வீட்டில் கத்திரிக்காய் இருந்தால் இது போன்று செட்டிநாடு சுவையில் மிளகு கத்திரிக்காய் செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசான சுவையில் இருக்கும். மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
-விளம்பரம்-
எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
மிளகு கத்திரிக்காய் | Milagu Kathirikai Recipe In Tamil
வீட்டில் கத்திரிக்காய் இருந்தால் இது போன்று செட்டிநாடு சுவையில் மிளகு கத்திரிக்காய் செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசான சுவையில் இருக்கும். மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.எப்படி இந்த ரெசிபி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- கடாய்
தேவையான பொருட்கள்
- 4 கத்திரிக்காய்
- 15 சின்ன வெங்காயம்
- 1 தக்காளி
- 5 பல் பூண்டு
- இஞ்சி சிறிய துண்டு
- 1 டீஸ்பூன் சாம்பார் பொடி
- 2 டீஸ்பூன் மிளகு தூள்
- ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- ½ டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் சோம்பு
- கறிவேப்பிலை கொஞ்சம்
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கவும். கத்தரிக்காயை நீளமாக நறுக்கவும்.
- அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக ஆனதும் தக்காளி, கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.
- தக்காளியில் இருக்கும் தண்ணீரே போதுமானது. மேலும்தேவையானால் 2 ஸ்பூன் தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்).
- காய் வெந்ததும் மஞ்சள் தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து பிரட்டி சிம்மில் வைக்கவும். அடுப்பில்லிருந்து எடுக்கும் மயத்தில் மிளகு தூள் சேர்த்து பிரட்டி எடுக்கவும்.