பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரிய சமையலில் சிறுதானியம் பயன்படுத்தும் முறை இருந்து வருகிறது. சிறுதானியங்களில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை அரிசி, ராகியை விட அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. கார்போஹைட்ரேட் மிக குறைவான அளவே இருக்கிறது. சிறுதானியங்களில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, கனிமச்சத்து, இரும்புச்சத்து மற்றும் பீட்டாகரோட்டின் நிறைந்திருக்கிறது. இவற்றில் வளமான புரதம் இருப்பதால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும்.
வாயு, கபத்தைப் போக்கும். எலும்புகள் நன்றாக உறுதியாகும். இதயத்தை பலப்படுத்தும். இந்த சிறுதானியங்களை நம் உணவோடு சேர்த்து வந்தால், நம்முடைய கண் பார்வை நன்றாக தெரியும். கூடவே நம்முடைய முடி வளர்ச்சியும் அதிகரிக்கும். உங்கள் நாளை ஒரு இனிப்புடன் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் சிறுதானிய இனிப்பு கஞ்சி செய்யுங்கள். இது ஒரு ஆரோக்கியமான உணவும் கூட. சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த சிறுதானிய கஞ்சி உடலில் சேரக்கூடிய சர்க்கரை அளவை தடுத்து நல்ல ஆரோக்கியமான உடல் எடையையும் பராமரிக்கச் செய்கிறது.
சிறுதானியங்களை குழந்தைகள் சாப்பிடுவதை தவிர்ப்பர். சுவையாக இருக்காது என்பர். ஆனால் அவற்றை அவர்களுக்கு பிடித்த விதத்தில் செய்து கொடுத்தால் சாப்பிடுவர். சிறுதானியங்களில் பல்வேறு வகையான ருசியான ரெசிபிகள் செய்யலாம். அந்த வகையில் சிறுதானிய உணவுகளில் ஒன்றான இனிப்பு கஞ்சி எப்படி செய்வது என்பது குறித்து பார்ப்போம். இந்த இனிப்பு கஞ்சி சுகர் பேஷண்ட்ஸ் மற்றும் உடல் எடை குறைப்பவர்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும். இந்த கஞ்சி செய்வது மிகவும் சுலபம். குறிப்பாக மாலை நேரங்களில் குழந்தைகள் பள்ளி விட்டு வரும் போது இதை உணவாக செய்து கொடுக்க ஏற்றதாக இருக்கும்.
சிறுதானிய இனிப்பு கஞ்சி | Millets Sweet Kanji Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 பால் பாத்திரம்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கப் தினை
- 1/4 கப் சாமை
- 1/4 கப் கம்பு
- 1/4 கப் கேழ்வரகு
- 1/2 கப் நாட்டு சர்க்கரை
- 1/4 கப் தேங்காய் துருவல்
- 1 கப் பால்
- 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
செய்முறை
- முதலில் தினை, கம்பு, சாமை, கேழ்வரகு ஆகியவற்றை சுத்தம் செய்து சிறிதளவு தண்ணீர் விட்டு 1 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
- பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு சுண்ட காய்ச்சிக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 கப் அரிசிக்கு 6 கப் தண்ணீர் விட்டு சிறுதானியங்களை சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளவும்.
- சிறுதானியம் முக்கால் பாகம் வெந்ததும் சர்க்கரை பாகு, பால் சேர்த்து நன்கு கலந்து விடவும். பின் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து அனைத்தும் ஒன்று சேர்ந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சிறுதானிய இனிப்பு கஞ்சி தயார். நல்லெண்ணெய் பிடித்தவர்கள் சிறுதானிய இனிப்பு கஞ்சி மேல் ஊற்றி சாப்பிடலாம் மிகவும் ருசியாக இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ஆரோக்கியமான சிறுதானிய அடை ஒரு முறை இப்படி செய்து பாருங்களேன்! வீட்டில் இருப்பவர்கள் வேணாம்னு சொல்லாம சாப்பிடுவாங்க!