சண்டே ஸ்பெஷலாக ஈவினிங் ஸ்நாக்ஸாக மசாலா முட்டை போண்டா இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

டீ கடைக்கு போனாலே நம்ம எல்லாம் விரும்பி சாப்பிடுறது முட்டை போண்டா தான். அந்த முட்டை போண்டாவை மசாலா சேர்த்து சாப்பிட்டா எப்படி இருக்கும். இந்த மாதிரி சுவையான முட்டை போண்டாவை ரொம்பவே ஈசியா கடைகளில் கிடைக்கிற சுவைல வீட்ல சூப்பரா சுலபமா பண்ணிடலாம். இந்த மாதிரி சுவையான முட்டை போண்டாவை சாப்டே இருக்க மாட்டீங்க.

-விளம்பரம்-

எப்போதுமே முழுசான முட்டையில யாருமே முட்டை போண்டா போட மாட்டாங்க காரணம் போட்டோ வெடிச்சிடும் அதனால தான் எப்போதுமே முட்டை போண்டாக்குல பாதி முட்டை தான் வச்சு போடுவாங்க. ஆனால் இப்போ முழு முட்டைல சின்னதா ரெண்டு கீறு கீறி அதுக்குள்ள மசாலா வைத்து போண்டா போட்டோம்னா முட்டையும் வெடிக்காது சாப்பிட சும்மா சூப்பரா இருக்கும். அந்த மாதிரி சுவையான முட்டை போண்டா சாப்பிட்டு இருக்க மாட்டாங்க அந்தளவுக்கு இருக்கும் இந்த முட்டை போண்டாவோட டேஸ்ட்.

- Advertisement -

அதுவும் மழை பெய்துட்டு இருக்க டைம்ல இந்த மாதிரி போண்டா எல்லாம் போட்டு கொடுத்தோம்னா மழைக்கு அதுக்கு சும்மா சுட சுட சுட சாப்பிடோம்னா சூப்பரான சுவையில இருக்கும் இந்த மசாலா முட்டை போண்டா. முட்டை போண்டா அப்படினாலே எல்லாருக்கும் பிடிக்கும். சிலருக்கு வேக வைத்த முட்டை பிடிக்காத அப்படி வேகவைத்த முட்டை பிடிக்காதவங்களுக்கு இந்த மாதிரி மசாலா முட்டை போண்டா பண்ணி கொடுத்தோம்னா சும்மா சூப்பரா ரசித்து சாப்பிடுவாங்க. அந்த அளவுக்கு சுவையா இருக்கு இந்த மசாலா முட்டை போண்டா. இந்த டேஸ்டான சுவையான மசாலா முட்டை போண்டா எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

Print
5 from 1 vote

மசாலா முட்டை போண்டா | Masala Egg Bonda Recipe in Tamil

டீ கடைக்கு போனாலே நம்ம எல்லாம் விரும்பி சாப்பிடுறது முட்டை போண்டா தான். அந்த முட்டை போண்டாவை மசாலா சேர்த்து சாப்பிட்டா எப்படி இருக்கும். இந்த மாதிரி சுவையான முட்டை போண்டாவை ரொம்பவே ஈசியா கடைகளில் கிடைக்கிற சுவைல வீட்ல சூப்பரா சுலபமா பண்ணிடலாம். இந்த மாதிரி சுவையான முட்டை போண்டாவை சாப்டே இருக்க மாட்டீங்க. எப்போதுமே முழுசான முட்டையில யாருமே முட்டை போண்டா போட மாட்டாங்க காரணம் போட்டோ வெடிச்சிடும் அதனால தான் எப்போதுமே முட்டை போண்டாக்குல பாதி முட்டை தான் வச்சு போடுவாங்க.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: evening, snacks
Cuisine: tamilnadu
Keyword: Boiled Egg Dosa, Butter prawn Egg Masala, Chilly Egg, Kaadai Muttai, muttai kulambu
Yield: 6 people
Calories: 247kcal
Cost: 100

Equipment

 • 1 கடாய்
 • 1 வாணலி
 • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

 • 6 முட்டை
 • 2 வெங்காயம்
 • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
 • 1/2 ஸ்பூன் மிளகாய்தூள்
 • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
 • 1 கப் பஜ்ஜி மாவு
 • எண்ணெய் தேவையான அளவு
 • உப்பு தேவையான அளவு

செய்முறை

 • முதலில் முட்டையை வேகவைத்து முட்டை ஓடை உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து நீளவாக்கில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
 • பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்.
 • அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வதக்கி பச்சை வாசனை சென்று சுருண்டு வரும் பொழுது அடுப்பை அணைத்து விட வேண்டும்.
 • பிறகு வேகவைத்து உரித்து எடுத்து வைத்துள்ள முட்டையை முழுவதுமாக நறுக்காமல் மேலே மட்டும் நான்காக கீறீ முட்டைக்குள் மசாலாவை ஸ்டஃப் செய்ய வேண்டும்.
 • பிறகு ஒரு பாத்திரத்தில் பஜ்ஜி மாவை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி போண்டா சுடுவதற்கான மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 • இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலாக்களை ஸ்டப் செய்து வைத்துள்ள முட்டையை பஜ்ஜி மாவில் நனைத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மசாலா முட்டை போண்டா தயார்.

Nutrition

Calories: 247kcal | Carbohydrates: 12g | Protein: 16g | Fat: 19g

இதையும் படியுங்கள்: சுவையான அப்பல்லோ பேபிகான் வறுவல் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்களேன்! இந்த பேபிகான் வறுவல் சுவைக்கு நாக்கு அடிமையாகிவிடும்!!!