தித்திக்கும் சுவையில் சூப்பரான முப்பருப்பு பாயாசம் ரெம்ப சுலபமாகவே செய்து பாருங்கள்!

- Advertisement -

முப்பருப்பு பாயாசமா அது என்ன அப்படின்னு நிறைய பேர் இந்நேரத்துக்கு யோசிக்க ஆரம்பிச்சிருப்பீங்க. பால் பாயாசம் ,பருப்பு பாயாசம் ,இளநீர் பாயாசம் , ஜவ்வரிசி பாயாசம்,அப்படின்னு நம்ம நிறைய பாயாசம் சாப்பிட்டிருப்போம். பருப்பு பாயசம் சாப்பிட்டிருக்கும் ஆனா இது என்ன முப்பருப்பு பாயாசம். அது வேற ஒன்னும் இல்லங்க மூணு பருப்புகள் சேர்த்து நம்ம செய்ய போற இந்த பாயாசத்துக்கு பேரு தான் முப்பருப்பு பாசம்.

-விளம்பரம்-

பாயசம் ரொம்ப தித்திப்பாக இருக்கிறது ஓட கொஞ்சம் ஆரோக்கியமாகவும் இருக்கிறதுக்காக இந்த மூன்று பருப்புகளையும் சேர்த்து நீங்க பாயாசம் செஞ்சீங்கன்னா ரொம்பவே ஆரோக்கியமானதாகவும் சுவையாகவும் ரொம்பவே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பாயசமாகவும் இருக்கும். நம்ம அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய பாசிப்பருப்பு துவரம் பருப்பு, கடலைப்பருப்பு இது மூலம் சேர்த்து தான் இன்னைக்கு நம்ம முப்பருப்பு பாயாசம் செய்ய போறோம்.

- Advertisement -

இந்த முப்பரிப்பு பாயாசம் ஒரு தடவை செஞ்சு கொடுத்தீங்க அப்படின்னா நம்ம வீட்டுல அடிக்கடி செய்யக்கூடிய பால் பாயசம் கூட நிறைய பேரு மறந்து போய்டுவாங்க அந்த அளவுக்கு இந்த முப்பருப்பு பாயாசம் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். வீட்ல குழந்தைகளுக்கு பிறந்தநாள் இல்ல உங்களுக்கு திருமண நாள் அப்படின்னு இருந்துச்சுன்னா எப்பவும் செய்ற மாதிரி கேசரி பாயாசம் சிம்பிளா செய்யாமல் குழந்தைகளுக்கும் பெரியவங்களுக்கும் ஆரோக்கியமாக இருக்கக்கூடிய இந்த முப்பருப்பு பாயசத்தை செஞ்சு கொடுங்க.

வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் கூட இந்த மூன்று பருப்பையும் போட்டு பாயாசம் செஞ்சு கொடுத்தீங்க அப்படின்னா என்ன இது டிஃபரண்டான டேஸ்ட் இருக்கே ஆனா சூப்பரா இருக்கு அப்படின்னு உங்கள பாராட்டிட்டு போவாங்க. அந்த அளவுக்கு ரொம்பவே சுவையான ஆரோக்கியமான இந்த முப்பருப்பு பாயாசம் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

Print
5 from 1 vote

முப்பருப்பு பாயாசம் | Mupparuppu Payasam Recipe In Tamil

பாயசம் ரொம்ப தித்திப்பாக இருக்கிறது ஓட கொஞ்சம் ஆரோக்கியமாகவும் இருக்கிறதுக்காக இந்த மூன்று பருப்புகளையும்சேர்த்து நீங்க பாயாசம் செஞ்சீங்கன்னா ரொம்பவே ஆரோக்கியமானதாகவும் சுவையாகவும் ரொம்பவேவிரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பாயசமாகவும் இருக்கும். நம்ம அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடியபாசிப்பருப்பு துவரம் பருப்பு, கடலைப்பருப்பு இது மூலம் சேர்த்து தான் இன்னைக்கு நம்ம முப்பருப்பு பாயாசம் செய்ய போறோம். அந்த அளவுக்கு ரொம்பவே சுவையான ஆரோக்கியமான இந்த முப்பருப்பு பாயாசம் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: deserts
Cuisine: tamil nadu
Keyword: Mupparuppu Payasam
Yield: 4

Equipment

  • 1 அகலமான பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பாசிப்பருப்பு
  • 1/2 கப் துவரம் பருப்பு
  • 1/2 கப் கடலை பருப்பு
  • 2 கப் வெல்லம்
  • 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 3 ஏலக்காய்
  • 10 முந்திரி
  • 10 திராட்சை
  • 2 டீஸ்பூன் நெய்
  • 1 டேபிள் ஸ்பூன் பச்சரிசி

செய்முறை

  • பச்சரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து அதனுடன் ஏலக்காயையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கொதிக்க வைக்கவும் ஆறிய உடன் வடிகட்டி மறுபடியும் அதை பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
  • வேகவைத்து எடுத்து வைத்துள்ள பருப்புகளை இந்த வெல்லத்துடன் சேர்த்து கிளற வேண்டும்.
  • தேங்காய் துருவல் அரைத்து வைத்துள்ள பச்சரிசி கலவை அனைத்தையும் சேர்த்து கிளறி பத்து நிமிடங்கள்கொதிக்க வைக்கவும்
  • முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து இறுதியாக சேர்த்து இறக்கினால் சுவையான முப்பருப்பு பாயாசம்தயார்.

Nutrition

Serving: 300g | Carbohydrates: 43g | Cholesterol: 12mg | Sodium: 234mg | Potassium: 232mg | Calcium: 12mg

இதையும் படியுங்கள் : தீபாவளி ஸ்பெஷல் தேங்காய் சேர்த்த பருப்பு பாயாசம் இப்படி செய்து சாப்பட கொடுங்க அமிர்தமாக இருக்கும்!

-விளம்பரம்-