இனி பூரி செய்தால் ருசியான பாசிப்பருப்பு பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி தான்!

- Advertisement -

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட இந்தியாவில் காய்கறி மசாலாவுடன் பரிமாறப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பூரி என்றால் கொள்ளை பிரியம். கடையில் விற்கும் பூரி ரொம்பவும் பிடிக்கும். கடையில் விற்கும் பூரி உப்பலாகவும், மிருதுவாகவும் இருக்கும். அதை சாப்பிட சாப்பிட ஆசையாக இருக்கும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : பூ போன்ற காஞ்சிபுரம் இட்லி இப்படி செய்து பாருங்க! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!

- Advertisement -

ஆனால் என்ன தான் நாம் முயன்றாலும் ஒரு சில சமயங்களில் மாவு சரியான பக்குவத்தில் இருப்பதாக தோன்றினாலும், என்ன தான் மாவை பிசைந்தாலும் கடையில் விற்கும் பூரி போல வராது. குழந்தைகள் சாப்பிட விரும்பும் பூரி சாஃப்டாகவும், உப்பலாகவும் இருந்தால் தான் பிடிக்கிறது. இல்லையென்றால் அவர்கள் முகம் ஏனோ கோனுகிறது. அவர்கள் விரும்பும் வகையில் சந்தான பாசிப்பருப்பு பூரி செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை மகிழ்வியுங்கள்.

Print
4 from 1 vote

பாசிப்பருப்பு பூரி | Moong Dal Poori Recipe in Tamil

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பூரி என்றால் கொள்ளை பிரியம். கடையில் விற்கும் பூரி ரொம்பவும் பிடிக்கும். கடையில் விற்கும் பூரி உப்பலாகவும், மிருதுவாகவும் இருக்கும்.ஆனால் என்ன தான் நாம் முயன்றாலும் ஒரு சில சமயங்களில் மாவு சரியான பக்குவத்தில் இருப்பதாக தோன்றினாலும், என்ன தான் மாவை பிசைந்தாலும் கடையில் விற்கும் பூரி போல வராது.அவர்கள் விரும்பும் வகையில் சந்தான பாசிப்பருப்பு பூரி செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை மகிழ்வியுங்கள்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian
Keyword: Poori
Yield: 4 People
Calories: 212kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பூரி கட்டை
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் பாசிப்பருப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் கோதுமை
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • உப்பு தேவையானஅளவு
  • 1 ஸ்பூன் கஸ்தூரி மேதி
  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • பொரிக்க எண்ணெய் தேவையானஅளவு

செய்முறை

  • முதலில் பாசிப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
  • ஊறிய பருப்பை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி 1/4 கப் தண்ணீர் விட்டு மைய அரைத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் அரைத்த பாசிப்பருப்பு, கோதுமை மாவு பின் மேலே கொடுத்துள்ள மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
  • பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5நிமிடங்கள் பிசையவும்.
  • பின்னர் 1ஸ்பூன் எண்ணெய் விட்டு லேசாக பிசைந்து விட்டு 30 நிமிடங்கள் ஊற விடவும்.
  • பின் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து சப்பாத்தி கட்டையால் தேவையான வடிவத்திற்கு விரித்து விடவும்.
  • அடுப்பில் வாணலி வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் விட்டு ஒவ்வொரு வட்டங்களாக போட்டு பொரித்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான். சுவையான பாசிப்பருப்பு பூரி ரெடி. இதற்கு உருளை மசாலா, சென்னா மசாலா மிகப் பொருத்தமாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 212kcal | Carbohydrates: 38.8g | Protein: 14.2g | Fat: 0.8g | Saturated Fat: 0.03g | Sodium: 4mg | Potassium: 547mg | Fiber: 14.5g | Sugar: 4g | Calcium: 80.6mg | Iron: 2.86mg