ருசியான பாசிப்பருப்பு சப்பாத்தி இப்படி செய்து பாருங்க! 2 அதிகமாவே சாப்பிடுவாங்க!

- Advertisement -

மக்கள் பெரும்பாலும் காலை உணவில் சுவையாக ஏதாவது சாப்பிட விரும்புகிறார்கள். அவ்வகையில் இந்த, பாசிப்பருப்பு பனீர் சப்பாத்தி செய்து  சாப்பிட சுவையுடன் ஆரோக்கியமும் கிடைக்கும். எளிமையான சப்பாத்தி நீங்கள் பலமுறை சாப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் , இந்த முறை பாசிப்பருப்பு பனீர் சப்பாத்தியை செய்து சாப்பிட்டு பாருங்கள், மிகவும் சுவையாக இருக்கும். இந்த ,பாசிப்பருப்புபனீர் சப்பாத்தி, குருமா, சட்னி, சாஸ் போன்ற அனைத்தும் இந்த சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சிறப்பாக இருக்கும். வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

-விளம்பரம்-
Print
5 from 1 vote

பாசிப்பருப்பு பனீர் சப்பாத்தி | Moong dal Paneer Chappathi

மக்கள் பெரும்பாலும் காலை உணவில் சுவையாக ஏதாவது சாப்பிட விரும்புகிறார்கள். அவ்வகையில் இந்த, மூங்தால் பனீர் சப்பாத்தி செய்து  சாப்பிடசுவையுடன் ஆரோக்கியமும் கிடைக்கும். எளிமையான சப்பாத்தி நீங்கள் பலமுறை சாப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் , இந்த முறை மூங்தால் பனீர் சப்பாத்தியை செய்து சாப்பிட்டு பாருங்கள், மிகவும் சுவையாக இருக்கும். இந்த ,மூங்தால் பனீர் சப்பாத்தி, குருமா, சட்னி, சாஸ் போன்ற அனைத்தும் தொட்டுக்கொள்ள சிறப்பாக இருக்கும். வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Breakfast
Cuisine: mumbai, tamil nadu
Keyword: Moongh Dal Paneer Chappathi
Yield: 4
Calories: 0.285kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 2 கப் கோதுமை மாவு
  • 3/4 கப் பாசிப்பருப்பு
  • 1 டேபிள்ஸ்பூன் நெய்
  • 2 டேபிள்ஸ்பூன் பனீர் துருவல்
  • 2 பச்சை மிளகாய்
  • 2 பூண்டு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • பாசிப்பருப்பை குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்து, ஆறியதும் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.  வாணலியில் எண்ணெய் விட்டு. பூண்டு – பச்சை மிளகாய் விழுதை நன்கு வதக்கவும்.
  • பிறகு,அரைத்த பாசிப்பருப்பு விழுது, பனீர் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். கோதுமை மாவில் நெய் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டவும்.
  • ஒரு சப்பாத்தியின் நடுவே பாசிப்பருப்பு – பனீர் கலவையை வைத்து அதன் மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து ஓரங்களை நன்கு ஒட்டி, தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

Nutrition

Serving: 1no | Calories: 0.285kcal | Carbohydrates: 35.6g | Protein: 12.2g | Fat: 10.4g | Sugar: 3.8g
- Advertisement -