மதிய உணவுக்கு ருசியான முருங்கை கறி குழம்பு இப்படி செய்து பாருங்கள்!

murungai kari kulambu
- Advertisement -

நீங்கள் அசைவ பிரியர்களா? உங்களுக்கு மட்டன் ரொம்ப பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது அட்டகாசமான சுவையில் முருங்கைக்காய் போட்டு மட்டன் குழம்பு இப்படி செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.

-விளம்பரம்-

எப்படி இந்த குழம்பு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -
Print
No ratings yet

முருங்கை கறி குழம்பு | Murungai Kari Kulambu Recipe In Tamil

நீங்கள் அசைவ பிரியர்களா? உங்களுக்கு மட்டன் ரொம்ப பிடிக்குமா? அப்போ உங்களுக்கான பதிவு தான் இது அட்டகாசமான சுவையில் முருங்கைக்காய் போட்டு மட்டன் குழம்பு இப்படி செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.
எப்படி இந்த குழம்பு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time21 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: murungai kari kulambu, முருங்கை கறி குழம்பு
Yield: 4 people

Equipment

  • கடாய்

தேவையான பொருட்கள்

  • ¼ கிலோ மட்டன்
  • 1 முருங்கை காய்
  • 2 தக்காளி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  • ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 4 டீஸ்பூன் மல்லித்தூள்
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க:

  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 அன்னாசிப்பூ
  • 1 பிரிஞ்சி இலை
  • 1 கிராம்பு
  • வெங்காயம் பெரியது

அரைக்க:

  • இஞ்சி கொஞ்சம்
  • 5 பல் பூண்டு
  • ½ டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் கசகசா
  • 10 மிளகு
  • 1 பட்டை
  • 1 கிராம்பு

தனியாக அரைக்க;

  • 2 சில் தேங்காய்

செய்முறை

  • முதலில் குக்கரில் கறியைப் போட்டு அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்து சேர்த்து சிறிது மஞ்சள் தூள், சிறிது எண்ணெய் சேர்த்து குக்கரில் 3 விசில் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • வேக வைத்துள்ள கறியுடன் ஒரு டம்பளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
  • நறுக்கி வைத்துள்ள முருங்கைக்காய், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், முதலியவற்றை போடவும்.
  • அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு, ஆகியவற்றை சேர்க்கவும்.
  • நன்கு கொதிக்க வைக்கவும்.
  • ஒரு வாணலில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
  • பிறகு தனியாக அரைத்து வைத்துள்ள தேங்காயை அதனுடன் சேர்த்து தாளித்து கொதிக்கும் குழம்பில் ஊற்றவும்.
  • இப்பொழுது சுவையான முருங்கை கறி குழம்பு தயார்.