காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் ருசியான பிராசதம் மிளஹோரை இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

இந்த மிளஹோரை காஞ்சிபுரம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. இது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படும். மிளஹோரை நகரின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக விளங்குகிறது. இது மிளகால் சமைக்கப்படுகிறது. அடிக்கடி மிளகை உணவில் சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறுவார்கள். ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்கிற பழமொழி கடுகை குறிப்பது அல்ல! உண்மையில் அது மிளகை குறிப்பது ஆகும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் :ருசியான பட்டாணி சீரக சாதம் காலை டிபன் பாக்ஸ் ரெசிபியாக இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

- Advertisement -

மிளகு சமையலுக்கு சேர்க்கப்படும் ஒரு வகை பொருள் மட்டுமல்ல, அது ஒரு மூலிகை விதையாகவும் இருக்கிறது. வெறும் சுவைக்காக உணவுப் பொருள் என்றில்லாமல், உடல் நலத்திற்கான உணவுப் பொருள் என மக்கள் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் மிளகு சாதம், உணவே மருந்து வகையறாதான்.

Print
5 from 1 vote

மிளஹோரை | Milagorai Recipe in Tamil

இந்த மிளஹோரை காஞ்சிபுரம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. இது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படும். மிளஹோரை நகரின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக விளங்குகிறது. இது மிளகால் சமைக்கப்படுகிறது. அடிக்கடி மிளகை உணவில் சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறுவார்கள். ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்கிற பழமொழி கடுகை குறிப்பது அல்ல! உண்மையில் அது மிளகை குறிப்பது ஆகும். மிளகு சமையலுக்கு சேர்க்கப்படும் ஒரு வகை பொருள் மட்டுமல்ல, அது ஒரு மூலிகை விதையாகவும் இருக்கிறது.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian
Keyword: Milagorai
Yield: 4 People
Calories: 17kcal

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ பாசுமதி அரிசி
  • 1/4 கப் முந்திரி
  • 3 டேபிள் ஸ்பூன் நெய்
  • 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 7 கப் தண்ணீர்
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
  • உப்பு தேவையான
  • 1/2 கப் கறிவேப்பிலை, கொத்தமல்லி

செய்முறை

  • முதலில் மிளகை கொரகரப்பாக பொடி பண்ணி வைத்துக் கொள்ளவும். பின் முந்திரிப்பருப்பை சிறியதாக உடைத்து வைத்துக் கொள்ளவும்.
  • அரிசியை நன்றாக அலசி அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு குக்கரில் வைத்து 3 விசில் விட்டு அணைத்து விடவும்.
  • சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு கிளறி விடவும்.
  • ஒரு கடாயில் நெய் விட்டு சீரகம் தாளித்து முந்திரிப் பருப்பு, கருவேப்பிலை இவற்றை சேர்த்து மிளகுப் பொடியும் போட்டு நன்கு பொரித்து வைக்கவும்.
  • இப்பொழுது ஆறிய சாதத்தில் தாளிப்பு பொருட்களை சேர்த்து உப்பு போட்டு கலந்து விடவும்.
  • இப்பொழுது சுவையான காரசாரமான மிளஹோரை தயார். இது குளிர் காலத்திற்கும் ஜலதோஷம், இருமல் இவற்றிற்கும் சாப்பிட நன்றாக இருக்கும்.

Nutrition

Serving: 700g | Calories: 17kcal | Carbohydrates: 4.4g | Protein: 0.7g | Fat: 3.2g | Saturated Fat: 1.2g | Sodium: 32mg | Fiber: 1.8g | Vitamin A: 299IU | Vitamin C: 21mg | Calcium: 437mg | Iron: 28.86mg