வீடே மணக்க மணக்க ருசியான முடக்கத்தான் கீரை சாம்பார் ஒரு தரம் இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் துணை புரிவது கீரைகள். பொதுவாக கீரைகளில் இரும்புச்சத்து நிறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது உணவில் கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். முடக்கத்தான் கீரையில் ஏராளமான வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்துள்ளன. இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முடக்கத்தான் கீரை உள்ளதா? இதுவரை முடக்கத்தான் கீரையை கொண்டு பொரியல் தான் செய்துள்ளீர்களா? அப்படியானால் அடுத்தமுறை முடக்கத்தான் கீரையை கொண்டு சாம்பார் செய்யுங்கள்.

-விளம்பரம்-

முடக்கத்தான் கீரையை பொரியலாக செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள குழந்தைகள் அல்லது ஒரு சில பெரியவர்களும் சாப்பிட மறுக்கலாம். ஆனால் இது போல சாம்பார் செய்து கொடுத்துப் பாருங்கள். நிச்சயமாக அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த முடக்கத்தான் கீரை சாம்பார் சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இந்த சாம்பார் சத்தானதும் கூட. ஏனெனில் முடக்கத்தான் கீரையில் உள்ள சத்துக்கள் அனைத்துமே இந்த சாம்பாரில் முழுமையாக இறங்கியிருக்கும். ஒருமுறை முடக்கத்தான் கீரையில் இப்படி சாம்பார் வைத்து சுடச்சுட சாதத்தில் இந்தக் குழம்பை போட்டு கொஞ்சமாக நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். சொல்லும் போதே மணக்க மணக்க வாசம் வீசும். இன்று இந்த முடக்கத்தான் சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

- Advertisement -
Print
5 from 1 vote

முடக்கத்தான் கீரை சாம்பார் | Mudakathan Keerai Sambar Recipe In Tamil

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் துணை புரிவது கீரைகள். பொதுவாக கீரைகளில் இரும்புச்சத்து நிறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது உணவில் கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். முடக்கத்தான் கீரையில் ஏராளமான வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்துள்ளன. இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முடக்கத்தான் கீரை உள்ளதா? இதுவரை முடக்கத்தான் கீரையை கொண்டு பொரியல் தான் செய்துள்ளீர்களா? அப்படியானால் அடுத்தமுறை முடக்கத்தான் கீரையை கொண்டு சாம்பார் செய்யுங்கள்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Mudakathan Keerai Sambar
Yield: 4 People
Calories: 20kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் முடக்கத்தான் கீரை
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 கப் துவரம் பருப்பு
  • 6 பல் பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3 டீஸ்பூன் சாம்பார் தூள்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் தேவையான அளவு
  • 1/4 கப் புளி கரைசல்
  • 1 துண்டு வெல்லம்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • கறிவேப்பில்லை, கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • முதலில் முடக்கத்தான் கீரையை சுத்தம் செய்து நன்கு அலசி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • துவரம் பருப்பை சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரில் சேர்த்து, அதனுடன் தக்காளி, பூண்டு, உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், விளக்கெண்ணெய் சேர்த்து இரண்டு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும், கடுகு, வெந்தயம், மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.
  • பின் புளி கரைசலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் கீரை மற்றும் ஒரு துண்டு வெல்லம் சேர்த்து வதக்கவும்.
  • அதன்பிறகு புளி வாசனை போனதும் வேகவைத்த பருப்பு கலவையை சேர்த்து கலந்து விடவும். பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும்.
  • சாம்பார் நன்கு கொதித்ததும் கடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான முடக்கத்தான் கீரை சாம்பார் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 20kcal | Carbohydrates: 3g | Protein: 8g | Fat: 1.39g | Sodium: 25mg | Potassium: 58mg | Fiber: 2g | Vitamin A: 141IU | Vitamin C: 71mg | Calcium: 99mg | Iron: 2.71mg

இதனையும் படியுங்கள் : பருப்பு சேர்த்து ருசியான சிவப்பு தண்டு கீரை கூட்டு ஒரு முறை இப்படி செய்து கொடுங்கள்! கீரை பிடிக்காதவர்கள் கூட சாப்பிடுவார்கள்!