பேக்கரி ஸ்டைல் மினி பாதுஷா இனி ரெம்ப சுலபமாப நம்ம வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்!

- Advertisement -

பொதுவான எல்லா பலகாரங்களுமே பேக்கரியில் தான் வாங்கி சாப்பிடுவோம் ஆனா இப்போ எல்லாம் அப்படி கிடையாது எல்லாரும் எல்லா விதமான பலகாரங்களையும் வீட்டிலேயே செய்யலாம். என்னதான் ஒரு சிலருக்கு லட்டு ஜிலேபி பால்கோவா னு இந்த மாதிரி ஸ்வீட்ஸ் எல்லாம் பிடிச்சாலும் ஒரு சிலர் பாதுஷா லவ்வர்ஸா இருப்பாங்க.

-விளம்பரம்-

அதுலயும் அந்த பாதுஷா அலையை மினி பாதுஷா நிறைய பேருக்கு பிடிக்கும் அந்த மினி பாதுஷா வாங்க நம்ம இனிமேல் கடைக்கு போக தேவை இல்லை வீட்டிலேயே சட்டுனு இந்த மினி பாதுஷாவை செஞ்சு முடிச்சிடலாம். டேஸ்ட்டும் ரொம்பவே அட்டகாசமா சாப்பிடுவதற்கு லேயர் லேயரா அட்டகாசமான டேஸ்ட்ல இருக்கும். ஒரு தடவை நீங்க இந்த பாதுஷாவை வீட்ல முயற்சி செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் எப்பவுமே நீங்க கடையில வாங்கியே சாப்பிட மாட்டாங்க டக்குனு வீட்ல செஞ்சு சாப்பிடுவைங்க.

- Advertisement -

இந்த பாதுஷா செய்வதற்கு நிறைய பொருட்கள் தேவைப்படுமோ அப்படி எல்லாம் பயப்பட தேவையில்ல ரொம்ப குறைவான பொருட்கள் வச்சு ரொம்ப சட்டுன்னு செஞ்சு முடிச்சிடலாம். இந்த பாதுஷா செய்வதற்கு இவ்வளவு பொருட்கள் தான் தேவையா? ரொம்ப கம்மியான நேரத்திலேயே செஞ்சு முடிச்சிடலாம் போலயே அப்படின்னு நீங்களே நினைப்பீங்க. மாலை நேரத்தில் ஸ்கூல் காலேஜ் முடிச்சு வர்ற உங்க குழந்தைகளுக்கு மட்டும் இதை செஞ்சு கொடுங்க ரொம்ப விரும்பி சாப்பிட்டு டியூஷன் போவாங்க. அவ்வளவு சூப்பரா இப்ப வாங்க இந்த சுவையான ரொம்ப டேஸ்ட்டா கடைகள்ல கிடைக்கக்கூடிய அதே மாதிரியான டேஸ்ல எப்படி மினி பாதுஷா செய்வது என்று பார்க்கலாம்

Print
5 from 1 vote

மினி பாதுஷா | Mini Badhusa Recipe In Tamil

பாதுஷா செய்வதற்கு நிறைய பொருட்கள் தேவைப்படுமோ அப்படி எல்லாம் பயப்பட தேவையில்ல ரொம்ப குறைவான பொருட்கள் வச்சு ரொம்ப சட்டுன்னு செஞ்சு முடிச்சிடலாம். இந்த பாதுஷா செய்வதற்கு இவ்வளவு பொருட்கள் தான் தேவையா? ரொம்ப கம்மியான நேரத்திலேயே செஞ்சு முடிச்சிடலாம் போலயே அப்படின்னு நீங்களே நினைப்பீங்க. மாலை நேரத்தில் ஸ்கூல் காலேஜ் முடிச்சு வர்ற உங்க குழந்தைகளுக்கு மட்டும் இதை செஞ்சு கொடுங்க ரொம்ப விரும்பி சாப்பிட்டு டியூஷன் போவாங்க. அவ்வளவு சூப்பரா இப்ப வாங்க இந்த சுவையான ரொம்ப டேஸ்ட்டா கடைகள்ல கிடைக்கக்கூடிய அதே மாதிரியான டேஸ்ல எப்படி மினி பாதுஷா செய்வது என்று பார்க்கலாம்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: deserts, sweets
Cuisine: tamil nadu
Keyword: Mini Badhusa
Yield: 2
Calories: 240kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் மைதா மாவு
  • 1 கப் சர்க்கரை
  • 2 ஏலக்காய்
  • 1 சிட்டிகை உப்பு
  • 1 டீஸ்பூன் பேக்கிங்பவுடர்
  • 2 டீஸ்பூன் தயிர்
  • 3 டீஸ்பூன் நெய்
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு டீஸ்பூன் தயிர் ஒரு சிட்டிகை பவுடர் மைதா மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்
  • பிறகு அதில் நெய் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் ஏலக்காயை இடித்து சேர்த்து சிறிது நேரம் நன்றாக கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து குட்டி குட்டி உருண்டைகளாக எடுத்து உருட்டி நடுவில் ஒரு சின்ன குழி போட்டு நன்றாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்
  • சிறிது ஆரிய பிறகு கரைத்து கொதிக்க வைத்துள்ள சர்க்கரை பாகில் சேர்த்து ஒரு மணி நேரம் கழித்து எடுத்து சாப்பிட்டால் சுவையான மினி பாதுஷா தயார்

Nutrition

Serving: 100g | Calories: 240kcal | Carbohydrates: 36g | Protein: 5.5g | Cholesterol: 1mg | Potassium: 104mg | Calcium: 2mg