Home சைவம் எப்பவும் முருங்கை கீரையில் பொரியல் மட்டுமே செய்யாமல் ஒரு தடவை டிஃபரண்டா சாம்பார் செஞ்சு பாருங்க!

எப்பவும் முருங்கை கீரையில் பொரியல் மட்டுமே செய்யாமல் ஒரு தடவை டிஃபரண்டா சாம்பார் செஞ்சு பாருங்க!

முருங்கை கீரை நம்ம உடம்புக்கு ரொம்ப சத்துக்களை கொடுக்க கூடியது. இந்த முருங்கைக் கீரையை நம்ம 48 நாள் சாப்பிட்டு வந்தோம் அப்படினா இன்னும் உடம்பில் இருக்கிற எல்லா பிரச்சனைகளுமே சரியாகி நம்ம உடம்பு ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும் அப்படின்னு சொல்லுவாங்க. நம்ம ஹாஸ்பிடல் போகாம ரொம்பவே ஹெல்த்தியா இருக்க இந்த முருங்கைக்கீரை நமக்கு ஹெல்ப் பண்ணும்.

-விளம்பரம்-

சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே முருங்கை கீரை கொடுக்கலாம் அதுல அவ்வளவு சத்துக்கள் அடங்கி இருக்கு. இந்த முருங்கைக்கீரை வச்சு நம்ம எப்பவுமே பொரியல் சூப் இப்படித்தான் செஞ்சிருக்கோம் ஆனா ஒரு தடவை வித்தியாசமா முருங்கைக்கீரை வச்சு சாம்பார் செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் அதுக்கு அப்புறம் நீங்க உங்க வீட்ல அடிக்கடி இந்த முருங்கைக்கீரை சாம்பார் வச்சு சாப்பிடுவீங்க அந்த அளவுக்கு சூப்பரான டேஸ்ட்ல இருக்கும் இந்த முருங்கைக்கீரை சாம்பார் வைச்சா அதுக்கு சைட் டிஷே தேவை இல்லை சுட சுட சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடலாம் ரொம்ப சூப்பரா இருக்கும்.

வாரத்துக்கு ஒரு தடவை இந்த முருங்கைக்கீரை சாம்பார் வைங்க கண்டிப்பா உடலுக்கு ரொம்பவே நல்லது. வணக்கம் வணக்கம் இந்த முருங்கைக்கீரை சாம்பார் வச்சு சாப்பிட்டு பார்த்தீர்களா சொர்க்கமா இருக்கும். சாம்பாரை பிடிக்காதவங்க கூட இந்த முருங்கைக்கீரை சாம்பார ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க ரொம்ப சட்டுனு ஒரு 15 நிமிஷத்துல இந்த சாம்பார் செஞ்சு முடிச்சிடலாம். வாங்க இப்ப இந்த முருங்கைக்கீரை சாம்பார் எப்படி டேஸ்ட்டா மணமா வைக்கிறது என்று பார்க்கலாம்.

Print
4 from 1 vote

முருங்கை கீரை சாம்பார் | Murungai Keerai sambar In Tamil

சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே முருங்கை கீரை கொடுக்கலாம் அதுல அவ்வளவுசத்துக்கள் அடங்கி இருக்கு. இந்த முருங்கைக்கீரை வச்சு நம்ம எப்பவுமே பொரியல் சூப்இப்படித்தான் செஞ்சிருக்கோம் ஆனா ஒரு தடவை வித்தியாசமா முருங்கைக்கீரை வச்சு சாம்பார்செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் அதுக்கு அப்புறம் நீங்க உங்கவீட்ல அடிக்கடி இந்த முருங்கைக்கீரை சாம்பார் வச்சு சாப்பிடுவீங்க அந்த அளவுக்கு சூப்பரானடேஸ்ட்ல இருக்கும் இந்த முருங்கைக்கீரை சாம்பார் வைச்சா அதுக்கு சைட் டிஷே தேவை இல்லைசுட சுட சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடலாம் ரொம்ப சூப்பரா இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Murungai Keerai sambar
Yield: 4
Calories: 328kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கைப்பிடி முருங்கைகீரை
  • 100 கிராம் துவரம் பருப்பு
  • 2 தக்காளி
  • 15 சின்ன வெங்காயம்
  • 4 பல் பூண்டு
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 டேபிள்ஸ்பூன் சாம்பார்தூள்
  • சிறிய நெல்லிக்காய் அளவு புளி
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 2 பச்சை மிளகாய்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • ஒரு குக்கரில் துவரம் பருப்பை கல்வி சேர்த்துக்கொண்டு அதனுடன் தக்காளியை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்துஇரண்டு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு கருவேப்பிலை சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளவும்
  • பிறகு அதனுடன் சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்
  • அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு வேக வைத்துள்ள பருப்பை சேர்த்துக் கொள்ளவும்
  • அதனுடன் சாம்பார்தூள் உப்பு மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்
  • இப்பொழுது முருங்கைக் கீரையை சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான முருங்கைக்கீரைசாம்பார் தயார்

Nutrition

Serving: 400g | Calories: 328kcal | Carbohydrates: 79g | Protein: 23g | Sodium: 6.9mg | Potassium: 1.7mg | Fiber: 1g | Vitamin C: 7.9mg | Calcium: 7mg | Iron: 2mg

இதையும் படியுங்க : ருசியான இந்த கோவைக்காய் சாம்பார் வச்சு பாருங்க. சாம்பார்ன்னா இப்படித்தான் இருக்கணும்னு எல்லோரும் உங்கள பாராட்டுவாங்க!!!