வீட்டிலேயே எளிமையான முறையில் மிக குறைவான பொருட்களை வைத்து சுலபமாக சுவையான பால் கேக் ஒருமுறை செய்து இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரைக்கும் கேக் என்று சொன்னாலே மிகவும் பிடிக்கும். கேக் விரும்பி சாப்பிடாதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஆனால் எப்பொழுதுமே நாம் கடைகளில் தான் கேக் வாங்கி சாப்பிட்டு இருப்போம். வீட்டிலேயே கேக் செய்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால் கேக் செய்வதற்கு நிறைய பொருட்கள் தேவைப்படும் என்பதாலேயே நாம் பெரும்பாலும் கடைகளிலேயே வாங்கி சாப்பிட்டு வருகிறோம்.

-விளம்பரம்-

வீட்டிலேயே எளிமையான முறையில் மிக குறைவான பொருட்களை வைத்து நம்மால் சுலபமாக கேக் செய்ய முடியும். யார் வேண்டுமானாலும் இந்த கேக்கை செய்யலாம். அவ்வளவு எளிமையான கேக் இது. வெறும் நாலு பொருட்களை வைத்து கேக் செய்யலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் வெறும் நாலு பொருட்களை வைத்து எளிமையாக சுவையாக செய்ய முடியும். அதுவும் நம் வீட்டிலேயே இருக்கக்கூடிய பொருட்களை வைத்து நம்மால் சூப்பராக ஒரு கேக் செய்ய முடியும்.

- Advertisement -

அதற்கு தேவைப்படும் ஒரு பொருள் என்றால் பால். பால் அன்றாடம் நம் வீட்டில் இருக்கக்கூடிய ஒரு பொருள்தான். எனவே சுலபமாக கிடைக்கக்கூடிய இந்த பாலை முதன்மையாக வைத்து பால் கேக் தான் நாம் செய்யப் போகிறோம். இந்த பால் கேக்கை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து கொடுத்தால் சட்டென்று காலியாகி விடும். அவ்வளவு ருசியாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் இந்த கேக்கை சாப்பிட்டுவிட்டு உங்களை கண்டிப்பாக பாராட்டுவார்கள். வாங்க இந்த எளிமையான பால் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

பால் கேக் | Milk Cake Recipe In Tamil

சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரைக்கும் கேக் என்று சொன்னாலே மிகவும் பிடிக்கும். கேக் விரும்பி சாப்பிடாதவர்கள்யாருமே இருக்க முடியாது. ஆனால் எப்பொழுதுமே நாம் கடைகளில் தான் கேக் வாங்கி சாப்பிட்டுஇருப்போம். வீட்டிலேயே கேக் செய்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும்.ஆனால் கேக் செய்வதற்கு நிறைய பொருட்கள் தேவைப்படும் என்பதாலேயே நாம் பெரும்பாலும் கடைகளிலேயேவாங்கி சாப்பிட்டு வருகிறோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: deserts
Cuisine: tamil nadu
Keyword: Milk Cake
Yield: 4
Calories: 345kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 லிட்டர் பால்
  • 1 கப் சர்க்கரை
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  • 2 முட்டை
  • 1/4 டீஸ்பூன் நெய்

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சி கொள்ள வேண்டும். இப்பொழுது அந்தப் பால் நன்கு ஆரிய உடன் முட்டை கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கலந்து கொண்டே இருக்க வேண்டும். சூடான பாலை ஊற்றி கிளறக் கூடாது பால் நன்கு ஆறிய உடன் தான் கிளற வேண்டும்.
  • எடுத்து வைத்துள்ள சர்க்கரையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடியாக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பால்முட்டை கலவையுடன் கொடுத்து வைத்துள்ள சர்க்கரையை போட்டு நன்கு கிளறவும் பின்பு ஏலக்காய்தூள் போட்டு கிளறி வைக்க வேண்டும்.
  • இப்பொழுது ஒரு குக்கரில் உள்ளே ஒரு சின்ன ஸ்டாண்டை வைத்து, குக்கரில் விசில் கேஸ் கட் என எதுவும் சேர்க்காமல் பத்து நிமிடத்திற்கு சூடாக்கிக் கொள்ள வேண்டும்.கேக் செய்யப் போகும் பாத்திரத்தில் சிறிதளவு நெய்யை தடவி அதற்குள் கலந்து வைத்துள்ள பால் முட்டை கலவையை சேர்க்க வேண்டும்.
  • இப்பொழுது குக்கர் நன்கு சூடான பிறகு அந்த பாத்திரத்தை ஸ்டேண்டின் மேல் வைத்து குக்கரை மூடி விட வேண்டும்.
  • ஒரு முப்பது நிமிடங்கள் நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான பால் கேக் தயார்.
  • மிகவும் சுலபமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் கேக்கை நீங்களும் ஒரு முறை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள் ‌

Nutrition

Serving: 250g | Calories: 345kcal | Carbohydrates: 13.5g | Cholesterol: 5.4mg | Sodium: 231mg | Potassium: 456mg | Calcium: 12mg

இதையும் படியுங்கள் : இந்த கிறிஸ்துமஸ்க்கு தித்திக்கும் சுவையில் பிளம் கேக் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்! வீட்டிலயே ரெம்ப சுலபமாக செய்து விடலாம்!