இந்த 4 பொருட்கள் இருக்கும் இடத்தில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்! பணம் வீண் செலவு ஆகாவே ஆகாது!

- Advertisement -

இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் தான் பிறந்த நொடியில் இருந்து இறக்கும் நொடி வரைக்கும் இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த பூலோகத்தில் வாழ வேண்டும் என்றால் பணம் வேண்டும் அந்த பணம் இல்லாமல் ஒரு நொடி கூட வாழ முடியாது என்பதை தற்சமயம் இந்த உலகில் பலரும் புரிந்து கொண்டிருப்பார்கள். சிலர் கூறுவார்கள் பணம் என்பது இந்த உலகில் முக்கியமானது அல்ல அதைவிட குடும்பம் நட்பு என பல உள்ளது என்று ஆனால் பேசுவதற்கு இது சரியாக இருக்கும் ஆனால் நடைமுறை இது பொருந்தாது. ஆகையால் நம்மிடம் தடையில்லாமல் பணம் சேருவதற்கும் அப்படி சேர்ந்த பணம் வீண் விரயம் ஆகாமல் இருப்பதற்கும் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீக குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

நல்ல வழியில் சம்பாரிக்க

உலகில் பணம் இருந்தால் மட்டும் தான் வாழ முடியும் என்பதற்காக அந்த பணம் எந்த வழியில் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்று பலர் நினைப்பதுண்டு, ஏன் ஒரு சிலர் அந்த குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க கூட செய்வார்கள். ஆனால் நீங்கள் இப்படி சம்பாதிக்கும் பணம் ஒரு நாளும் உங்களிடம் நிலையாக இருக்காது. ஏதாவது ஒரு வழியில் இந்த பணம் உங்களை விட்டு சென்று விடும் அதனால் என்றைக்குமே நேர்வழியில் பணத்தை சம்பாதித்து நல்ல வழியில் செலவழிக்க வேண்டும். இப்படி நீங்கள் நல்ல வழியில் சம்பாதிக்கும் பணம் உங்கள் வீட்டில் பெருகிக்கொண்டே செல்வதற்காக ஒரு சில பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் போதும் அது என்னவென்று பார்க்கலாம் வாருங்கள்.

- Advertisement -

விநாயகர் சிலை

அப்படி நாம் சம்பாதிக்கும் பணம் நம்மிடம் பல மடங்காக பெருகிக்கொண்டே போக வேண்டும் என்றால் முதலில் நம்முடைய வீட்டில் விநாயகர் சிலை இருக்க வேண்டும் அப்படி நீங்கள் விநாயகர் சிலை வாங்கும் போது நம்முடைய கைவிரலில் அளவில் உள்ள விநாயகர் சிலை மட்டும்தான் வாங்கி வைக்க வேண்டும். அப்படி நீங்கள் வாங்கும் விநாயகர் சிலை பித்தளை, சொம்பு, வெள்ளி இப்படி எந்த விநாயகர் சிலையாக இருக்கலாம். ஆனால் பெரிய சிலைகளை மட்டும் வாங்கி வைக்க கூடாது ஏனென்றால் அதனை சரியான முறையில் பூஜை செய்து பராமரிக்க வேண்டும் இல்லையென்றால் உங்கள் வீட்டில் பல குழப்பங்களும், கஷ்டங்களும் மட்டும் நிலவும்.

இரண்டு யானை சிலை

உங்கள் வீட்டில் இரண்டு யானை பொம்மைகள் வாங்கி வைக்க வேண்டும் அப்படி நீங்கள் வாங்கி வைக்கும் யானை பொம்மை பூஜை அறைகள் தான் வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஒரு யானை பொம்மை மட்டும் வாங்கி வைக்கக்கூடாது நீங்கள் இப்படி இரண்டு யானை பொம்மையை வாங்கி உங்கள் பூஜை அறையில் நல்லது வீட்டில் வரவேற்பு அறையில் கூட வைக்கலாம். இப்படி வைக்கும் பொழுது உங்கள் வீட்டில் வாஸ்து சம்பந்தமான பிரச்சினைகள், அடுத்தவர்களால் ஏற்படும் கண் திருஷ்டி போன்றவை கூட உங்கள் பக்கத்தில் நெருங்காமல் பார்த்துக் கொள்ளும்.

ஆமை சிலை, காமதேனு சிலை

அடுத்ததாக ஒரு தட்டில் ஆமை சிலையை வைத்து நம் வீட்டிற்குள் வருவது போன்று வைக்க வேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டும் ஆமை சிலை வீட்டை விட்டு வெளியே போவது போன்று வைக்கக் கூடாது. இதை நீங்கள் வரவேற்பறையில் வைக்க வைத்துக் கொள்ளலாம். மேலும் இதே போல் பசுவும் கன்றும் ஒன்றாக இருப்பது போன்ற காமதேனு சிலையை வாங்கி வீட்டின் வரவேற்பு அறையில் வைக்கலாம் அனைத்து தேவர்களும், தெய்வங்களும் குடியிருக்கும் இடமாக பசு விளங்குகிறது. இந்த சிலை உங்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் உங்கள் வீட்டில் செல்வ வளங்களுக்கு பஞ்சம் இருக்காது.

-விளம்பரம்-

சுப செலவுகள்

நம்மிடம் பணம் சேர வேண்டும் என்றால் கண்டிப்பாக முறையில் உழைத்து தான் சம்பாதிக்க வேண்டும் ஆனால் அப்படி நீங்கள் உழைத்து சம்பாதிக்கும் பணம் மென்மேலும் பெருகிக்கொண்டே போக வேண்டும் என்பதற்காக நான் மேலே சொன்ன இந்த நான்கு சிலைகளையும் வாங்கி உங்கள் வீட்டில் மட்டும் வைத்து பாருங்கள் அதன் பிறகு பல வழிகளில் பணம் வந்து உங்களிடம் சேரும் பணம் வீண் செலவு ஆகாது அப்படியே நீங்கள் செலவு செய்வதாக இருந்தாலும் அது சுப செலவாக தான் இருக்கும் நம்பிக்கையுடன் இதையும் செய்து பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here