இனி இட்லி, தோசை செய்யும் போது கல்யாண வீட்டு ஸ்டைல் இட்லி சாம்பார் இப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

சாம்பார் ஒரு நாளையில் எத்தனை முறை கொடுத்தாலும் சாப்பிட கூடிய ஒரு உணவு. தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் பல வகைகளில் சாம்பார் தயாரிக்கப்படுகின்றது. உணவில் நிறைய வகைகள் இருந்தாலும், சைவ பிரியர்கள், அசைவ பிரியர்கள் அனைவரும் சாப்பிடும் குழம்பாக சாம்பார் உள்ளது. சாம்பாரில் சேர்க்கப்படும் பருப்பு வகைகளில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. இது ஒரு கூட்டுக்கலவை என்பதால் ஊட்டச்சத்துகளின் ஒரு மொத்த கலவையாக உள்ளது. இந்த சாம்பாரை நாம் வீட்டில் வைத்து சைடிஷாக உருளைக்கிழங்கு வறுவல் இருந்தால் போதும் அப்படி சாப்பிடுவோம். அது போல கல்யாண வீட்டு சாம்பார் சொல்லவே வேணாம் ருசியோ ருசியாக இருக்கும். எப்படி தான் வைக்கிறார்கள் என்று பலரும் சிந்திப்பீர்கள். ஆரோக்கியமாகவும், சுவையாகவும் சாம்பார் தயாரிக்க அதில் சில பொருட்களை சேர்க்க வேண்டும். இன்று நாம் ஆரோக்கியமான கல்யாண வீட்டு இட்லி சாம்பாரை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

-விளம்பரம்-

தமிழ் திருமணங்களில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள் வாழை இலையில் பரிமாறப்படும் உணவை ஒருபோதும் தவறவிடுவதில்லை. வாழை இலையில் வெவ்வேறு உணவு பண்டங்கள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு பரிமாறப்படும். முக்கியமாக கல்யாண வீட்டு இட்லி சாம்பார். திருமணங்களில் பரிமாறப்படும் சாம்பார் வீட்டில் வைக்கும் வழக்கமான சாம்பாரை விட கெட்டியாகவும் காய்கறிகள் அதிகமாகவும் சேர்க்கப்பட்டிருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட காய்கறிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால் இது கதம்ப சாம்பார் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த விருந்து சாம்பாரை நம்முடைய வீட்டிலும் மணக்க மணக்க செய்யலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆசையாக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். இந்த கல்யாண வீட்டு சாம்பார் இட்லி, தோசை, சப்பாத்தி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அதன் ருசி அருமையாக இருக்கும்.

- Advertisement -
Print
No ratings yet

கல்யாண வீட்டு இட்லி சாம்பார் | Marriage Style Idly Sambar Recipe In Tamil

சாம்பார் ஒரு நாளையில் எத்தனை முறை கொடுத்தாலும் சாப்பிட கூடிய ஒரு உணவு. தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் பல வகைகளில் சாம்பார் தயாரிக்கப்படுகின்றது. உணவில் நிறைய வகைகள் இருந்தாலும், சைவ பிரியர்கள், அசைவ பிரியர்கள் அனைவரும் சாப்பிடும் குழம்பாக சாம்பார் உள்ளது. சாம்பாரில் சேர்க்கப்படும் பருப்பு வகைகளில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. இது ஒரு கூட்டுக்கலவை என்பதால் ஊட்டச்சத்துகளின் ஒரு மொத்த கலவையாக உள்ளது. இந்த சாம்பாரை நாம் வீட்டில் வைத்து சைடிஷாக உருளைக்கிழங்கு வறுவல் இருந்தால் போதும் அப்படி சாப்பிடுவோம். அது போல கல்யாண வீட்டு சாம்பார் சொல்லவே வேணாம் ருசியோ ருசியாக இருக்கும். எப்படி தான் வைக்கிறார்கள் என்று பலரும் சிந்திப்பீர்கள். ஆரோக்கியமாகவும், சுவையாகவும் சாம்பார் தயாரிக்க அதில் சில பொருட்களை சேர்க்க வேண்டும். இன்று நாம் ஆரோக்கியமான கல்யாண வீட்டு இட்லி சாம்பாரை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: dinner
Cuisine: Indian
Keyword: Marriage Style Idly Sambar
Yield: 4 People
Calories: 25kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 குக்கர்
  • 1 பவுள்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் பாசிப்பருப்பு
  • 1/4 கப் துவரம் பருப்பு
  • 1/2 கப் சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 டீஸ்பூன் சாம்பார் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 2 கேரட்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • கறிவேப்பில்லை, கொத்தமல்லி சிறிதளவு
  • 3 பச்சை மிளகாய் உளுந்தம்பருப்பு

அரைக்க :

  • 1 டீஸ்பூன் தனியா
  • 2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 2 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு
  • 10 வர ‌மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்

செய்முறை

  • முதலில் பாசி பருப்பையும், துவரம் பருப்பையும் நன்கு சுத்தம் செய்து ஊற வைத்து ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, தக்காளி,‌ பச்சை மிளகாய் சேர்த்து மூன்று விசில் விட்டு குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
  • இவை ஆறினதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் சின்ன வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கேரட்டை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம், வர மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் கேரட்டை சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிட்டு, அரைத்த விழுதை சேர்த்து கலந்து அதனுடன் அரைத்த பொடி மற்றும் சாம்பார் பொடி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  • குழம்பு ஒன்று சேர கொதித்ததும் அடுப்பை அணைத்து, நறுக்கின கொத்தமல்லி தழை, நெய், பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான கல்யாண வீட்டு இட்லி சாம்பார் தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 25kcal | Carbohydrates: 6g | Protein: 7.8g | Fat: 1.24g | Sodium: 69mg | Potassium: 320mg | Fiber: 2.5g | Vitamin A: 35IU | Vitamin C: 6.22mg | Calcium: 69mg | Iron: 3.3mg

இதனையும் படியுங்கள் : கல்யாணவீட்டு ரவை கேசரி சுவை மாறமல் ஒரு முறை இப்படி வீட்டிலயே செய்து பாருங்க! ஆஹா இதன் சுவையே தனி தான்!