ்சு கொடுத்தீங்கன்னா ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.  மாம்பழம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அப்படின்னா கண்டிப்பா நீங்க இத ட்ரை பண்ணி பார்க்கலாம். ஒரு தடவை உங்க வீட்டுல இந்த ஸ்னாக்ஸை ட்ரை பண்ணி பார்த்தா போதும் அடிக்கடி குழந்தைகள் இது உங்க கிட்ட கேட்டுகிட்டே இருப்பாங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் தான் இந்த மாம்பழ பிரட் டோஸ்ட். இப்ப வாங்க இந்த சுவையான மாம்பழ பிரட் டோஸ்ட் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Mango Bread Toast
Yield: 4
Calories: 60kcal

Equipment

  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 1 மாம்பழம்
  • 1 முட்டை
  • 1 கப் பால்
  • 1 பாக்கெட் பிரட்
  • 2 டீஸ்பூன் தேன்
  • 2 ஏலக்காய்
  • 1 பட்டை
  • 1 டீஸ்பூன் வெண்ணெய்

செய்முறை

  • முதலில் பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். ஏலக்காய் மற்றும் பட்டையை பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்.
  •  
    மாம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டை மற்றும் பாலை சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  • பொடியாக்கி வைத்துள்ள ஏலக்காய் பட்டை தூளை அதனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். தேனையும் சேர்த்துக் கொள்ளவும்.
  • பிரட் துண்டுகளை பால் முட்டை கலவையில் முக்கி எடுத்து தோசை கல்லில் வெண்ணெய் சேர்த்து இரண்டு பக்கமும் நன்றாக டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  • நறுக்கி வைத்துள்ள மாம்பழ துண்டுகளை துண்டுகளுக்கு இடையே வைத்து பரிமாறினால் சுவையான மாம்பழ பிரட் டோஸ்ட் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 60kcal | Carbohydrates: 17g | Protein: 10g | Fat: 0.9g | Sodium: 21mg | Potassium: 382mg | Fiber: 7g

இதையும் படியுங்கள் : மாம்பழம் வைத்து இப்படி ஜாம் கூட செய்யலாமா? மாம்பழ  ஜாம் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!!

-விளம்பரம்-